India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

லக்னோ அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் 30 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து வாணவேடிக்கை காட்டியுள்ளார். இவரது அதிரடியால் பஞ்சாப் அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் வெற்றிபெற 72 பந்துகளில் 127 ரன்கள் தேவை. பேரிஸ்டோ 23* ரன்கள் எடுத்துள்ளார்.

மனைவியை ‘பேய், காட்டேரி’ என்று திட்டுவது கொடுமையில் வராதென பாட்னா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1994இல் கார் வரதட்சணையாக கேட்டதால், கணவர், கணவரின் தந்தைக்கு எதிராக மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நாளந்தா நீதிமன்றம், இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து பாட்னா தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், பிரிந்த கணவன் தன்னை ‘பேய், காட்டேரி’ என திட்டுவதாக மனைவி முறையிட்டார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 100 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் – லக்னோ இடையேயான போட்டியில் LSG வீரர் பூரண் அடித்த 100ஆவது சிக்ஸராக பதிவானது. இதில் அதிகபட்சமாக ஹைதராபாத், மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் மட்டுமே (SRH -18, MI -20) 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. அதிகபட்சமாக SRH வீரர் க்ளாசென் மட்டுமே 15 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்.19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா உள்ளிட்ட 27 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

ரேசன் அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் கேழ்வரகு வழங்கப்படுவது போல், தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த அரசு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த ஜூன் மாதத்திற்கு மேல் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. LSG அணியில் சிறப்பாக ஆடிய டி காக் 54, பூரண் 42, க்ருனால் பாண்டியா 43* ரன்கள் எடுத்தனர். இதையடுத்து பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சாம் கரண் 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இன்று எந்த அணி வெற்றிபெறும்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்திப்பதுடன் 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும் என பாஜக நிர்வாகி ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது, ஒருவேளை அதிமுக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தொடர்வாரா என்பது சந்தேகம் தான் எனக் கூறிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒன்றரை கோடி வாக்குகளை அதிமுக வாங்கியதா எனவும் கேள்வி எழுப்பினார்.

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் டேனியல் பாலாஜியின் உடல் ஓட்டேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. வேட்டையாடு விளையாடு, வடசென்னை படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்றிருந்தார் டேனியல் பாலாஜி. அவரது உடல் புரசைவாக்கம் வீட்டிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஓட்டேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து காற்றோடு காற்றாக அவர் மறைந்ததாக ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக ரயில்வே ஊழியர்கள் தபால் ஓட்டு போட முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அருகில் உள்ள கேரளா, கர்நாடகா மாநில ரயில்வே ஊழியர்கள் தபால் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழக ஊழியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் ஆணையம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

பாஜகவின் சர்வாதிகாரப்போக்கின் மீது ஒட்டுமொத்த மக்களும் கடும் கோபத்தில் உள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாடே தூக்கத்தை தொலைத்தது. தமிழ்நாட்டில் பாஜக பரிதாப நிலையில் உள்ளது. தோல்வி பயத்தால் நிர்மலா சீதாராமன் போன்றோர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டனர்” என்றார்.
Sorry, no posts matched your criteria.