India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு கொடுப்பதாகக் கூறி இளைஞர்களை மோடி ஏமாற்றியுள்ளார் என தேமுதிக பிரேமலதா விமர்சித்துள்ளார். பெரம்பலூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், “பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த முறை பெரம்பலூர் தொகுதியில் வெற்றிபெற்ற பாரிவேந்தர் தொகுதிப்பக்கமே வரவில்லை என குற்றம் சாட்டினார்.

தென்காசி அருகே அரசுப் பள்ளியில் நாட்டு வெடிகுண்டை வெடித்து சோதனை செய்த 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். வீராணத்தைச் சேர்ந்த சுரேஷ், நாகராஜ், கார்த்தி, சங்கர் ஆகியோர் நாட்டு வெடி தயாரித்ததுடன், அங்குள்ள தொடக்கப் பள்ளியில் வெடித்து சோதித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அவர்களை கைது செய்த போலீசார் தேர்தல் நேரத்தில் அசம்பாவித செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டினரா என விசாரித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி ‘மேட்ச் பிக்சிங்’ செய்வதாகக் கூறிய ராகுல் காந்தி மீது பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ராகுல், தேர்தல் ஆணையத்தில் பாஜக தனது ஆட்களை நியமித்து ‘மேட்ச் பிக்சிங்’ செய்கிறது. இல்லையென்றால் எப்படி 400 இடங்களில் வெற்றிபெற முடியும் என விமர்சித்தார். இது தொடர்பாக பாஜக புகார் அளித்துள்ள நிலையில், ராகுல் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.

மார்ச் மாத ஜி.எஸ்.டி வசூல், கடந்தாண்டு இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 11.5% வளர்ச்சியுடன், ரூ.1.78 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் (2023-24) மொத்த ஜி.எஸ்.டி வசூல் ரூ.20.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய (2022-23) நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 11.7% அதிகமாகும். கடந்த நிதியாண்டில் 2023 ஏப்ரலில் அதிகபட்சமாக ரூ.1.87 லட்சம் கோடி வசூலானது.

ஐபிஎல் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் இன்று மும்பை-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. வான்கடே மைதானத்தில் டாஸ் வென்ற RR அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் MI அணி முதலில் களமிறங்கியது. சிறப்பாக பந்து வீசிய RR வீரர் ட்ரென்ட் போல்ட், MI அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித், நமன் திர், பிரேவிஸ் ஆகியோரை டக்கவுட்டாக்கினார். பர்கர் ஒரு விக்கெட் வீழ்த்தினார். MI அணி தற்போது வரை 3.3 ஓவர்களில் 20/4 ரன்கள் எடுத்துள்ளது.

லிங்குசாமி, கார்த்தி கூட்டணியில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘பையா’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்படவுள்ளது. சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘வாரணம் ஆயிரம்’, ‘3’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘பருத்திவீரன்’, ‘வடசென்னை’ ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல இந்த படத்திற்கும் திரையரங்குகளில் கூட்டம் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர், கூடுதல் ஊதியம் போன்ற காரணத்தால் வேறு நிறுவனங்களுக்கு மாறலாம். ஆனால், முந்தைய நிறுவனத்தில் பிடித்தம் செய்த PF தொகையை மாற்ற UAN போர்ட்டலில் ஆன்லைன் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும். அதற்கு அனுமதி கிடைத்து புதிய நிறுவனத்தின் PF கணக்கிற்கு வர சில மாதங்கள் ஆகலாம். ஆனால், தற்போதைய ஆட்டோ டிரான்ஸ்ஃபர் மூலம் அந்த வேலை சுலபமாகிவிடும் என மாத சம்பளம் வாங்குவோர் கருதுகின்றனர்.

மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்ததென அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை அடுத்த பாண்டியநல்லூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலோடு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது. மக்களுக்காக கட்சி நடத்தாமல் விளம்பரத்திற்கு ஸ்டாலின் கட்சி நடத்துகிறார். தோல்வி பயத்தில் பிதற்றி வருகிறார்’ என்றார்.

EPF தொகையை, பழைய நிறுவனத்தின் கணக்கில் இருந்து புதிய நிறுவனத்தின் கணக்குக்கு தானாகவே மாறும் வசதி அமலாகியுள்ளது. முன்னதாக அந்த தொகையை டிரான்ஸ்ஃபர் செய்வது கடும் சவாலான பணி. இந்நிலையில், புதிய பட்ஜெட் அறிவிப்பின் படி தானாகவே டிரான்ஸ்ஃபர் ஆகும் வசதி இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம், பணத்தை பரிமாற்றம் செய்வதற்காக அலைய வேண்டிய பிரச்னை எதிர்காலத்தில் அறவே இருக்காது எனத் தெரிகிறது.

தூசி, மாசுபட்ட புகை, பருவநிலை மாற்றம் போன்றவற்றால் கண் அலர்ஜி ஏற்படும். கண்களில் எரிச்சல், கண் சிவப்பாகுதல், நீர் வடிதல் இதன் அறிகுறிகளாகும். கண் அலர்ஜியால் பாதிக்கப்பட்டோர் வெளியில் செல்லும் போது கண்ணாடி அணிந்து செல்லலாம். கண்கள் மற்றும் கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் வேண்டும். அரிப்பு உணர்வை குறைக்க, கண் இமைகளில் ஐஸ்கட்டி பைகள் வைக்கலாம். கண் மருத்துவரிடம் தவறாமல் சென்று பரிசோதனை செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.