India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படவுள்ளன. அரசு பள்ளிகளில் தற்போது கருப்பு நிற போர்டுகள் உள்ளன. இதற்கு பதிலாக ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக ஏப். 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் போர்டு விநியோகிக்கப்படவுள்ளன. வரும் கல்வி ஆண்டில் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் ஆசிரியர்கள் 80,000 பேருக்கு டேப் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், மாறி வரும் கற்றல், கற்பித்தலுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு டேப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்ததாகவும், அதன்படி 3 கட்டங்களாக டேப் வழங்கப்பட உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவருக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அவர், இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பட்டியலின மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க அவர் விலகியது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியுடன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை ஏர்டெல் டிஸ்னி ஹாட்ஸ்டார், எக்ஸ்ட்ரீம் ஓடிடிகளுடன் திட்டங்களை அளித்தது. இந்நிலையில் ரூ.1,499 ரிசார்ஜூக்கு, 84 நாள்கள் வேலிடிட்டியுடன் நாள்தோறும் 3 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புடன் புதிய திட்டத்தை ஏர்டெல் கொண்டு வந்துள்ளது. ஜியோவில் ஏற்கெனவே இதேபோன்ற திட்டம் உள்ளது.

கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, ஜெர்மனி, ஐநாவுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசுகையில் “வலுவான நீதித்துறையை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா. தனிநபரோ, ஒரு குழுவோ, அதில் பாதிப்பு ஏற்படுத்த முடியாது. ஆதலால் சட்டத்தின் ஆட்சி குறித்து யாருடைய பாடமும் இந்தியாவுக்கு தேவையில்லை” என பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்றைய RCB vs KKR போட்டியில் கோலியின் ஆட்டத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சுமார் 10 ஓவர்கள் விளையாடிய அவர், 83 ரன்கள் மட்டுமே எடுத்ததால் RCB ரசிகர்கள் கோபமடைந்தனர். இதனால், ‘140 ஸ்டிரைக் ரேட்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை 17வது ஓவரிலேயே KKR எளிதில் முறியடித்தது. சக வீரர்களின் உதவி இல்லாததால் கோலி நிதானமாக விளையாடியதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

பாஜக கூட்டணியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகிக்கும் இந்திய குடியரசுக் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட பாஜக ஒதுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில், அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. அவர் I.N.D.I.A. கூட்டணியில் இணைவார் அல்லது தனியாக போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.

1956இல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக “இந்திய குடியரசுக் கட்சி” தொடங்குவதாக அறிவித்தார். ஆனால் கட்சி உருவாவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். அதன்பிறகு அவரது ஆதாரவாளர்கள் அக்கட்சியை உருவாக்கி, பட்டியலின மக்களின் உரிமைகளை அரசியல் ரீதியாக மீட்டனர். ஆனால், ஒரு காலகட்டத்திற்கு பிறகு அக்கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. தற்போது அக்கட்சிக்கு ஒரு இடம் கூட கொடுக்கவில்லை என அத்வாலே குமுறுகிறார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடிதம் எழுதியுள்ளார். டிரம்புக்கு பிறகு 2021ல் அதிபரான பைடன், பாக். பிரதமருடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்தார். இந்நிலையில் முதல்முறையாக ஷெரீப்புக்கு பைடன் கடிதம் எழுதியுள்ளார். அதில் உலகளாவிய, பிராந்திய ரீதியில் எழும் சவால்களை எதிர்கொள்வதில் பாக். அரசுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என பைடன் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று டெல்லி ராஷ்டிரபதி பவனில் வழங்க உள்ளார். இந்த ஆண்டு 5 பேருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இதில், பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.