News March 31, 2024

IPL-ல் வேகமாக பந்து வீசிய வீரர்கள்

image

பஞ்சாபிற்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ், 155 கி.மீ வேகத்தில் பந்து வீசி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஐபிஎல் வரலாற்றில் வேகமாக பந்து வீசியவர்கள்; ☛ ஷான் டைட் (RR) 157.71 kmph – 2011 ☛ லாகி ஃபெர்குசன் (GT) 157.3 kmph – 2022 ☛ உம்ரான் மாலிக் (SRH) 157 kmph – 2022 ☛ அன்ரிச் நார்ட்ஜே (DC) 156.22 கிமீ – 2010 ☛ மயங்க் யாதவ் (LSG) 155.8 kmph – 2024.

News March 31, 2024

போலந்தில் உணவகம் நடத்தும் ரஜினி பட நடிகை

image

ரஜினிபட ஹீரோயினாக நடித்த ரதி அக்னிஹோத்ரி, போலந்தில் இந்திய உணவகம் நடத்தி வருகிறார். ரஜினியுடன் முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை படங்களிலும், கமலுடன் உல்லாச பறவைகள், இந்தியில் ஏக் துஜே கேலியே படங்களிலும் நடித்த ரதி, பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 1985ல் தொழிலதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்த ரதி, 2015ல் விவாகரத்து செய்தார். தற்போது போலந்தில் உணவகத்தை நடத்தி வருகிறார்.

News March 31, 2024

உண்மைக்கு புறம்பாக திமுக பிரசாரம்

image

கச்சத்தீவு பற்றி இன்று வரை உண்மைக்கு புறம்பாக திமுக பிரசாரம் செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸுடன் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து விட்டு, பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறு என்று அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, கச்சத்தீவை இரக்கமில்லாமல் காங்கிரஸ், இலங்கைக்கு கொடுத்து விட்டதாக பிரதமர் மோடி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 31, 2024

எல்.முருகன் வாகனத்தில் அதிமுக கொடி

image

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரப்புரை வாகனத்தில் அதிமுக கொடி இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி தொகுதியில் அவர் பரப்புரை செய்து கொண்டிருந்த வாகனத்தில் அதிமுக கொடி இருந்ததை தொண்டர் ஒருவர் அவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட எல்.முருகன் உடனடியாக அதை எடுக்குமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டார். அதிமுக கொடி அகற்றப்பட்ட பிறகே அவர் பரப்புரையை தொடங்கினார்.

News March 31, 2024

மோகன் லாலின் சொத்து மதிப்பு தெரியுமா?

image

மோகன் லாலுக்கு ரூ.416 கோடி சொத்து இருக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் லால், தமிழில் ரஜினியுடன் ஜெயிலர், விஜய்யுடன் ஜில்லா படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மோகன் லால் ரூ.18 கோடி சம்பளமாக பெறுகிறார். அவருக்கு ரூ.416 கோடி சொத்து இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

News March 31, 2024

BREAKING: சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டு கட்டாக எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.29 கோடி பணம் சிக்கியது. தொடர்ந்து, அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

News March 31, 2024

ரிஷப் பண்ட் உயரத்தை கிண்டலடித்த நடிகை

image

ரிஷப் பண்ட் உயரத்தை நடிகை ஊர்வசி ரதேலா மறைமுகமாக கிண்டல் அடித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “எனது காதல், டேட்டிங் வாழ்க்கையில், நடிகர்கள், தொழிலதிபர்கள், பேட்ஸ்மேன்களை பார்த்துள்ளேன். அதில் சிலர், என் உயரம் கூட வரமாட்டர்” என கூறியுள்ளார். இதை பார்த்த பண்டின் ரசிகர்கள், ஊர்வசிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, 2 பேரும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News March 31, 2024

BREAKING: ஜாபர் சாதிக் வழக்கில் அமீருக்கு சம்மன்

image

வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில், மூளையாகச் செயல்பட்ட ஜாஃபர் சாதிக் கைதாகி சிறையில் உள்ளார். இவ்வழக்கில் இயக்குநர் அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், வரும் 2ம் தேதி ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை அமீர் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 31, 2024

குஷ்புவுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த பெண்

image

குஷ்புவுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்து பெண் ஒருவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தை ஆதரித்து கோபாலபுரத்தில் நடிகை குஷ்பு வாக்கு சேகரித்தார். அப்போது பால்கனியில் நின்ற பெண் ஒருவர் குஷ்புவை பார்த்து கைகாட்டினார். பதிலுக்கு குஷ்புவும் கையசைத்தார். இதனால் உற்சாகமான அந்த பெண் அவருக்கு பறக்கும் முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

News March 31, 2024

தமிழ்நாட்டில் யாருக்கு வெற்றி: புதிய கருத்துக்கணிப்பு

image

நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெல்லப்போவது யார் என்ற கருத்துக்கணிப்பை லோக்பால் என்ற பிரபல கருத்து கணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 34 – 37, அதிமுக கூட்டணி 1-3, பாஜக கூட்டணி 0-1, மற்றவை ( நாதக) 0-1 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தென்னிந்தியாவில் INDIA கூட்டணி 78 – 82, NDA கூட்டணி 28 – 34, YSRCP 10 – 11 இடங்களில் வெற்றிபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!