India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை , ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற RR அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் MI அணி பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் RR வெற்றிபெற்றுள்ளது. ஆனால், 2 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை ஒரு வெற்றிகூட பெறவில்லை. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயரை மாற்றினால், அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால், அது எனக்கு சொந்தமாகி விடுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், சீனா பெயரிட்ட 30 இடங்களும் இந்தியாவுக்கே சொந்தம் என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், அருணாச்சல் எல்லையில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் கண் அலர்ஜியால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இளம் சிவப்பு கண் நோய் என்று அழைக்கப்படும் இந்த அலர்ஜி கோடை வெப்பம் காரணமாக பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சூரியனிலிருந்து வெளிப்படும் புறஊதா கதிர்வீச்சு போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுகிறது. இதிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள இயற்கை பானங்களை அருந்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொலை மிரட்டல் வருவதாகக் கூறி பாதுகாப்பு கேட்ட தமிழக பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேசனுக்கு போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிட முடியாதது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வெங்கடேசன் மீது ஆந்திராவில் செம்மரக்கடத்தல் உள்ளிட்ட 49 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு பாதுகாப்பு கொடுத்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், “நோட்டாவுக்கு கீழ் வாக்கு வாங்கிய பாஜக உடன் கூட்டணி சேர்வது தற்கொலைக்கு சமம் என கூறினார் டிடிவி தினகரன். தற்போது எங்கே இருக்கிறார்? ஓபிஎஸ், டிடிவி இருவருமே தங்களை தற்காத்துக் கொள்ள பாஜகவிடம் சேர்ந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் டேனியல் பாலாஜி சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் காலமானார். சினிமாவில் வில்லனாக தோன்றிய இவர், நிஜ வாழ்க்கையில் பலருக்கும் உதவிகளை செய்துள்ளார். 48 வயதான இவர் கடைசி வரை திருமணமே செய்துகொள்ளவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என முடிவெடுத்த காரணத்தினாலேயே அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.109.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இருந்து 1822 புகார்கள் வந்ததாகவும், அதில் 1803 புகார்கள் முடித்துவைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்னுடைய பி டீம் தான் பாஜக என்பதை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டுமென சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் நாதக வேட்பாளர் சத்யபிரியாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘அண்ணாமலை என்னுடைய ஸ்லீப்பர் செல். நான் தான் உள்ளே அனுப்பி உள்ளேன். இங்கே லட்சக்கணக்கான தம்பிகள் வேலை செய்கிறார்கள். உள்ளிருந்து ஒரே ஒரு தம்பி எனக்காக வேலை செய்கிறான். இருவரும் தமிழ்த்தாய் ரத்தம். எனவே ஒரே பாதையில் பயணிக்கிறோம்’ என்றார்.

தேர்தல் நடத்தை விதிகளை காட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிவகங்கை கோட்டூரில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் திருவிழாக்களின் ஒரு பகுதியாகவே ஜல்லிக்கட்டு நடப்பதாக கூறியது. மேலும், சிவகங்கை ஆட்சியர் நாளைக்குள் முடிவெடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2030க்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களை விட புத்திசாலித்தனமாக மாறுமென்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமென டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். “Great AI Debate” கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர், ‘ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதகுலத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், எதிர்மறையான சூழலை விட நேர்மறை சூழல் அதிகமாக இருக்குமென நம்புகிறேன்’ என்றார்.
Sorry, no posts matched your criteria.