News March 19, 2025

யூதர்களை ஹிட்லர் வெறுக்க என்ன காரணம்? (2/2)

image

ஆஸ்திரிய -ஜெர்மானிய அரசியல், சமூக, பொருளாதாரத்தில் மேலோங்கியிருந்த யூத செல்வாக்கு, முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்க யூதர்களும் காரணம் என்ற கருத்து, ஜெர்மானிய விலைமாதுவிடமிருந்து ஹிட்லருக்கு பால்வினை நோய் தொற்றிக் கொண்டதால் ஏற்பட்ட வெறுப்பு என யூதர்கள் மீது ஹிட்லர் வெறுப்பு கொள்ள பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதுபற்றி ஹிட்லர் குறிப்பாக எதையும் சொல்லவில்லை. ஆனால், யூதர்களை கொத்து கொத்தாக கொன்றார்.

News March 19, 2025

கியா கார் விலையும் ஏப்ரல் முதல் உயருகிறது

image

உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதாக கூறி, <<15802386>>மாருதி <<>>சுசூகி, டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் ஏப்ரல் முதல் கார் விலையை உயர்த்தவுள்ளன. இந்நிலையில், கியா நிறுவனமும் கார் விலையை ஏப்ரல் 1 முதல் 3% வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதத்தில்தான் அந்நிறுவனம் கார் விலையை 3% வரை உயர்த்தியது. இதையடுத்து 3 மாதங்களில் மீண்டும் விலையை கியா உயர்த்துகிறது.

News March 19, 2025

நெருங்கும் IPL திருவிழா.. வெளியான முக்கிய அப்டேட்

image

நடப்பாண்டு IPL தொடர் 22ஆம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது. நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி, கத்ரீனா கைஃப் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல இல்லாமல் இந்த ஆண்டு, போட்டி நடைபெறும் 13 மைதானங்களிலும் தொடக்க விழா நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டுள்ளது.

News March 19, 2025

சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்வு

image

இந்தியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் தொடர்ந்து 3 வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்ந்து 75,449 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 22,907 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்து. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 31 பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது.

News March 19, 2025

எம்.சான்ட் விலை உயர்வு… வீடு கட்டும் செலவு அதிகரிக்கும்

image

விலை உயராத பொருளே இருக்காது போல. தற்போது எம்.சான்ட், பி.சான்ட் விலைகள் உயர்ந்துள்ளன. 1 டன் எம்.சான்ட் ₹650இல் இருந்து ₹1,250ஆகவும், பி.சான்ட் ₹750இல் இருந்து ₹1,500ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஒரு லாரி எம்.சான்ட் (6 unit) ₹55,000ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், வீடு கட்டும் செலவு 1 சதுர அடிக்கு ₹100 அதிகரிக்கும். எனவே, விலையை முறைப்படுத்த வேண்டுமெனவும் அரசுக்கு காேரிக்கை எழுந்துள்ளது.

News March 19, 2025

TVK சார்பில் தண்ணீர் பந்தல்: விஜய் உத்தரவு

image

TVK சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். தங்கள் மாவட்டங்களில் உள்ள மாநகரம், நகரம், ஒன்றியம், வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் கட்சி நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் அமைக்க பரிந்துரைத்துள்ளார். மேலும், தாங்கள் அமைத்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் உள்ளதா? என தினந்தோறும் தவறாமல் கவனிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News March 19, 2025

நாட்டின் பணக்கார எம்எல்ஏ, ஏழை எம்எல்ஏ யார் தெரியுமா?

image

நாட்டின் பணக்கார எம்எல்ஏ, மும்பை காட்கோபார் (கிழக்கு) தொகுதி பாஜக எம்எல்ஏவான பராக் ஷா ஆவார். அவருக்கு ரூ.3,400 கோடி சொத்து இருப்பதாக ADR தெரிவித்துள்ளது. அவருக்கு அடுத்து, பணக்கார எம்எல்ஏ டி.கே. சிவக்குமார் (காங்.,), அவருக்கு ரூ.1,413 கோடி சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மே.வங்க பாஜக எம்எல்ஏ நிர்மல் குமாரே மிகவும் ஏழை எம்எல்ஏ, அவருக்கு ரூ.1,700 சொத்தே இருப்பதாக ADR கூறியுள்ளது.

News March 19, 2025

இன்னும் என்னென்ன செய்யப் போகுதோ AI!

image

AI-யின் வளர்ச்சி, ஒருபுறம் ஆச்சரியத்தை தந்தாலும் மறுபுறம் பயத்தையும் சேர்த்தே தருகிறது. அப்படியொரு சம்பவத்தைதான் AI தற்போது செய்திருக்கிறது. இத்தாலியின் பிரபலமான IL FOGILO நாளிதழின் ஒருநாள் செய்தித்தாளையே AI தயாரித்து கொடுத்துவிட்டது. இதைதான் அந்நிறுவனம் நேற்று விற்பனை செய்துள்ளது. ஹெட்லைன்ஸ், தலையங்கம், செய்திகள் என 100 ஜர்னலிஸ்டுகளின் வேலையை அசால்ட்டாக செய்து முடித்திருக்கிறது AI.

News March 19, 2025

பிரபல அனிமேஷன் தொடர் இயக்குநர் மரணம்

image

ஜப்பானைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பிரபல அனிமேஷன் தொடர் இயக்குநர் ஷெகேக்கி ஆவாய் (71) காலமானார். 1980 முதல் பல்வேறு அனிமேஷன் கேரக்டர்களை அவர் உருவாக்கியுள்ளார். பல்வேறு அனிமேஷன் தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார். அவற்றில், அட்டாக் ஆன் டைட்டன், மை ஹீரோ அகாடமியா, நருடோ, டோரேமான், டெர்மினேட்டர் ஜீரோ, சூசைட் ஸ்குவாடு ISEKAI உள்ளிட்டவை புகழ்பெற்றவை ஆகும். இதில் நீங்கள் பார்த்த சீரியல் எது?

News March 19, 2025

பெங்களூரு அணிக்கு எதிராக தொடரும் CSK ஆதிக்கம்

image

ஐபிஎல் தொடரில் CSK மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியை காண்பதற்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடர்களில் 33 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், CSK 21 போட்டிகளில் வென்றுள்ளது. பெங்களூரு அணி 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. பெங்களூரு அணிக்கு எதிராக CSK இந்த முறையும் வெற்று பெறுமா? கமெண்ட் பண்ணுங்க…

error: Content is protected !!