India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூலி படத்தில் நடித்ததற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கான் ₹20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இந்நிலையில், இதை மறுத்துள்ள ஆமீர் கான், கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
எல்லோரும் எம்ஜிஆராக நினைக்கிறார்கள்; ஆனால் எப்போதும் ஒரே எம்ஜிஆர் தான் என்று விஜய்யை செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். பனையூரில் இருந்து அரசியல் செய்யும் விஜய், முதலில் களத்துக்கு வர வேண்டும் எனக் கூறிய அவர், மாநாடு, செயற்குழுவில் பேசிய இமேஜை வைத்து வெற்றி பெறலாம் என்று விஜய் நினைத்தால், அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் 50 ஆண்டுகளை தொட்ட ரஜினிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரையுலகில் நுழையும் போது இருந்த துடிப்பும், வேகமும் இன்றும் ரஜினியிடம் இருப்பதை ’கூலி’ படத்தில் பார்த்து தெரிந்துக்கொண்டதாகவும், ’பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா’ என்ற பாடல் வரிகள் மிகப் பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பரிசாக GST வரி முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக மோடி நேற்று அறிவித்தார். தற்போது 5 விதமாக இருக்கும் GST வரி, 2 விதமாக (5%, 18%) மாற்றப்படவுள்ளன. இதில் ஆடம்பரப் பொருட்கள், மதுபானங்களுக்கு மட்டும் 40% சிறப்பு வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது. தீபாவளிக்கு அதிகளவில் விற்பனையாவது ஆடம்பரப் பொருட்கள், மதுபானம் தான். இது தீபாவளி பரிசு அல்ல சுமை என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
1,000 வருடங்களுக்கு முன்பு நோய் ஏற்படாததற்கு சனாதன தர்மமே காரணம் என்று கவர்னர் R.N.ரவி தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசிய அவர், பாரதமும் சனாதனமும் ஒன்று, அதனைப் பிரிக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது என்றார். வேதங்கள் மூலமாகவே இந்த நாடு ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, உதயநிதி, சனாதனத்தை டெங்கு உடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு கவர்னர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 200 காலிப் பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 28. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் தாய்மொழி தகுதித் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.20. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
OPS வேண்டாம் என ஒற்றைக் காலில் நிற்கிறார் இபிஎஸ். BJP-யோ இருவரையும் இணைக்க முயற்சி செய்து வருவதாக பேசப்பட்டது. இதுகுறித்து RB.உதயகுமாரிடம் கேட்டபோது, “சிதறு தேங்காயை போல சிதறிய காலமும் உண்டு, பிறகு சேர்ந்து ஆட்சியமைத்த காலமும் உண்டு. எனக்கு ஜோசியம் தெரியாது. Wait and see” என மழுப்பிவிட்டு நகர்ந்தார். இதனால் OPS விவகாரத்தில் BJP-யின் பேச்சை EPS கேட்டுவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆன்லைன் டெலிவரி செயலிகளில் உணவின் விலை அதிகமாக இருப்பதாக பலர் புலம்புகின்றனர். இந்நிலையில் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ₹2 உயர்த்தியுள்ளது SWIGGY. 2023-ல் ₹2-ஆக இருந்த கட்டணத்தை 2024-ல் ₹10-ஆக உயர்த்தி, தற்போது ₹14 வரை உயர்ந்துள்ளது. 2 ஆண்டுகளில் பிளாட்ஃபார்ம் கட்டணம் மட்டுமே 600% உயர்ந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் உணவு டெலிவரி செய்யும் செயலியை தெரிந்துகொள்ள வேண்டுமா? <<17424295>>க்ளிக் பண்ணுங்க.<<>>
இந்த ஒரு நாளுக்காக தான் இந்திய திருநாட்டில், பல பேர் ரத்தம் சிந்தினர். உயிர் போகும் தருவாயிலும், ‘சுதந்திரம் வேண்டும்’ என ஆங்கிலேயரிடம் கர்ஜித்தனர். ஆகஸ்ட் 15, 1947, இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என ‘The Hindustan times’ பேப்பரில் வெளியிடப்பட்ட தலையங்கம் இதுதான். இந்திய வரலாற்றில் என்றைக்கும் அழியாத ஒரு காகிதம் இது. உங்களுக்கு சுதந்திரம் தினம் என்றால் என்ன விஷயம் ஞாபகம் வரும்?
ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளில் காட்டும் அதிக விலை உங்கள் தலையில் இடியை இறக்குகிறதா? குறைந்த விலையில் உணவு ஆர்டர் செய்ய இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு தளம் இருக்கிறது. அதுதான் ONDC. இடைத்தரகர்களின்றி வணிகர்களையும், நுகர்வோரையும் இணைப்பதால் இத்தளத்தில் உணவின் விலை குறைவாக இருக்கிறது. PAYTM-க்கு சென்று ONDC என தேடிப்பார்த்து ஆர்டர் செய்துகொள்ளுங்கள்.
Sorry, no posts matched your criteria.