India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில், இந்திய வீரர் ரோகன் போபண்ணா முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவில் நடைபெற்று வந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் போபண்ணா, ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2ஆவது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளார். அவருடன் இணைந்து ஆடும் ஆஸி.,வீரர் மேத்யூ எப்டென் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ₹14,000 நிதியுதவி, இனி 3 தவணைகளில் வழங்கப்பட உள்ளது. கா்ப்ப காலத்தின் 4ஆவது மாதத்தில் ₹6,000, குழந்தை பிறந்த 4ஆவது மாதத்தில் ₹6,000, குழந்தை பிறந்த 9ஆவது மாதத்தில் ₹2,000 ஆக வழங்கப்படவுள்ளன. மேலும், பேறு காலத்தில் 3 மற்றும் 6ஆவது மாதங்களில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும்.

எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்தின் ஆத்மா சாந்தி அடையும் என விஜயபிரபாகரன் கூறியுள்ளார். சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “உங்களை பார்த்து பேசுவது, சொந்தக்காரர்களிடம் பேசுவது போல் உள்ளது. நாம் அனைவரும் உறவினர்கள் தான். மக்களவையில் உங்களது குரலாக எனது குரல் ஒலிக்கும். மக்களவையில் தேமுதிக உறுப்பினர் இருக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் நீண்ட நாள் கனவு” எனத் தெரிவித்துள்ளார்.

▶இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துகள், அமினோ அமிலங்கள், தாது உப்புகள் நிறைந்துள்ளன.
▶செரிமானப் பிரச்னைகள் சரியாவதுடன், வயிறு எரிச்சல், குடல் பிரச்னை போன்றவற்றிற்கு சிறந்த தீர்வளிக்கும்.
▶ஒவ்வாமை மற்றும் தோல் தொடர்பான நோய்களுக்கும் உடனடி தீர்வு தரும்.
▶வயிற்றுப் புண், குடல் புண் ஆறும்.
▶மலச்சிக்கலை நீக்கும், உடல் சோர்வை விரட்டும்.
▶ரத்த அழுத்தம் சீராகும்.

கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதையடுத்து, அவருக்குப் பதில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தாமதமாவதால் கால்ஷீட் பிரச்னை காரணமாக, இப்படத்திலிருந்து முதலில் நடிகர் துல்கர் சல்மான் விலக, அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகினார். துல்கர் சல்மானுக்கு பதில் நடிகர் சிம்பு இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் அதிரடி காட்டியுள்ளார். 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என விளாசிய அவர், தனது 5ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்ததோடு அணியின் வெற்றிக்கும் வித்திட்டார். இந்நிலையில், நடந்து முடிந்த 3 போட்டிகளில் 43(29), 84*(45), 54*(39) ரன்கள் குவித்த அவர், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவருக்கான ஆரஞ்சு கேப்பை தட்டிச் சென்றுள்ளார்.

தமிழகத்தில் இன்று 40 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, ஈரோடு-40.4, கரூர்-40.2, கோவை-38.4, தருமபுரி-38, மதுரை-39.2, நாமக்கல்-39, சேலம்-39.3, தஞ்சை-38.5, திருச்சி-39.3, வேலூர்-38.7 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே போவதால், பொதுமக்கள் மதிய வேளைகளில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

1851 – நான்காம் ராமா தாய்லாந்தின் மன்னராக முடிசூடினார்.
1902 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முழு நேரத் திரையரங்கு திறக்கப்பட்டது.
1911 – ஆஸ்திரேலியாவில் முதலாவது தேசிய மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை தொடங்கியது.
1983 – யாழ்ப்பாணம் அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயர் மாற்றம் குறித்து எம்.பி.கனிமொழி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, பாஜக அரசு அனுமதித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பாஜக?. தமிழகத்தில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் மோடி, சீன எல்லை பிரச்னை குறித்து எப்போது வாய் திறப்பார்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், லைகா நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘ரத்னம்’ படத்துக்கான நிலுவை சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, விஷால் மேல்முறையீடு செய்திருந்தார். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஷால் மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.