News March 24, 2024

வைரலாகும் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள்!

image

SRH அணி உரிமையாளர் காவ்யா மாறனின் ரியாக்‌ஷன்களை கிரிக்கெட் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். SRH & KKR அணிகள் நேற்று மோதின. இதில், கிளாசெனின் அதிரடி ஆட்டத்தால் SRH வெற்றியை நோக்கி சென்றபோது, காவ்யா துள்ளி குதித்து கொண்டாடினார். அடுத்த சில நிமிடங்களில் SRH அணியின் நிலைமை தலைகீழாகி, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றபோது சோகத்தில் ஆழ்ந்தார்.

News March 24, 2024

5 எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு

image

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியானது. இதில், எம்.பிக்களாக உள்ள ஜோதிமணி (கரூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), விஜய் வசந்த் (குமரி) ஆகியோர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த தேர்தலில் ஆரணியில் வென்ற விஷ்ணு பிரசாத்துக்கு இம்முறை கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

“நாளை முதல் விடுமுறை”

image

நடப்பாண்டு +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளையுடன் முடிவடைகிறது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளன. நாளை மதியம் தேர்வு முடிந்த உடன் +1 மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளி எப்போது திறக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வுமுடிவுகள் மே 14-ல் வெளியிடப்படும்.

News March 24, 2024

ஜெயலலிதாவை புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

image

ஜெயலலிதாவை உதயநிதி புகழ்ந்து பேசியுள்ளார். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக திமுகவும், அதிமுகவும் செயல்படுகின்றன. இந்நிலையில், மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய செய்தபோது உதயநிதி, “நீட் தேர்வை ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. இதனால் அவர் இருந்தவரை தமிழகத்தில் நீட் நடக்கவில்லை. பிறகு வந்த அடிமைக் கூட்டமே (இபிஎஸ் அரசு) அனுமதியளித்தது. இதனால் தமிழகத்தில் 22 மாணவர்கள் உயிரிழந்து விட்டனர்” என்றார்.

News March 24, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*அதிமுகவை தனிமைப்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் திட்டம் – திருமாவளவன்
* தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக அமர் பிரசாத் ரெட்டி நியமனம்
* ஐ.டி.எப்., டென்னிஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்
இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன்.
*பெலினோ, வேகன் ஆர் கார்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து ரீகால் செய்யும் மாருதி சுசூகி *மாஸ்கோ தாக்குதல் தொடர்பாக ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 11 பேர் கைது.

News March 24, 2024

ஐபிஎல்லில் ரஸல் புதிய சாதனை

image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஆன்ட்ரே ரஸல், ஐபிஎல்லில் 200 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். சன்ரைசர்சுக்கு எதிரான போட்டியில் 64 ரன்கள் குவித்து வெற்றி தேடி தந்தார். 19வது ஓவரில் புவனேஸ்குமார் வீசிய பந்தில் விளாசிய சிக்சர் அவரின் 200வது சிக்சர் ஆகும். இதையடுத்து அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 9வது இடம் பிடித்தார். கெய்ல், ரோஹித் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.

News March 24, 2024

“எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம்”

image

தமிழ்நாட்டில் வாழும் ஓபிசி மக்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால், எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட்டோம்; நோட்டாவுக்கு வாக்களிப்போம் என்று ஓபிசி உரிமைக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை 18%லிருந்து 27%ஆக உயர்த்த வேண்டும். கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.

News March 24, 2024

யார் இந்த அஜய் ராய்?

image

பிரதமர் மோடியை எதிர்த்து, வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக களம் காண உள்ளார் அஜய் ராய். பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அஜய் ராய், 1996 – 2007 வரை கோலஸ்லா சட்டமன்றத் தொகுதியில் எல்.எல்.ஏ-வாக பணியாற்றியுள்ளார். தனக்கு சீட் மறுக்கப்பட்டதால், 2009இல் சமாஜ்வாதி கட்சிக்கு தாவினார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்

News March 24, 2024

IPL: இன்று இரண்டு போட்டிகள்

image

ஐபிஎல்-2024 தொடரின் ஒரு பகுதியாக இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. 2ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டிகளை ஜியோ சினிமா ஆப் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம்.

News March 24, 2024

அமீருக்கு ஆதரவாக நிற்கும் வெற்றிமாறன்

image

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான இயக்குநர் அமீர் பெரும் நெருக்கடிக்கு ஆளானது அனைவரும் அறிந்ததே. இந்த காரணமாக அவர் நடித்த மாயவலை திரைப்படம் வெளிவர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாம். உதவிக் கேட்ட இடங்களில் எல்லாம் பலரும் வம்பு எதற்கு என விலகிக் கொண்டார்களாம். இந்த சூழலில் இயக்குநர் வெற்றிமாறன் தான் அவருக்கு ஆறுதல் சொல்லி, ஆதரவாக நிற்கிறாராம்.

error: Content is protected !!