News April 1, 2024

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஜீரோ

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என மாநிலங்களவை எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார். அவர் பேசுகையில், “கச்சத்தீவு விவகாரம், I.N.D.I.A. கூட்டணிக்கு சாதமாகவே இருக்கும். கேரளா, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஜீரோவே கிடைக்கும். தெலங்கானா, கர்நாடகாவில் பாஜகவை விட காங்கிரஸுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்” என்றார்.

News April 1, 2024

மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி

image

கச்சத்தீவு குறித்த மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், “பிரதமர் தனது ஆட்சியில் நடந்தது குறித்து பேச வேண்டும். சீனாவுடனான சண்டையில் 21 வீரர்கள் கொல்லப்பட்டது உண்மைதானே? சீனாவை எதிர்க்க துணிச்சல் இல்லையா? அருணாச்சலை தனது வரைபடத்தில் சேர்த்து, இடங்களுக்கு சீனா பெயரிட்டிருப்பது குறித்து பதிலளிக்க வேண்டும்” எனக் கூறினார்.

News April 1, 2024

நாடு முழுவதும் SBI வங்கி சேவைகள் முடக்கம்

image

ஏப்.1ம் தேதியான இன்று நாடு முழுவதும் வங்கிகள் செயல்பட்டாலும் இறுதி ஆண்டு கணக்குகள் முடிக்கும் பணிகள் நடந்து வருவதால், மக்களுக்கு சேவை கிடையாது. அந்தவகையில், SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஆண்டு கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று பிற்பகல் 3.30 வரை SBI மொபைல், ஆன்லைன் பேங்கிங், யூபிஐ சேவைகள் என அனைத்து வகை சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

News April 1, 2024

ரஷ்ய ராணுவத்தில் 1.50 லட்சம் பேரை புதிதாக சேர்க்க உத்தரவு

image

ரஷ்ய ராணுவத்தில் புதிதாக 1.50 லட்சம் பேரை சேர்க்க புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைனுடனான போரில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதை கவனத்தில் கொண்டு கட்டாய பயிற்சியில் இருக்கும் 1.50 லட்சம் பேரை, ராணுவத்தில் சேர்க்கும்படி புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய ராணுவத்தில் ஏற்கெனவே 13 லட்சம் பேர் உள்ள நிலையில் புதிதாக வீரர்களை சேர்க்க புதின் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 1, 2024

ரூ.16,500 கோடி சொத்துகள் வைத்திருக்கும் நடிகர்

image

உலகின் பணக்கார நடிகராக புராக் பியர்ஸ் திகழ்கிறார். மைட்டி டக்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், 17 வயதில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். பிறகு டிஜிட்டல் பொழுதுபோக்கு துறை, இணையதள விளையாட்டு நிறுவனம், பிட் காயின் நிறுவனம் உள்ளிட்டவற்றை தொடங்கி, ரூ.16,500 கோடி சொத்துகள் குவித்துள்ளார். விரைவில் ரூ. 8.000 கோடியை நன்கொடை அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.

News April 1, 2024

உதயநிதி பேசும்போது கவனம் தேவை: நீதிமன்றம் எச்சரிக்கை

image

சனாதன சர்ச்சை தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க கோரி உதயநிதி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி பொதுவெளியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்த உச்சநீதிமன்றம், அடிப்படை உரிமைகளை பாதிக்கும் பிரிவில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது ஏற்புடையதல்ல; மூன்று வாரத்தில் மனுவில் மாற்றங்கள் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

News April 1, 2024

ஊழல் புகார் மூலம் இந்திரா கருணாநிதியை மிரட்டினாரா?

image

கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்: அதை நியாயப்படுத்தும் காங்கிரசுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போதைய திமுக அரசு மீது ஊழல் புகார்கள் இருந்தது. இதனால், அரசை கலைத்து விட்டு ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் மெளனமாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

News April 1, 2024

உலகின் மிகப்பெரிய மத சுற்றுலா தலமாகும் அயோத்தி

image

உலகின் மிகப்பெரிய மத சுற்றுலா தலமாக அயோத்தி விரைவில் மாறும் என மோடி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 90ஆம் ஆண்டு தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவில் சுற்றுலாத் துறை மிக வேகமாக வளர்கிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியா வரவும், இந்தியாவை பார்க்கவும், இந்தியாவை புரிந்து கொள்ளவும் விரும்புகிறது. வரும் ஆண்டுகளில் அயோத்தி, உலகின் மிகப்பெரிய மதசுற்றுலா தலமாகும்” என்றார்.

News April 1, 2024

MI ரசிகர்கள் தாக்கியதில் CSK ரசிகர் மரணம்

image

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த சிஎஸ்கே ரசிகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் vs மும்பை போட்டியை காண மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் சிலர் ஒன்று கூடினர். அப்போது, பந்தோபந்த் (66) சிஎஸ்கே ரசிகர், ரோஹித் சர்மா அவுட் ஆனதை கொண்டாடினார். இதனால் கோபமடைந்த MI ரசிகர்கள் அவரை கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பந்தோபந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 1, 2024

குடியரசுத் தலைவரை அவமதித்த மோடி: கனிமொழி

image

குடியரசுத் தலைவர் முர்முவை நிற்க வைத்துவிட்டு பிரதமர் நாற்காலியில் அமர்ந்து அவமதிப்பு செய்துவிட்டதாக கனிமொழி விமர்சித்துள்ளார். நேற்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டபோது பிரதமர், அத்வானி நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில் முர்மு நின்றுகொண்டே இருந்தார். இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட கனிமொழி, பாஜக ஆட்சியில் சாதி, பாலினப் பாகுபாடு தொடர்கிறது என விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!