India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் “GOAT” திரைப்படத்தின் முதல் பாடலை தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாடலின் தாக்கம் கிட்டத்தட்ட 2 மாதங்கள் வரை இருக்கும். அதன்பின், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் டீசரை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6,23,33,925 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அதிகபட்சமாக 23,82, 119 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகையில் 13,45,120 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கான துணை வாக்காளர் பட்டியலை அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் முதன்முறையாக சரத்பவார் குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் போட்டியிடுவதால், அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ், அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்துள்ளது. கடந்த முறை பாராமதியில் போட்டியிட்டு வென்ற சுப்ரியா சுலே, இம்முறை மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். இந்நிலையில், அஜித் பவார் தனது செல்வாக்கை நிரூபிக்க தனது மனைவி சுனேத்ராவை அங்கு களமிறக்கியுள்ளார்.

பள்ளிகளுக்கான கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 13 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்.10, 12ல் நடைபெறவுள்ள தேர்வுகள், ரம்ஜானுக்காக 22, 23ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையில் மாற்றம் இருக்குமா என கேள்வி எழுந்தது. எனினும்,விடுமுறையில் மாற்றம் இல்லை, தேர்வெழுத மாணவர்கள் வந்தால் போதும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் 4ஆம் தேதி ஜனநாயகத்தின் உயிர்த்தெழுதல் நாள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி கிறிஸ்தவப் பெருங்குடி மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ள அவர் தனது X பக்கத்தில், ‘இந்திய மக்களுக்கும் , சங் பரிவார்களுக்கும் இடையிலான கருத்தியல் போரில் இதுவே மக்கள் வெல்லும் நாள். ஜனநாயகம் உயிர்த்தெழும் நாள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினத்தில் கடந்த இரண்டு நாள்களாக சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதில் தோனி கலந்துகொள்ளவில்லை. மேலும், விக்கெட் கீப்பிங் பயிற்சியையும் மாற்று விக்கெட் கீப்பரான ஆரவெல்லி அவனிஷ் மேற்கொண்டு வருகிறார். தோனி தொடர்பான இந்த செய்தி சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அண்ணாமலைக்கு கோவையில் டெபாசிட் கூட கிடைக்காது என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “அண்ணாமலை போன்று அரசியல் அறிவு இல்லாதவரை தமிழகம் இப்போது தான் பார்க்கிறது. அதனால் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அவரால் கொச்சைப்படுத்த முடிகிறது. அவரின் அரைவேக்காட்டு பேச்சுக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். அப்போது தான் அவர் திருந்துவார்” எனக் கூறினார்.

கர்நாடகா பாஜக மூத்த தலைவரும், மேலவை உறுப்பினருமான தேஜஸ்வினி கவுடா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 2004-2009 வரை காங். எம்.பியாக இருந்த அவர், 2014ல் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து, கர்நாடகா மேலவை உறுப்பினராக இருந்து வந்த அவர், பதவியை ராஜினாமா செய்த 30 நாட்களில் மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் காங். 23 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அவர் சூளுரைத்தார்.

இலங்கைக்கு கச்சத்தீவை காங்., தாரை வார்த்ததாக பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு, தமிழகத்தில் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செல்வப்பெருந்தகை, கச்சத்தீவு விவகாரத்தில் விஞ்ஞான ரீதியாக அணுகிய இந்திரா, கொடுக்க வேண்டியதை கொடுத்து, செழிப்பான கடல் பகுதிகளை இந்தியாவுக்கு மீட்டெடுத்தார். இந்த விவகாரத்தில் பாஜக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என சவால் விடுத்துள்ளார்.

உங்கள் போனில் பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நுழையும்போது பாஸ்வேர்டு, பிற விவரங்களை தானாக நிரப்பும் (autofill) ஆப்ஷன் சரியானது என நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். IIIT ஐதராபாத் பேராசிரியர் அங்கித் கங்வால் நடத்திய ஆராய்ச்சியில், இது மொபைல் OSஇன் பாஸ்வேர்டு நிர்வகிப்பு செயல்திறனைக் குறைப்பதும், சைபர் தாக்குதலை எளிதாக்குவதும் தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.