India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிய நிலையில், இதை அவரது மூதாதையர் கிராமமான ஜூலாசனில் உறவினர்கள் கொண்டாடினர். சுனிதாவின் சகோதரியான ஃபால்குனி பாண்ட்யா, இந்தியாவுக்கு அவரின் வருகையை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2008-2024 வரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை சாம்பியன் கோப்பை வென்ற அணி எது எனப் பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த 2 அணிகளுக்கும் அடுத்து அதிகபட்சமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்த முறை சாம்பியன் யார்? உங்கள் கருத்து?
வெற்றிமாறன் மற்றும் சூர்யா ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் படம் ‘வாடிவாசல்’. ஆனால் படம் தொடங்கிய பாடாக தெரியவில்லை. தற்போது படத்திற்கான இசை பணிகளை ஜி.வி.பிரகாஷ் தொடங்கியுள்ளதாக நல்ல செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 1 முதல் 19ஆம் தேதி வரை அரசு பள்ளிகளில் இதுவரை 78,384 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் வழியில் 14, 279 மாணவர்களும், ஆங்கில வழியில் 64,105 மாணவர்களும் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணியை இதுவரை 3 அணிகள் மட்டுமே அதிக முறை வீழ்த்தியுள்ளது. மும்பை (18-21), லக்னோ (1-3), குஜராத் (3-4) உள்ளிட்ட அணிகள் சிஎஸ்கே அணியை அதிகமுறை தோற்கடித்துள்ளது. பெங்களூரு (22-11), கொல்கத்தா (20-11), டெல்லி (19-11), ராஜஸ்தான் (16-14), பஞ்சாப் (17-13), ஹைதராபாத் (16-6) உள்ளிட்ட அணிகளை சென்னை அணி அதிகமுறை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள தனித்துவமான முக்கிய அம்சங்களில், சித்ராகூட் எனும் மாவட்டம் 2 மாநிலங்களில் அமைந்திருப்பதும் ஒன்று. இந்த மாவட்டத்தின் பெரும் பகுதி உ.பி.யிலும், சிறிய பகுதி மட்டும் ம.பி.யிலும் உள்ளன. சட்டம், நிர்வாகம், நிர்வாகத்தை 2 மாநிலங்களுமே கவனிக்கின்றன. தற்போது 2 மாநிலங்களிலும் பாஜக அரசு உள்ளதால், நிர்வாகத்தில் குழப்பம் இல்லை. வனவாசத்தின்போது இந்த மாவட்டத்தில் ராமர் இருந்ததாக கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே அசத்திய ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் 2வது சுற்றில் ஸ்ரீகாந்த் சீன வீரர் லீ ஷிபெங் உடன் மோதுகிறார்.
வசதி படைத்தவர்கள் வெளிநாட்டு உயர்ரக நாய்களை வளர்ப்பதை பொழுதுபோக்காக வைத்திருப்பர். அதுபோன்ற உயர்ரக நாய் ஒன்றை பெங்களூரைச் சேர்ந்த சதீஷ் விலைக்கு வாங்கியுள்ளார். அந்த நாய், ஓநாய், வொய்ட் செப்பர்ட் இன நாயின் கலப்பு. Cadabom Okami என்பது அதன் இனம். 8 மாதமே ஆகும் நிலையில், அதன் உடல் எடை 75 கிலோ ஆக உள்ளது. உயரமும் 30 இன்ச்சாகும். தினமும் 3 கிலோ சமைக்காத கோழிக்கறியை சாப்பிடுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வரின் இல்லத்தில் வைத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் அழைப்பிதழை வழங்கினர். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் Wall என்று வர்ணிக்கப்படுபவர் ராகுல் டிராவிட். கடைசிவரை போராடுவதில் அவர் கில்லி. அப்படிப்பட்டவர் காயத்தால் முடங்கிவிடுவாரா என்ன?.. பெங்களூரு கிளப் போட்டியின் போது ராகுல் டிராவிட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் ராஜஸ்தான் அணியின் கோச்சிங் பாதிக்கப்படக்கூடாது என்று, வீல் சேரில் மைதானத்தை சுற்றி வருகிறார். டிராவிட்டின் டெடிகேஷனை பார்த்து அனைவரும் வியக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.