India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடந்த ஒரு வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று கிடுகிடுவென்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்து ₹51,440க்கும், கிராமுக்கு ₹25 குறைந்து ₹6,430க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை 40 காசுகள் அதிகரித்து கிராம் ₹82க்கும், கிலோ வெள்ளி ₹400 அதிகரித்து ₹82,000க்கும் விற்பனையாகிறது.

ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மும்பைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இது அந்த அணியின் 3வது தொடர் வெற்றி. இதனால் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 2 போட்டிகளில் விளையாடி அவற்றை வென்ற கொல்கத்தா 2வது இடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் விளையாடி 2இல் மட்டும் வென்ற சிஎஸ்கே 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்ப பெற மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், “கச்சத்தீவு, இந்தியாவுக்கு மீண்டும் வேண்டும். இதுவே பாஜகவின் நிலைப்பாடு. இந்திய மீனவர் நலனைக் காக்க, கச்சத்தீவை மீண்டும் பெற மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை திருப்பித் தருமாறு இந்தியா இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி என்று திட்டவட்டமாக கூறிய அவர், இந்தியா கச்சத்தீவை திருப்பிக் கேட்டால் இலங்கை தக்க பதிலளிக்கும் என்றும் தெரிவித்தார். கச்சத்தீவை மீட்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக அண்ணாமலை கூறிய நிலையில், இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

மனைவி செளமியாவை தருமபுரி தொகுதி வேட்பாளராக நிறுத்தியது ஏன்? என்பது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “அரசியலில் குடும்பத்தினரை கொண்டு வரக்கூடாதென என் தந்தை 44 ஆண்டுக்கு முன்பு முடிவெடுத்தபோது இருந்த நிலவரம் வேறு. அது தற்போது மாறிவிட்டது. நான் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்தேன். அதுபோலவே எனது மனைவியும்” என்றார்.

ஐபிஎல் தொடரில் MI கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியா இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை. குஜராத்தின் கேப்டனாக முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்த ஆல்ரவுண்டர், மும்பை கேப்டனாக தோல்வியடைந்து வருகிறார். களத்தில் ஹர்திக் சரியான முடிவுகளை எடுக்கத் தவறியதும், வீரர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தவறியதுமே தோல்விகளுக்கு காரணம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கோவையில் பரப்புரை மேற்கொண்ட அண்ணாமலை, ஒரு டாஸ்மாக் கடையை அல்ல, எல்லா டாஸ்மாக் கடையையும் அகற்ற அரசியலுக்கு வந்துள்ளோம். பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடன் இது நடக்கும் என்று உறுதியளித்தார். மேலும், குடியினால் எல்லோருக்கும் பிரச்னை ஏற்படும்; எனவே, கள் குடியுங்கள், டாஸ்மாக் சரக்கை குடிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கிய அவர், குடிக்கு அடிமையானவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்படும் என்றார்.

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் மக்கள் யுபிஐ மூலம் ரூ.19.8 லட்சம் கோடி பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை எடுத்துச் செல்ல விரும்பாதோர் யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்கின்றனர். இதுபோல மார்ச்சில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1,344 கோடி பரிவர்த்தனைகள் செய்திருப்பதும், ரூ.19.8 லட்சம் கோடி பரிமாற்றம் செய்திருப்பதும் புள்ளி விவரம் மூலம் தெரிய வருகிறது.

பாஜக உளவியல் போரில் ஈடுபட்டிருப்பதாக பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த தேர்தலை விட பாஜகவால் கூடுதலாக 10-20 தொகுதிகளில் வெல்ல முடியும். ஆனால் 370 இடங்களில் பாஜக மட்டும் வெற்றி பெறும் என கூறுவது, ஒரு உளவியல் போர் ஆகும். இதனால் பொதுமக்களின் கண்ணோட்டத்தை, பாஜக ஜெயிக்குமா, தோற்குமா என்பதிலிருந்து, 370ஐ கைப்பற்றுமா, இல்லையா என்பதற்கு மாற்றிவிட்டது” என்றார்.

அல்லு அர்ஜூனை வைத்து அட்லி இயக்கவுள்ள புதிய படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு முன்னணி நடிகர்களுடன் த்ரிஷா தொடர்ந்து நடித்து வருகிறார். லியோ, விடாமுயற்சியை தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லாலுடன் ’ராம்’, சிரஞ்சீவியுடன் ‘விஸ்வாம்பரா’ என கமிட் ஆகி உள்ளார். தமிழை கடந்து மற்ற மொழி படங்களிலும் த்ரிஷாவின் கிராப் உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.