News March 25, 2024

விஜய் டிவி புகழ் நடிக்கும் ‘டைமண்ட் தோனி’

image

‘விஜய் டிவி புகழ்’ நடிக்கும் புதிய படத்திற்கு ‘டைமண்ட் தோனி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜோஜின் இயக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். டைமண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அபிஷேக் இசையமைத்து வருகிறார். மேலும், படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

மும்பையை வீழ்த்தியது குஜராத்

image

MI அணிக்கு எதிரான ஆட்டத்தில் GT அணி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத் மைதானத்தில் நடந்த 4ஆவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த GT அணி 20 ஓவரில் 168 ரன்கள் குவித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய MI அணி 20 ஓவரில் 162 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இறுதியில் பந்துவீச்சாளர்கள் ரஷித், ஜான்சன் ஆகியோர் அபாரமாக பந்துவீச, மும்பை அணியை குஜராத் அணி வீழ்த்தியது.

News March 24, 2024

நைட்டு போன் பாக்குறீங்களா? ஆபத்து

image

இரவு தூங்குவதற்கு முன் மொபைல் போனை பயன்படுத்துவதால் நிரந்தரமாக தூக்கத்தை தொலைக்கும் நிலை ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவலை அமெரிக்க மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில், “போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளி அலைகள் இரவு நேரங்களில் கூர்மையாக இருக்கும். அது தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியையும் பாதிக்கும்”எனக்கூறப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 24, 2024

பாஜகவில் இணையப்போவதாக அறிவித்த நடிகை

image

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாஜகவில் இணையப்போவதாக அறிவித்துள்ளார். இன்று வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் கங்கனா, இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள அவர், “பாஜகவுக்கு எப்போதும் எனது நிபந்தனையற்ற ஆதரவு உண்டு. எனது பிறந்த இடமான மண்டி வேட்பாளராக அறிவித்துள்ளனர். பாஜகவில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.

News March 24, 2024

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்

image

தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாள்களுக்கு வெயில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துக் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (மார்ச் 24) முதல் மார்ச் 30 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News March 24, 2024

சனியால் உச்சத்துக்கு செல்லப் போகும் ராசிகள்

image

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பதால்தான் நாம் சனி பகவானை நீதி தேவன் என்று அழைக்கிறோம். ஆனால், அவருக்கும் சில ராசிகளின் மீது கரிசனப் பார்வை உண்டு. ஏழரை சனியின் போது கூட அந்த ராசிகளை சனி துன்பப்படுத்த மாட்டார் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். மேஷம், துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகள்தான் அவை. ஒப்பீட்டளவில் மற்றவர்களை விட குறைந்த கஷ்டங்களை அனுபவிப்பவர் இவர்கள்.

News March 24, 2024

#MissYouCaptain

image

‘ரமணா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ரயில் நிலையத்தில், தற்போது ‘SK23’ படப்பிடிப்பை நடத்தி வருவதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எனது ‘ரமணா’ படத்தில் இடம்பெற்ற இடத்திற்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வந்திருக்கிறேன். எல்லாம் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் திரும்பியிருப்பது மிக யதார்த்தமாக உள்ளது. #MissYouCaptain” என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

News March 24, 2024

தங்கத்தின் விலையை திமுகவால் குறைக்க முடியுமா!

image

“தங்கத்தின் விலையை குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா?” என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது இணையத்தில் கேலிக்குள்ளாகியிருக்கிறது. தங்கத்தின் விலையை உலக சந்தை தான் நிர்ணயிக்கிறது. அதனை குறைக்கவோ கூட்டவோ மத்திய அரசுக்கு கூட அதிகாரம் கிடையாது. இந்நிலையில், திமுக எப்படி தங்கத்தின் விலையை குறைக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

News March 24, 2024

நாளை சந்திர கிரகணம். மறக்காம இதை செய்யுங்க

image

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளைய தினம் நிகழவுள்ளது. இந்த பகுதி சந்திர கிரகணம், காலை 10.23 மணி முதல் பிற்பகல் 3.02 மணி வரை நடைபெறவுள்ளது. பகல் வேளை என்பதால், இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. இருப்பினும், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கிரகண நேரத்தில் ஸ்தோத்திரங்கள் சொல்லி கடவுளை வழிபடலாம். கிரகணம் முடிந்த பின் வெள்ளைப் பொருட்களை தானம் செய்யலாம்.

News March 24, 2024

கோவை வெப்பமாக திராவிடக் கட்சிகள் தான் காரணம்

image

குளுகுளு என்று இருந்த கோவை மாநகரம் வெப்பமானதற்கு திராவிட அரசுகளே காரணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில், “கோவை ஒரு காலத்தில் குளுகுளு என்று இருந்தது. தற்போது 2 முதல் 3 டிகிரிகள் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லவே முடியாத அளவுக்கு சூடாகி இருக்கிறது. இதை மாற்ற மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்” என்று பேசினார்.

error: Content is protected !!