India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உக்ரைன் போரை நிறுத்த நல்ல வாய்ப்பு அமைந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்ததாகவும், ரஷ்ய வீரர்களால் சூழப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களை எதுவும் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் நேற்று புடினைச் சந்தித்து பேசிய நிலையில், டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கத்தில் IPLபோட்டிகள் நடைபெறும்போது, போட்டியை காணச் செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது மாநகர பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட்டை வைத்து, போட்டி தொடங்குவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்பு மட்டுமே பேருந்துகளில் (NON AC) பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா, 1931ஆம் ஆண்டு இதேநாளில் (மார்ச் 14) வெளியானது. ஹிந்தியில் வெளியான இந்த படத்தை அர்தேஷிர் இரானி என்பவர் இயக்கி தயாரித்து வெளியிட்டார். பார்சி மொழி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட ஆலம் ஆரா படத்தின் நீளம் 124 நிமிடங்கள். ஆலம் ஆரா என்பதற்கு உலகத்தின் ஆபரணம் என்பது பொருள். நாட்டின் முதல் முழு நீளத் திரைப்படம் 1913-ல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற மௌன படமாகும்.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை விவகாரத்தில் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். தனது கட்சி விழாவில் தமிழ், கன்னடம், மராத்தி, ஹிந்தி மொழிகளில் பேசியவர், ஏன் இத்தனை மொழிகளில் பேசுகிறேன் என கேட்டார். தொடர்ந்து, தமிழ்நாடு மட்டுமல்ல, தேசத்திற்கே பல மொழிகள் தேவை எனவும், அப்போதுதான் ஒரு மாநிலத்தவரை, பிற மாநிலத்தவர் புரிந்து கொண்டு அன்பை பரிமாறிக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. மேலும் சில மாநிலங்களில் நாளை (மார்ச் 15) கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாளை நடைபெறவுள்ள சிபிஎஸ்இ இந்தித் தேர்வுகளில் அந்த மாநில மாணவர்களால் பங்கேற்க முடியாது. அத்தகைய மாணவர்கள் பயப்படத் தேவையில்லை, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வுகளின்போது இவர்கள் அந்த தேர்வுகளை எழுதலாம் எனக் கூறியுள்ளது.
கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் ஷா, 1837இல் ஆங்கிலேயர்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். பின்னர் 1857இல் சிப்பாய் புரட்சிக்கு காரணமென ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டு 1862இல் உயிரிழந்தார். அவரின் கொள்ளுப் பேத்தியான சுல்தானா பேகம், காெல்கத்தா அருகே குடிசை வீட்டில் வசிக்கிறார். அரண்மனையில் வாழ வேண்டிய அவர், தற்போது வறுமையில் வாடுகிறார். அவருக்கு அரசு உதவியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
மற்ற ஸ்மார்ட்ஃபோன்களை ஒப்பிடுகையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் பாதுகாப்பு அம்சங்கள் மிக்கவை என பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஒரு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐபோன்களையும், ஐபேடுகளையும் வைத்திருப்பவர்கள் அவற்றை உடனடியாக அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. சைபர் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக இதை செய்யுமாறு அது அறிவுறுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு, ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை படக்குழு வெளியிட்டுள்ளது. நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரின் மாஸ் கெட்டப், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. அதேபோல், இப்படத்தில் நடிக்கும் அமீர்கானுக்கும் இன்று பிறந்தநாள் என்பதால், அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட போட்டோவை லோகேஷ் பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்து பேட்மின்டன் தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி காலிறுதிக்கு முன்னேறி இருந்தார் இந்திய இளம் நட்சத்திரம் லக்ஷயா சென். காலிறுதியில் சீன வீரர் லி ஷி ஃபெங்கை எதிர்கொண்ட அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 10-21 என்ற கணக்கில் முதல் செட்டையும், 16- 21 என்ற கணக்கில் அடுத்த செட்டையும் பறிகொடுத்து லக்ஷயா சென் தோல்வியடைந்தார். இதன்மூலம், தொடரில் இருந்து அவர் வெளியேறியுள்ளார்.
RSS, பாஜகவை மன்னிக்க மாட்டேன், சொன்ன கருத்துக்களையும் திரும்ப பெற மாட்டேன் என காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார். RSS- பாஜக உள்நாட்டு எதிரிகள், துரோகிகள், ஆபத்தானவர்கள் என துஷார் விமர்சித்து இருந்தார். மேலும், அவர்களை எதிர்ப்பது விடுதலை போராட்டத்தை விட முக்கியமானது என கூறியிருந்தார். இந்த கருத்துகளுக்காக துஷாரைக் கைது செய்ய பாஜக வலியுறுத்தியிருந்தது.
Sorry, no posts matched your criteria.