India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வெங்கட் பிரபு இயக்கி வரும் G.O.A.T. படத்தின் டீசரை, நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று (ஜூன் 22) வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. தற்போது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் படக்குழு ரஷ்யா செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 122
▶குறள்: காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
▶பொருள்: அடக்கத்தை சிறந்த செல்வமாக எண்ணி காக்க வேண்டும். அதைவிட சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

அனைவரும் பயன் அடையும் வகையில் ஆட்சியை நடத்தி வருகிறோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோட்டில் பரப்புரை மேற்கொண்ட அவர், “மக்களுக்கான அரசாக திமுக ஆட்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைத்து செயல்படுத்துகிறோம். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத அதிமுக, பாஜக கட்சிகள் அரசை குறை கூறுகின்றனர். அரசை குறை கூறுவதாக நினைத்து, மக்களை கொச்சைப்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

வாக்கு இயந்திரத்தில் நீங்கள் வைக்கும் ஓட்டு தான், மோடிக்கு வைக்கும் வேட்டு என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “கடந்த முறை ஒரே அணியாக இருந்த எதிரிகள், இம்முறை பிரிந்து வருகின்றனர். முதல்வருக்கும் தூக்கம் போய்விட்டதாக பிரதமர் மோடி சொல்கிறார். உண்மைதான். பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவும், கூட்டணி கட்சியினரும் தூங்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171ஆவது படத்தின் தலைப்பு குறித்து, இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ‘கழுகு’ எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படம் பான் இந்திய தரத்தில் உருவாக உள்ளதால், படத்தின் பெயரை ஆங்கிலத்தில் வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்.22ஆம் தேதி வெளியாகும்.

இன்று (ஏப்ரல் 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

டெல்லிக்கு எதிரான 13ஆவது ஐபிஎல் போட்டியில், தோனி அதிரடி காட்டியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக பேட்டிங் செய்த அவர், 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என விளாசி அசத்தினார். குறிப்பாக, கடைசி (20ஆவது) ஓவரில், 4 6 0 4 0 6 என மொத்தமாக 20 ரன்கள் குவித்து மைதானத்தையே அதிர வைத்தார். இருப்பினும், குறித்த பந்துகளில் இலக்கை எட்ட முடியாமல், சென்னை அணி தோல்வி அடைந்தது. இது சென்னை அணியின் முதல் தோல்வி ஆகும்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவரான எம்.எஸ்.ஷா., 15 வயது சிறுமியிடம் வாட்ஸ் அப் மூலமாக நான் அழைக்கும் இடத்திற்கு வந்து என்னுடன் தங்கினால் பைக் வாங்கித் தருகிறேன் என்று கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரின் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசியல் மாற்றத்திற்காக காத்திருக்கும் மக்கள், திமுகவை நிராகரிக்க வேண்டும் என அண்ணாமலை தனது Xஇல் பதிவிட்டுள்ளார். “அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக, 30% மகளிருக்கு மட்டுமே ரூ.1,000 வழங்குகிறது. இதுகுறித்து ஒரு சகோதரி முதல்வரிடம் கேட்டதற்கு, நீங்கள் இந்த கேள்வியை கேட்பதே தவறு என்று ஸ்டாலின் சொல்கிறார். இந்த ஆணவம் திமுகவின் பிறவி குணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (ஏப்ரல் 1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Sorry, no posts matched your criteria.