News March 14, 2025

பட்ஜெட்டை பாராட்டி தள்ளிய விஜய்!

image

தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சித்திருந்த போதிலும், அதிலுள்ள சில அம்சங்களை<<15759887>> விஜய் <<>>மனதார பாராட்டியும் இருக்கிறார். தமிழகம் முழுவதும் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை, பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, ரூ.10 லட்சம் மதிப்பிலான சொத்துகளை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத்தொகையில் சலுகை போன்ற அறிவிப்புகளை மனதார வரவேற்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

லக்கி பாலாஜி.. செந்தில் பாலாஜியை கிண்டலடித்த டி.ஜெ.

image

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக ED குற்றஞ்சாட்டியதை வைத்து, பணமழையில் செந்தில் பாலாஜி குளிப்பது போன்ற படத்தை ‘லக்கி பாலாஜி’ என தலைப்பிட்டு ஜெயக்குமார் பகிர்ந்துள்ளார். பாட்டிலுக்கு 10 ரூபாய் என ஆரம்பித்து பல்லாயிரம் கோடிகளில் ஊழல்!, மக்களை போதைக்கு அடிமையாக்கி, பணமாக்கிய பாவத்தின் விளைவை விரைவில் உணர்வீர்கள்! வீழ்வீர்கள்! என ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.

News March 14, 2025

இணையும் புதன் – சுக்கிரன்: மிரட்ட போகும் 3 ராசிகள்!

image

மார்ச் 13ஆம் தேதி புதனும், சுக்கிரனும் மீன ராசியில் இணைந்துள்ளனர். அதே நாளில், சூரிய பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த இரு விசேஷ நிகழ்வுகளால் மேஷம், விருச்சிகம், சிம்மம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகிறது. எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றி உண்டாகும். கவலைகளை சிதறடிப்பீர்கள். தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியம் மேம்படும். காதல் திருமணம் கைக்கூடும்.

News March 14, 2025

IPL: பும்ரா இல்லாத MI? ஷாக் தகவல்

image

காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், IPLல்லின் முதல் சில மேட்ச்களில் பும்ரா விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. BCCI மெடிக்கல் டீம் கிளியரன்ஸ் கொடுத்தால் மட்டுமே அவர் வரும் ஏப்ரலில் MI அணிக்கு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. எத்தனை மேட்ச்களில் பும்ரா விளையாடமாட்டார் என்பதும் இன்னும் தெரியவரவில்லை. AUSக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

News March 14, 2025

ஆப்கான் கிரிக்கெட் வீரருக்கு சோகம்… தாங்க முடியாத இழப்பு!

image

அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை உற்சாகப்படுத்துபவர் ஆப்கான் கிரிக்கெட் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய். ஆனால், அவரது வீட்டில் நடந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹஸ்ரத்துல்லாவின் 2 வயது மகள் உயிரிழந்துள்ளதாக, சக வீரர் கரிம் ஜனத் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பிஞ்சுக் குழந்தையின் படத்தைப் பதிவிட்ட அவர், இத்தகைய கடினமான நேரத்தில் இதயம் சோகத்தில் மூழ்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

News March 14, 2025

மார்ச் 28-ல் தவெக பொதுக்குழு – அழைப்பு விடுத்த விஜய்!

image

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி களமாடி வருகிறார் தவெக தலைவர் விஜய். கட்சியில் இதுவரை 114 மா.செ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், உட்கட்டமைப்பு நிர்வாகிகள் நியமனத்திற்கான ஒப்புதலை பெற்று தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்காக, மார்ச் 28-ல் தவெக பொதுக்குழு நடைபெறும் என அறிவித்த விஜய், நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

News March 14, 2025

குட் பேட் அக்லி இன்னொரு பாட்ஷாவா? – கதை இதுதானாம்!

image

அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், படத்தின் கதை என்னவென்று இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது, கொடூரமான டானாக இருந்த AK, வன்முறையை கைவிட்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்புகிறாராம். ஆனால், கடந்த காலத்தில் செய்த செயல்கள் அவரை மீண்டும் துரத்துகிறதாம். அதனை ஏகே எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை என சொல்லப்படுகிறது. பாட்ஷா படம் மாதிரி இருக்குல்ல…

News March 14, 2025

ஸ்மார்ட் மீட்டர் எப்படி செயல்படும் தெரியுமா? (1/2)

image

தற்போது வீடுகளில் இருப்பவை டிஜிட்டல் எல்க்ட்ரிசிட்டி மீட்டர் ஆகும். இதை மாற்றிவிட்டு, தமிழகம் முழுவதும் 3.05 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த தமிழக அரசு திட்டமிட்டு, டெண்டர் கோரியுள்ளது. மின்சார வாரியத்தில் நிலவும் ஆள் பற்றாக்குறையால், 2 மாதங்களுக்கு ஒருமுறை தற்போது மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால், தானாகவே மின் பயன்பாட்டை அந்த மீட்டர் கணக்கிடும்.

News March 14, 2025

ஸ்மார்ட் மீட்டர் எப்படி செயல்படும் தெரியுமா? (2/2)

image

மாத கடைசியில் மின்பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர், அதை பில்லாக்கி, மின்சார வாரியத்தில் பயனாளர்கள் அளித்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கும். அதில் கட்ட வேண்டிய தொகையுடன், கட்டணத்தை செலுத்த வேண்டிய கடைசி தேதியும் இருக்கும். இதுபோல மாதா மாதம் ஸ்மார்ட் மீட்டர் பில்லை உருவாக்கி, எஸ்எம்எஸ்ஆக அனுப்பும். இதன்மூலம் மாதந்தோறும் கணக்கெடுப்பு முறை அமலாகும்.

News March 14, 2025

WPL FINAL: ‘மனோகரி’-யின் மாஸ் பெர்ஃபார்மன்ஸ்

image

மகளிர் ப்ரீமியர் லீக் ஃபைனலில் டெல்லியும், மும்பையும் நாளை மோத உள்ளன. இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகை நோரா பதேகி டான்ஸ் ஆட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பிறந்து, பாலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் நோரா, பாகுபலி படத்தில் மனோகரி பாடலிலும் நடனமாடியுள்ளார். கிளாமரில் தாராளம் காட்டும் அவரது பெர்ஃபாமன்ஸை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

error: Content is protected !!