India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அசாம் மாநில காங்., எம்எல்ஏ பரத் சந்திர நரா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காங்., முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணையும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அசாம் காங்கிரஸ் செயல் தலைவராக இருந்த ராணா கோஸ்வாமி உள்ளிட்டோர் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் ஐக்கியமான நிலையில், தற்போது பரத் சந்திர நராவும் விலகியுள்ளார்.

ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதியின் வேட்பாளராக அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். பட்டதாரியான இவர் கல்லூரி காலத்திலேயே ஆர்.எஸ் எஸ் அமைப்பின் மாணவ அமைப்பான ஏபிவிபியில் இணைந்து பணியாற்றினார். கடந்த 2020இல் மாநில பாஜக தலைவரான அவர், துடிப்பு மிக்கவர் என்று பெயரெடுத்தவர். எனவே, ராகுலை வீழ்த்த இவரை மத்திய பாஜக தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை பாகிஸ்தானை சேர்ந்த 2 வீரர்கள் திரும்ப பெற்றுள்ளனர். பாகிஸ்தான் வீரர்கள் முகமது அமீர் கடந்த 2020ஆம் ஆண்டிலும், இமாத் வசீம் கடந்தாண்டும் ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் அந்த முடிவை திரும்ப பெறுவதாக 2 பேரும் அறிவித்துள்ளனர். அத்துடன் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் விளையாட இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதனையடுத்து, தேர்தலில் போட்டியிடுவதால், அவர் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியை சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளார். திருச்சி மாநகராட்சி 47வது வார்டு கவுன்சிலரான செந்தில்நாதன், மேயர் அன்பழகனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

நடிகர் ராகுல் மோடியை காதலிப்பதை பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் உறுதி செய்துள்ளார். து ஜூதி மைன் மக்கார் படத்தில் நடித்த போது, இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஷ்ரத்தா கபூர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஆர் டாலரை அணிந்துள்ளார். ராகுல் பெயரில் உள்ள ஆர் எனும் எழுத்தையே டாலராக அணிந்திருப்பதாகவும், இதன் மூலம் அவர் தற்போது காதலை உறுதி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜகவின் 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 37 எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 111 தொகுதிகளுக்கு பாஜக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. அதில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார் செளபே, விகே சிங், வருண் காந்தி உள்ளிட்ட 37 எம்பிக்களின் பெயர் இல்லை. அதேநேரத்தில் நடிகர்கள் கங்கனா, அருண் கோவில் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சேர்ந்தோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் அசோக் 96,050, திமுகவின் செங்குட்டுவன் 95,256 வாக்குகளை பெற்றனர். இதில் 605 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தபால் வாக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர் முன்பு எண்ண உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் அணி 2013 முதல் அனைத்து முதல் போட்டிகளிலும் தோல்வியடைந்து வருகிறது. GTக்கு எதிரான நேற்றைய முதல் போட்டியில் MI அணி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த GT அணி 168 ரன்கள் குவிக்க, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய MI அணி 162 ரன்களில் ஆட்டமிழந்தது. 2013 முதல் இதுவரை 5 முறை கோப்பை வென்றுள்ள மும்பை அணி, ஒரு முறைகூட முதல் போட்டியில் வென்றதில்லை.

விருதுநகர் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார், தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், சூரியவம்சம் படத்தில் வரும் சின்ராசு போல் நாட்டாமை சரத்குமார், தன்னை தட்டிக் கொடுத்து தேர்தலில் நிற்க வைத்ததாக கூறினார். முன்னதாக, சூர்யவம்சம் படத்தில் மனைவியை படிக்க வைத்து கலெக்டராக்கியதுபோல, ராதிகாவை எம்.பி.யாக்குவேன் என சரத்குமார் சூளுரைத்திருந்தார்.

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,205க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.80.80க்கும், கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.80,800க்கும் விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.