News August 16, 2025

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

image

இந்தாண்டு தீபாவளி வரும் அக்.20-ம் தேதி திங்கள்கிழமை வருகிறது. அக்.18(சனி), அக்.19(ஞாயிறு) என 3 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இந்நிலையில், அக்.17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு <>IRCTC-ல்<<>> தொடங்குகிறது. அதேபோல், அக்.18-ம் தேதிக்கான புக்கிங் செவ்வாய்கிழமையும், 19-ம் தேதிக்கு புதன்கிழமையும், 20-ம் தேதிக்கு வியாழன் அன்றும் காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. ரெடியா இருங்க.

News August 16, 2025

₹3,000 FASTag பாஸ்க்கு நல்ல வரவேற்பு

image

நாடு முழுவதும் <<17410889>>ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FASTag திட்டம்,<<>> நேற்று (ஆக.15) அமலுக்கு வந்தது. முதல் நாளிலேயே 1.4 லட்சம் பேர் இந்த FASTag-ஐ வாங்கியதாகவும், புதுப்பித்ததாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை வாங்கினால் ஆண்டிற்கு 200 முறை தேசிய சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. FASTag-ஐ வாங்குவதற்கு <>Rajmarg Yatra<<>> செயலியை டவுன்லோடு செய்யுங்கள். SHARE IT.

News August 16, 2025

மகனை திருமணம் செய்த அம்மா.. வெளிநாட்டு விநோதம்!

image

வாழ்க்கையில் தர்ம சங்கடமான சூழலை சந்தித்தேன் என சிலர் சொல்லுவார்கள். இதை படித்தால் இதைவிட தர்மசங்கடமான சூழல் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும். வெளிநாட்டில் ஏழ்மை காரணமாக தத்து கொடுத்த மகனை அடையாளம் தெரியாமல் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததோடு 2 குழந்தைகளை பெற்றுள்ளார் தற்போது DNA சோதனையில், அந்த இளைஞர் தனது மகன் என்பதை அறிந்த அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். So Sad..!

News August 16, 2025

அஸ்வின் பேச்சுக்கு CSK பதிலடி

image

2025 IPL சீசனில் டெவால்ட் ப்ரேவிஸை விதிகளின் படி, ₹2.2 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்ததாக CSK விளக்கம் அளித்துள்ளது. கடந்த IPL தொடரின் போது குர்ஜப்னீத் சிங் காயமடைந்தார். அவருக்கு மாற்று வீரராக ப்ரேவிஸை, CSK கூடுதல் தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்ததாக அஸ்வின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு வீரர் காயம்பட்டால், அவருக்கு கொடுக்கப்பட்ட தொகையையே மாற்று வீரருக்கும் கொடுக்க வேண்டும் என்பது IPL விதி.

News August 16, 2025

பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர்? PIB FACTCHECK

image

அனைத்து பெண்களுக்கும் இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், அதற்கு உடனே விண்ணப்பிக்கலாம் எனவும் ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் உலா வருகிறது. அது உண்மையல்ல என்று மத்திய அரசின் PIBFactCheck மறுத்துள்ளது. ‘இலவச ஸ்கூட்டி திட்டம்’ என்று எந்த திட்டமும் இல்லை. அரசு உறுதிப்படுத்தாத எந்த தகவலையும் நம்பாதீர், யாருக்கும் ஷேர் செய்யவும் வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

News August 16, 2025

SIR சர்ச்சை: வாய் திறக்கும் தேர்தல் ஆணையம்..

image

பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம்(EC) வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, பிஹாரில் இருந்து நாளை (ஆக., 17) வாக்காளர்களின் அதிகாரப் பயணத்தை ராகுல் காந்தி தொடங்கவிருக்கிறார். இந்நிலையில், அதே நாளில் (ஆக., 17) பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 16, 2025

TN பற்றிய இந்த தகவல்கள் 99% இந்தியர்களுக்கு தெரியாது..

image

▶இந்தியாவில் உடலுறுப்பு தானத்தில் TN முதலிடம்.
▶அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலமாக இருக்கிறது TN.▶அதிக தொழிற்சாலைகள் இருக்கும் இடம் TN(39,000+)▶இந்தியாவுக்கான 80% பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்படுகின்றன.▶இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்(ஸ்பெஸர் பிளாசா), முதல் உயிரியல் பூங்கா(அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா) முதல் பெரிய அணுமின் நிலையம் (கூடன்குளம்) TN-ல் உருவாக்கப்பட்டது.

News August 16, 2025

CM தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள்? உண்மை என்ன?

image

CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக பாஜக MP அனுராக் தாக்கூர் கூறியது பொய்யான தகவல் என TN Fact Check விளக்கம் அளித்துள்ளது. பாஜக MP கூறிய அவென்யூ எண் 11 என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு எனவும், 30 வாக்காளர்கள் வெவேறு வீடுகளில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அங்கு முஸ்லிம் மட்டுமல்ல, அனைத்து மதத்தினரும் வசிப்பதாகவும் கூறியுள்ளது.

News August 16, 2025

இனி அந்த மாதிரி கேரக்டரில் நடிக்க மாட்டேன்: அனுபமா

image

‘தில்லு ஸ்கொயர்’ தெலுங்கு படத்தில் அதிக கிளாமர் காட்டியதால், எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதீத கவர்ச்சி தனக்கு பிடிக்கவில்லை என்றாலும், கதைக்கு தேவைப்பட்டதால் நடித்ததாகவும், அது தன்னுடைய ரியல் கேரக்டருக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இனி இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

ஆக.22-ல் தமிழகம் வரும் அமித்ஷா!

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 22-ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். நெல்லையில் நாளை(ஆக.17) நடைபெற இருந்த பாஜக பூத் முகவர்கள் மாநாடு, நாகலாந்து கவர்னர் இல.கணேஷன் மறைவையடுத்து வரும் 22-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதில் கலந்துகொள்ளவே அமித்ஷா வருகை தர உள்ளார். முன்னதாக, கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், இனி ஒவ்வொரு மாதமும் தமிழகம் வரவிருப்பதாக கூறியிருந்தார்.

error: Content is protected !!