News March 14, 2025

சிபிஐ முன்னாள் இயக்குநர் காலமானார்

image

மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) முன்னாள் இயக்குநர் ஆர்.சி.சர்மா காலமானார். ஹரியானாவின் 1963 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், பின்னர் மத்திய உள்துறைக்கு மாற்றப்பட்டார். 1997-98 காலகட்டத்தில் சிபிஐயின் இயக்குநராக இருந்தார். இந்திய அரசியலில் புயலைக் கிளப்பிய போபர்ஸ் ஊழல், பங்குச்சந்தை ஊழல், சாமியார் சந்திராசாமி தொடர்புடைய வழக்கு உள்ளிட்டவற்றை விசாரித்ததில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

News March 14, 2025

கடனை உயர்த்தியதே திமுகவின் சாதனை: வானதி விமர்சனம்

image

TNன் கடன் சுமையை 10 லட்சம் கோடி ரூபாயை நோக்கி உயர்த்தியது தான் திமுக அரசின் சாதனை என பாஜக விமர்சித்துள்ளது. பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன், 2026, மார்ச் இறுதியில் TNன் கடன் 9 லட்சம் கோடியை கடந்திருக்கும். இந்தச் சூழலில் நடப்பு நிதியாண்டில் மேலும் ஒரு லட்சம் கோடி அளவுக்கு கடன் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், கடன்சுமை 10 லட்சம் கோடியாகும் என சாடியுள்ளார்.

News March 14, 2025

இது ஏஐ கலாட்டா…. உலகத் தலைவர்களின் ஹோலி…!

image

ஒவ்வொரு துறையிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. நாம் கற்பனை செய்து பார்ப்பதை கண்முன் கொண்டுவருவது மட்டுமின்றி, கற்பனை கூட செய்ய முடியாத விஷயங்களையும் ஏஐ சாத்தியப்படுத்துகிறது. அந்த வகையில், இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுவரும் நிலையில், உலகத் தலைவர்கள் ஹோலி கொண்டாடி இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கும் உயிர் கொடுத்திருக்கிறது ஏஐ.

News March 14, 2025

நடிகையின் ஜாமின் மனு தள்ளுபடி

image

துபாயில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தியதாக கைதான நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு ஜாமின்கோரி, பொருளாதார குற்றங்களுக்கான கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை இன்று பரிசீலித்த கோர்ட், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் 2ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தருண் கொண்டுருவின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

News March 14, 2025

மீனவர்களுக்கு ரூ.8,000 மானியம் அறிவிப்பு

image

தமிழக பட்ஜெட்டில் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் பங்களிப்பான ரூ.1,500 மற்றும் மாநில அரசின் கூடுதல் பங்களிப்பான ரூ.6,500 என மொத்தம் ரூ.8,000 நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக மீட்கப்படாத விசைப் படகுகளுக்கான நிவாரணம் ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

News March 14, 2025

மீனவர்களுக்கான சூப்பர் அறிவிப்புகள்!

image

தமிழக பட்ஜெட்டில் மீனவர்களுக்காக பல்வேறு அசத்தலான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. •கடல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க ஆய்வுத் திட்டங்கள் •இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு தினசரி நிவாரணம் ரூ. 500. •இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கான நிவாரண தொகை ரூ. 2 லட்சமாக உயர்வு போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளன.

News March 14, 2025

பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி

image

பலுசிஸ்தானில் நடந்த ரயில் கடத்தலுக்கும், இந்தியாவுக்கும் தொடர்பிருக்கலாம் என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பதை உலகம் அறியும் என்று இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். பிறர் மீது பழி சொல்லும் முன், பாகிஸ்தான் தன்னை முதலில் உற்று நோக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News March 14, 2025

மாதம் ரூ.5,000 திட்டம்… 17ஆம் தேதி செயலி அறிமுகம்

image

பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து மாதம் ரூ.5,000, ஒரு முறை ரூ.6,000 மத்திய அரசு கொடுக்கிறது. இதில் சேர வருகிற 31ஆம் தேதி கடைசி நாள். இதில் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க கணினியை மட்டும் மக்கள் நம்பி இருந்தனர். இதை எளிதாக்கும் வகையில், 17ம் தேதி புதிய செயலியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்யவுள்ளார்.

News March 14, 2025

ரசிகர்களின் அன்பால் உருகிய ‘டிராகன்’ நாயகி…!

image

ரீல்ஸ், ஷார்ட்ஸ் என சோஷியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் நடிகை கயாடு லோஹர்தான் இருக்கிறார். டிராகன் பட வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், டிராகன் படம் எனது வாழ்க்கையை மாற்றி இருப்பதாக கயாடு உருக்கமாக பதிவிட்டுள்ளார். ‘என் மீது நீங்கள் பொழிந்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. இந்த அன்பு விலைமதிப்பற்றது’ என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

News March 14, 2025

டிரம்ப் வைத்த ஆப்பு.. மஸ்கிற்கு பேக்ஃபயர் ஆன சோகம்

image

டிரம்பின் அதிரடி வரிவிதிப்பு நடவடிக்கைகள், எலான் மஸ்கிற்கு எதிராகவே திரும்பியுள்ளன. டிரம்புக்கு போட்டியாக, USA இறக்குமதிகளுக்கு மற்ற நாடுகளும் அதிகம் வரி விதிக்க தொடங்கினால், அது டெஸ்லா நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் டெஸ்லா EV கார்களின் உற்பத்தி விலை அதிகரிப்பதோடு, சர்வதேச சந்தையில் போட்டியை எதிர்கொள்வது கடினமாகும் என அந்நிறுவனம், டிரம்ப் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளது.

error: Content is protected !!