News August 16, 2025

இன்று இதை செய்தால், 1 கோடி பிறவி பலனை அடையலாம்!

image

இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சாஸ்திரங்களின் படி, கோயிலில் அஷ்டோத்திர பூஜை செய்து கிருஷ்ணரை வழிபட்டால், ஒரு கோடி பிறவிகளின் பலனை அடையலாம் என நம்பப்படுகிறது. இது குடும்பத்தின் செல்வ செழிப்பை அதிகரித்து, அனைவருக்கும் புண்ணியம் கிடைக்க செய்யும் எனவும் கூறப்படுகிறது. இப்பூஜையை செய்ய முடியாதவர்கள், கிருஷ்ணரை மனதார வழிபட்டாலே, அனைத்து பாவங்களும் கழிந்துவிடும். SHARE IT.

News August 16, 2025

வரவழைத்து சந்திப்பது சரி அல்ல: பிரேமலதா விமர்சனம்

image

விஜய் முதலில் களத்திற்கு வரட்டும், வீட்டிற்குள் இருந்துகொண்டு அரசியல் செய்ய முடியாது என பிரேமலதா தெரிவித்துள்ளார். போராடுபவர்களை களத்தில் சந்திக்காமல் வரவழைத்து சந்திப்பது சரியல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார். விஜயகாந்தை, விஜய் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டால் அவரது போட்டோவை பயன்படுத்த தவெகவுக்கு அனுமதி அளிப்பதாக பிரேமலதா தெரிவித்திருந்தார். தற்போது விஜய்யை விமர்சித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

News August 16, 2025

கால்களை வலுவாக்கும் உட்கட்டாசனம்!

image

✦கால்களை பலப்படுத்தவும், மூச்சுக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகிறது.
➥பாதங்களை அருகருகே வைத்து, நேராக நிற்கவும். மூச்சை உள்ளிழுத்து, கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும்.
➥கைகளை உயர்த்தும் போது, இடுப்பை Chair போன்ற நிலைக்கு, கீழே இறக்கவும்.
➥இந்த நிலையில் 20 விநாடிகள் இருந்து விட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும்.

News August 16, 2025

நடிகை கஸ்தூரி தேர்தலில் போட்டி?

image

நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். விரைவில் 2026 தேர்தல் வரவுள்ள நிலையில், அதில் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தான் நினைக்கவில்லை என்று கஸ்தூரி கூறியுள்ளார். அத்துடன், திமுகவை வீழ்த்த அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமகவும் இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

News August 16, 2025

திமுகவின் காலை உணவுத்திட்டம் தோல்வி: சீமான்

image

அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் திமுக தவறிவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார். இதன் விளைவாக தான் 207 பள்ளிகள் மூடப்படதாகவும் கூறினார். காலை உணவுத் திட்டம் துவங்கிய பின் அரசுப்பள்ளிகள் மூடப்படுவது அத்திட்டத்தின் தோல்வியை காட்டுவதாகவும், தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வி தரத்தை அரசுப்பள்ளிகள் தரமுடியாமல் போனது திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் தோல்வி என்றார்.

News August 16, 2025

சமூகநீதி பேச திமுகவுக்கு தகுதியில்லை: தமிழிசை

image

தமிழகத்தில் CM ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுவது இதுவே கடைசி என்றும், மீண்டும் அவர் முதல்வராக வரமாட்டார் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தியதை பார்க்கும் போது சமூகநீதி பேச திமுகவுக்கு தகுதியே இல்லை என்றார். மேலும் தான் தென்சென்னையில் போட்டியிட்ட போது 20,000 வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் பாஜகவுக்கான வாக்குகள் என்றும் கூறினார்.

News August 16, 2025

கிருஷ்ண ஜெயந்தியில் இந்த தவறுகளை பண்ணிடாதீங்க!

image

★வெங்காயம், பூண்டு, மது, உள்ளிட்ட தாமச உணவுகளை கண்டிப்பாக கிருஷ்ண ஜெயந்தி அன்று தவிர்க்க வேண்டும்.
★அன்பையும், ஒற்றுமையையும் வளருங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம்.
★கிருஷ்ணர் நள்ளிரவில் தான் பிறந்தார் என்பதால், அந்த சமயத்தில் தூங்காமல், கண்ணனை வழிபட வேண்டும்.
★கிருஷ்ணருக்கு கண்டிப்பாக கருப்பு நிற பொருள்களை அர்ப்பணிக்க கூடாது.
★துளசி இலையை பறிக்கக் கூடாது.

News August 16, 2025

உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு: டிரம்ப்

image

புடின் உடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அலாஸ்காவில் புடினுடனான பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த டிரம்ப், உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், ஆனால் அது எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். விரைவில் இது தொடர்பாக தான் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களிடம் பேசவுள்ளதாகவும், இனி முடிவு அவர்கள் கையில் என்றார்.

News August 16, 2025

உக்ரைனுடனான போர் குறித்து புடின் கருத்து

image

உக்ரைனுடனான மோதலுக்கு தீர்வுக்கான துவக்கப்புள்ளி தான் டிரம்புடனான சந்திப்பு என புடின் தெரிவித்துள்ளார். இந்த மோதல் என்பது மிகுந்த சோகமானது எனவும், இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் இந்த மோதலுக்கான பிரதான காரணங்களை அகற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் உக்ரைனும், ஐரோப்பா யூனியனும் இந்த பேச்சுவார்த்தைகளை நாசப்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளார்.

News August 16, 2025

இல.கணேசன் உயிரிழப்புக்கு காரணமென்ன?

image

பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து ஆளுநருமான <<17417636>>இல.கணேசன் உடல்நலக்குறைவு<<>> காரணமாக நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவர் உயிரிழப்பு குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இல.கணேசன் மூளைக்குள் ரத்தக்கசிவு காரணமாக கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், தொடர் சிகிச்சையளித்தும், ரத்தக்கசிவு தொடர்ந்ததால் அவர் உயிரிழந்தார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!