India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திமுகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்தான் தமிழ்நாட்டின் எதிரிகள் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி நேற்று பேசினார். மு.க.ஸ்டாலினும், திமுகவும் தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் எதிரிகள். இந்தியா கூட்டணி கட்சியினர், தங்களது பிரதமர் வேட்பாளர் யார் என்ற சிந்தனையில் நடமாடுகின்றனர். பிரதமர் வேட்பாளர் யாரென்று தெரியாமலேயே போட்டியிடுகின்றனர்” என்றார்.

தானத்தில் சிறந்த தானம் கண் தானம் என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. அவரின் கண்கள் பார்வையில்லாதவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உயிருடன் இருக்கும்போதும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்த அவர், மறைந்த பிறகும் தனது கண்களை தானமாக கொடுத்து, பிறரின் வாழ்க்கையில் ஒளிவீச செய்துள்ளார்.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் ராமாராவ் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. ஹனுமகோண்டா காவல்நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரில், கட்டுமான அதிபர்களிடம் முதல்வர் ரேவந்த் ரெட்டி, ரூ.2,000 கோடி வசூலித்து டெல்லிக்கு அனுப்பி இருப்பதாக ராமாராவ் பொய் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

KKRக்கு எதிரான போட்டியில் RCB வீரர் கோலி 2 சாதனைகள் படைத்தார். 59 பந்துகளில் 83 ரன்களை அவர் குவித்தார். இதில் 4 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல்லில் 241 சிக்சர்கள் விளாசி அதிக சிக்சர் விளாசியோர் பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்தார். 239 சிக்சருடன் 4ஆவது இடத்தில் இருந்த தோனியை பின்னுக்கு தள்ளினார். ஆர்சிபிக்காக அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற கெய்ல் சாதனையையும் அவர் முறியடித்தார்.

காங்., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது அனைத்து கட்சிகளுக்கும், மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் ₹8,250 கோடியை பெற்ற பாஜக இப்போது காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது வருமான வட்டி, அபராதம் விதிக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது உண்மையில் ஒரே நாடு, ஒரே கட்சி ஆகும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய வாக்கு மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எஸ்டிபிஐ மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள் அதிமுகவிற்கும், மமக, மஜக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணிக்கும் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழக புதிய விடுதலை கட்சியின் மாநில தலைவர் காஜா மொய்தீன் திமுக – காங்., கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 2022-23ல் 59,000 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 9,551 திருமணங்கள் சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 49,813 திருமணங்கள், கவுன்சிலிங், விழிப்புணர்வு மூலம் தடுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பீஹாரில் 31% சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 4ல் 1 திருமணங்கள், 10-14 வயது சிறுமிகளுக்கு நடக்க இருந்தவை.

தமிழ்நாட்டில் அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு வெப்பம் தகிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்திய வானிலை மைய விஞ்ஞானி நரேஷ் குமார் கூறுகையில், “கேரளா, தமிழ்நாடு, கடலோர ஒடிஷா, கடலோர ஆந்திரா பகுதிகளில் 4 – 5 நாள்களுக்கு வெப்பம் தகிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” என்றார்.

நடிகர் விஜய்யின், ‘The G.O.A.T’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டி.வி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்துக்குக் கொடுத்த விலையையே இந்தப் படத்திற்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் எதிர்பார்த்ததாம். ஆனால், சன் டி.வி தரப்பில் ₹50 கோடி மட்டுமே தர முடியுமென உறுதியாக வியாபாரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேறு வழியில்லாமல், சன் டி.வி சொன்ன விலைக்கே ஏ.ஜி.எஸ் படத்தைக் கொடுத்திருக்கிறது.

உரிய வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி, காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ₹1800 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியது. இதற்காக காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் இருந்த ₹135 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.