India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ED நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஐகோர்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. டாஸ்மாக் விவகாரத்தில் ED விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், சோதனையில் டாஸ்மாக் ஆவணங்களை பறிமுதல் செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்கவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனைக்கு பின், ₹1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக ED தெரிவித்தது.
ரயிலில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல 1989 ரயில்வே சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், ஸ்டவ், தீப்பெட்டி, லைட்டர், பட்டாசு ஆகியவை அடங்கும். தடையை மீறி இவற்றை ரயில்களில் கொண்டு சென்றால், ரூ.1,000 அபராதம் (அ) 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சேதம், உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கும் அவரே பொறுப்பாவார். SHARE IT.
Happy Street நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என திமுக எம்எல்ஏவும், தவாக தலைவருமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆடுவதாகவும், அது தமிழர்களின் நாகரிகம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்த நிகழ்ச்சிக்கு அரசு உடனே தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை, மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி அடைந்துள்ளது. GSLV LVM3 ராக்கெட்டுக்கான CE20 கிரையோஜெனிக் E15 இன்ஜினின் சோதனை இங்கு பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. அதன்படி 100 விநாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுன்ட் டவுன் ஆரம்பிக்கப்பட்டு, சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாளை, நாளை மறுநாள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. 22, 23ஆம் தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழையும், 24, 25ஆம் தேதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் IMD குறிப்பிட்டுள்ளது.
‘இந்தியன் 3’ படம் கைவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கமல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் 3 படத்தின் பாடல் ஒன்றை எடுக்க ஷங்கர் லைகா நிறுவனத்திடம் பெரிய தொகையை கேட்டதாகவும், அதை லைகா தர மறுத்ததால் ஷங்கர் படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘இந்தியன் 3’ டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 10 மடங்கு அபராதங்களை விதிக்கும் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் மார்ச் 1 முதலே அமலுக்கு வந்துள்ளது. புதிய விதிகளின்படி, போதையில் வாகனம் ஓட்டினால் ₹10,000 + லைசன்ஸ் 3 மாதம் ரத்து, ஹெல்மெட் அணியவில்லை எனில் ₹1,000, வாகனம் ஓட்டுகையில் மொபைல் பயன்படுத்தினால் ₹5,000, லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ₹5,000, டிரிபிள்ஸ் போனால் ₹1,000 அபராதம் விதிக்கப்படும்.
ஜெர்மன் அதிபராக ஹிட்லர் பதவி வகித்தபோது 1933-1945 வரை லட்சக்கணக்கான யூதர்கள் படுகாெலை செய்யப்பட்டனர். ஹிட்லர் உத்தரவின்படியே இந்த இனப்படுகொலை நடைபெற்றது. இதுபோல யூதர்கள் மீது ஹிட்லர் வெறுப்பு காட்டுவதற்கு சில காரணங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முதல் உலகப் போரில் ஜெர்மன் தோல்வியடைந்தது. ஜெர்மன் படையில் சேர்ந்து சண்டையிட்ட ஹிட்லருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது.
ஆஸ்திரிய -ஜெர்மானிய அரசியல், சமூக, பொருளாதாரத்தில் மேலோங்கியிருந்த யூத செல்வாக்கு, முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்க யூதர்களும் காரணம் என்ற கருத்து, ஜெர்மானிய விலைமாதுவிடமிருந்து ஹிட்லருக்கு பால்வினை நோய் தொற்றிக் கொண்டதால் ஏற்பட்ட வெறுப்பு என யூதர்கள் மீது ஹிட்லர் வெறுப்பு கொள்ள பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதுபற்றி ஹிட்லர் குறிப்பாக எதையும் சொல்லவில்லை. ஆனால், யூதர்களை கொத்து கொத்தாக கொன்றார்.
உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதாக கூறி, <<15802386>>மாருதி <<>>சுசூகி, டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் ஏப்ரல் முதல் கார் விலையை உயர்த்தவுள்ளன. இந்நிலையில், கியா நிறுவனமும் கார் விலையை ஏப்ரல் 1 முதல் 3% வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதத்தில்தான் அந்நிறுவனம் கார் விலையை 3% வரை உயர்த்தியது. இதையடுத்து 3 மாதங்களில் மீண்டும் விலையை கியா உயர்த்துகிறது.
Sorry, no posts matched your criteria.