News March 19, 2025

சுனிதா, வில்மோருக்கு பூமியில் காத்திருக்கும் சவால்கள்

image

9 மாத விண்வெளி பயணத்திற்கு பிறகு பூமி திரும்பியுள்ள சுனிதா, வில்மோர் உடல் ரீதியாக சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ரத்த அழுத்த மாறுபாட்டால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் பார்வைக் குறைபாடு, சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றை சந்திக்க நேரிடும் என்பதால் அவர்கள் தொடர் மருத்துவச் சிகிச்சையில் இருப்பார்கள் என்றும் கூறி வருகின்றனர். மீண்டு வாருங்கள் வீரர்களே..!

News March 19, 2025

அக்னிவீர் படையில் சேர விருப்பமா? இதை செய்யுங்க

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் எனும் புதிய படைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் வீரர்களைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு இந்திய ராணுவத்தின் இணையதளமான <>www.joinindianarmy.nic.in.<<>>இல் தொடங்கியுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, வயது தகுதி ஆகியவை அதே இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10ஆம் தேதி கடைசி.

News March 19, 2025

சரித்திரத்தில் இடம் பிடித்த சுனிதா வில்லியம்ஸ்!

image

நீண்ட நாள்கள் விண்வெளியில் வாழ்ந்த பெண் என்ற சாதனையை படைத்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். வலேரி (ரஷ்யா- 437), செகெய் அவ்தெயேவ் (ரஷ்யா -379), ஃப்ரான்க் ரூபியே (USA- 371), விளாடிமிர் டிடோவ், மூசா மனோரா (ரஷ்யா- 366), மார்க் வண்டே (USA- 355), ஸ்காட் கெல்லி, மிகைல் கார்னியென்கோ (USA- 340), கிறிஸ்டினா கோச் (USA- 328), பெக்கி விட்சன் (USA- 289) சுனிதா வில்லியம்ஸ் (USA- 288), புட் வில்மோர் (USA- 288).

News March 19, 2025

6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

image

தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக TNஇல் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் மார்ச் 24 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதேபோல மார்ச் 22 வரை, வெப்ப நிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

News March 19, 2025

இருமுடி இல்லாமல் சபரிமலை செல்ல கட்டுப்பாடு

image

இருமுடி கட்டு இல்லாமல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிதாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள், காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இதன்மூலம் இருமுடி கட்டுடன் வரும் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் என தேவசம்போர்டு விளக்கமளித்துள்ளது.

News March 19, 2025

ஒரே மரம்.. ஏராளமான பயன்கள்!

image

*முருங்கைக் காய் – உடலுக்கு வலிமை தரும் சத்தான காய்.
*முருங்கை இலை மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் கை, கால், மூட்டு வலிகள் நீங்கும்.
*முருங்கைப் பட்டையில் உலோகச் சத்து நிறைந்துள்ளதால் நரம்புக் கோளாறுகளை சரிசெய்யும்.
*முருங்கை விதை கூட்டு மூளைக்கு பலம் தரும்.
*முருங்கைப் பூ ரத்தத்தை சுத்தம் செய்யும். எலும்புகளை வலுவாக்கும்.

News March 19, 2025

மீண்டும் ஒன்று சேர்ந்த அதிமுக.. கழ(ல)கத்தில் மாறிய காட்சிகள்!

image

2 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று EPS, OPS கார்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்தன. அதோடு, பேரவைக்குள் செங்கோட்டையன் பேச வாய்ப்பளிக்க கோரி சபாநாயகருக்கு இபிஎஸ் சைகை காண்பித்தது, பேரவை உணவகத்தில் அதிமுக MLAக்களுடன் அமர்ந்து செங்கோட்டையன் உணவருந்தியது என உள்கட்சி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

News March 19, 2025

அறிவிக்காமல் விவாதிக்க முடியுமா? வானதி

image

மத்திய அரசு அறிவிப்பு வெளியிடாத நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து நாடாளுமன்றத்தில் எப்படி விவாதிக்க முடியும் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் திமுகவினர் தங்களது கற்பனை மூலம் உருவாக்கிய சிந்தனையை விவாதிக்க முடியுமா என வினவிய அவர், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்கக் கோரி திமுக MPக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

News March 19, 2025

பழங்களும்… அதன் பயன்களும்…

image

*கொய்யாப்பழம் – பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கும்
*ஆரஞ்சு – பக்கவாதம் வராமல் தடுக்கும்.
*விளாம்பழம் – மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
*கோவைப்பழம் – சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
*சீத்தாப்பழம் – இதயத்தை பலப்படுத்தும்.
*எலுமிச்சம் பழம் – செரிமானத்திற்கு உதவும். பல் சார்ந்த பிரச்னைகளை சரிசெய்யும்.
*பலாப்பழம் – நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்.

News March 19, 2025

ரகுவரனின் நீங்கா நினைவுகள்…

image

“I KNOW” என்ற வார்த்தையை கேட்டாலே சட்டென நமக்கு நினைவுக்கு வருபவர் நடிகர் ரகுவரன். தமிழ் சினிமாவில், வில்லன் கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தினாலும், குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியது ஏராளம். முதல்வன் படத்தில் CM, பாட்ஷா படத்தில் கேங்ஸ்டர் என என்றும் நம் நினைவில் நீங்காமல் இருக்கும் அவருக்கு, இன்று 17வது ஆண்டு நினைவு நாள். ரகுவரன் என்றால் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

error: Content is protected !!