India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இ-ஷ்ரம் தளத்தில் பெயர் பதிவு செய்துள்ள 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்தப்படாததால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 மாதங்களுக்குள் கார்டுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளை உடனே வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை மீண்டும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை நேற்று தமிழிசை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று கமலாலயத்தில் அண்ணாமலை முன்னிலையில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாகத் தெரிகிறது. இதன்பின் அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது தெரியவரும்.
பிரதமர் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை பங்கேற்கவைத்த தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோவையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட ரோடு ஷோவில் ஸ்ரீசாய்பாபா பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு ராமர், சீதை வேடமிட்டு கழுத்தில் பாஜக கொடியுடன் பங்கேற்க வைத்தனர். இந்நிலையில், அந்த தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிப்பதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இன்று பிற்பகல் 12:30 மணிக்கு அறிவிப்பு வெளியாகிறது என ட்வீட் செய்துள்ள தனுஷ் “ஒரு காவிய பயணம் தொடங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார். இது இளையராஜா படத்திற்கான அறிவிப்பு என்றே தெரிகிறது. மேலும், இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 32 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவர்கள் எண்ணிக்கை குறைவான பள்ளிகளை, தற்போது மூடும் திட்டமில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) 4,660 SI மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், 452 SI பணியிடங்களும், 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்களும் உள்ளன. SI பணியிடங்களுக்கு பட்ட படிப்பும், கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு பத்தாம் தேர்ச்சியும் அவசியம். விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ எனும் இணையதளம் மூலம் மே 14க்குள் விண்ணப்பிக்கலாம்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவுடன் கடைசி வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக 7+1 தொகுதி பங்கீட்டை நிறைவும் செய்தது. ஆனால், ஒரே இரவில் முடிவை மாற்றிய பாமக, பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. இந்நிலையில், திடீரென கூட்டணி மாறிய பாமகவுக்கு தர்மம் நல்ல பதிலை கொடுக்கும் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க சந்திரயான்-3 திட்டத்திற்காக மதிப்புமிக்க ஏவியேஷன் வீக் லாரேட்ஸ் விருதை இஸ்ரோ பெற்றுள்ளது. இந்த விருதை இஸ்ரோ சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் ஸ்ரீப்ரியா ரங்கநாதன் பெற்றுக்கொண்டார். விண்வெளித் துறையில் நிகழ்த்தப்படும் அசாதாரண சாதனைகளை அங்கீகரிப்பதற்காக 1956 ஆம் ஆண்டில் இருந்து ஏவியேஷன் வீக் லாரேட்ஸ் விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மறைந்த தலைவர் துர்கா சோரனின் மனைவியும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணியுமான சீதா சோரன் பாஜகவில் இணைந்துள்ளார். 3 முறை எம்எல்ஏவாக இருந்த சீதா, தனது கணவரின் மறைவை தொடர்ந்து கட்சியில் இருந்து தானும், குடும்பத்தாரும் ஒதுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதய படபடப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் கொண்டது செம்பருத்திப்பூ. எளிதாக கிடைக்கும் செம்பருத்திப்பூவை வைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, இஞ்சி, புதினா இலைகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் செம்பருத்திப்பூ ஜூஸை ஊற்றி, சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.
Sorry, no posts matched your criteria.