India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தேனியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், டிடிவி தினகரன், சசிகலா பிரச்னையில் இருந்த போது தமிழகத்தில் இருந்து தான் மட்டுமே குரல் கொடுத்ததாக கூறினார். மேலும், சசிகலா பதவியேற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது யார்? என்றும், சசிகலாவை நான்கு ஆண்டுகள் சிறையில் வைத்தது யார்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கெஜ்ரிவாலை ஏப்.15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர் திகார் சிறைக்கு மாற்றப்பட உள்ளார். இதனால், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்தால், யார் முதல்வராக பதவியேற்பது; சிறையில் இருந்தபடியே, முதல்வர் பணிகளை தொடர சட்டத்தில் இடம் உள்ளதா என ஆம் ஆத்மி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மாவட்ட முதன்மை நீதிமன்றம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கினால் அதுபற்றி யோசிக்கலாம் என்றும் தற்போது ஜாமின் பற்றி மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்களின் இடங்களில் ED. மற்றும் IT சோதனை நடத்துவதற்கு, எஸ்.ஒய். குரேஷி உள்ளிட்ட 3 முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்.ஒய். குரேஷி கூறுகையில், “தனது சோதனைகளை ED நிறுத்தி வைக்க வேண்டும். ஏனெனில், இது தேர்தலில் சமநிலையை பாதிக்கும்” என்றார். இதேபோல் பெயர் வெளியிட விரும்பாத மேலும் 2 முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ED காவலில் இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட போதிலும் முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடியே முதல்வர் பணியை அவர் தொடருவாரா என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

காங்கிரசிடம் ரூ.1,700 கோடி வரி நிலுவையை பெற கடும் நடவடிக்கை எதுவும் தேர்தல் காலத்தில் எடுக்க மாட்டோம் என I.T. தெரிவித்துள்ளது. I.T. அனுப்பிய நோட்டீசை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது I.T. தரப்பில், “தேர்தலின்போது யாருக்கும் பிரச்னை ஏற்படுத்த விரும்பவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை ஜூலைக்கு ஒத்திவைத்தார்.

கச்சத்தீவை பிரதமர் மோடி ஏன் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மீட்கவில்லை என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. அக்கட்சி செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாத்துரை கூறுகையில், “அதை 1974இல் செய்தது காங்கிரஸ்தான். ஆனால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்காமல் பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார். 2014லேயே காங்கிரஸை ஆட்சியிலிருந்து மக்கள் அகற்றிவிட்டனர். பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக என்ன செய்தது” என்றார்.

IPL இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் கணக்கைத் தொடங்காத ஒரே அணியாக உள்ளது. இதனால், ஹர்திக் பாண்டியா இன்று அணியை எப்படி வழிநடத்தப் போகிறார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், சொந்த மைதானமான வான்கடேயில் எழும் கடும் எதிர்ப்புகளையும் அவர் சமாளிக்க வேண்டும்.

பக்கத்து வீட்டுப் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை சரண்யா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சரண்யாவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர் வீட்டின் கேட் சரண்யாவின் காரில் இடிப்பதுபோல் நின்றதாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே, சரண்யாவின் குடும்பத்தினர் ஸ்ரீதேவியின் வீடு புகுந்து மிரட்டல் விடுத்ததாக சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி கூட்டணிக்கு தாம்தான் I.N.D.I.A. என பெயரிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ” I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியது நான்தான். அக்கூட்டணிக்கு பெயரிட்டதும் நான்தான். தேர்தலுக்கு பிறகு, I.N.D.I.A. கூட்டணியை பொறுப்பாக கவனிப்பேன். 400 இடங்களில் வெல்வோம் என பாஜக கூறுகிறது. மேற்கு வங்கத்தில் அக்கட்சி படுதோல்வி அடைய போகிறது” என்றார்.
Sorry, no posts matched your criteria.