India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நேருவும், இந்திராவும் கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பாஜக பேசுவதாக கூற முடியாது என்றும், நாட்டின் ஒரு பகுதி இழக்கப்பட்டதை குறித்து பேச சுப முகூர்த்த தினம் தேவையில்லை எனவும் கூறினார். கச்சத்தீவு வழங்கப்பட்ட போது, கூட்டணியில் இருந்த திமுக, காங்., தற்போதும் கூட்டணியில் உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2019இல் இங்கு போட்டியிட்ட இவர், 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது முறையாக இங்கு களம் காண்கிறார். இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார். இதனால், இந்த தொகுதியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வயநாட்டில் வரும் 26ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் சந்தித்து பேசி வருகின்றனர். கெஜ்ரிவால் திகார் சிறையில் இருப்பதால், ஆட்சி நிர்வாகத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை, தேர்தல் பணிகளிலும் ஈடுபட முடியவில்லை. இதனால், முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்வார் என்றும் அவருக்கு பதில் சுனிதா புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதிக்கு மாநில அரசு கணக்கு கூற வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு ரூ.5,000 கோடி சிறப்பு நிதி வழங்கியதாக கூறிய அவர், வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் ரூ.900 கோடி நிதி ஒதுக்கியதாகவும் கூறினார். மத்திய அரசு வழங்கிய ரூ.5,900 கோடியை தமிழ்நாடு அரசு என்ன செய்தது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவை விமர்சனம் செய்வதால் அக்கட்சி வளர்ந்து விட்டதாக அர்த்தம் இல்லை என முத்தரசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் 2ஆம் இடத்துக்கு வர முடியாது, பல தொகுதிகளில் பாஜகவுக்கு தோல்வியோடு, டெபாசிட்டும் கிடைக்காது என்று கூறிய அவர், ஆட்சியில் இருப்பதால் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய துடிக்கும் பாஜகவுக்கு தமிழக மக்கள், மக்களவைத் தேர்தலில் தக்க பதிலடி தருவார்கள் எனக் கூறினார்.

சுந்தர்.சி தொடர்ந்து பேய் படம் எடுக்க தனது மகள்கள்தான் காரணம் என அவரது மனைவி குஷ்பு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முறையில் எப்படி ரசிகர்களை மகிழ்விப்பது என யோசித்துக் கொண்டே இருப்பார் என கூறிய அவர், தங்கள் மகள்கள் இருவருக்கும் ஹாரர் படம் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால்தான் அந்த ஜானரிலேயே தொடர்ந்து படம் எடுப்பதாக தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இக்கட்சி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அமமுக உடன் கூட்டணி அமைத்து, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறை அமமுக பாஜக உடன் கூட்டணி அமைத்ததால், அக்கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஓவைசி-க்கு ஓரளவுக்கு ஆதரவு இருக்கிறது.

மும்பையின் ஜெரால்டு கோட்ஸி நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசி சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 157. 4 கி.மீ வேகத்தில் பந்துவீசி அவர் இந்த சாதனை படைத்தார். லக்னோவின் மயங்க் யாதவ், பஞ்சாபிற்கு எதிராக நேற்று முன்தினம் 155.8 கி.மீ பந்து வீசியிருந்தார். ஐபிஎல் வரலாற்றில் ஆஸி., வீரர் ஷான் டைட் கடந்த 2011ம் ஆண்டு 157.71 கி.மீ வேகத்தில் பந்து வீசி முதலிடத்தில் உள்ளார்.

இந்தியாவில் ஒரே மாதத்தில் 76 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பல கோடி பேர் தங்களது தகவல் தொடர்புக்கு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தேவையற்ற, போலிச் செய்திகள், ஆபாச வீடியோக்கள் பகிர்வது தெரிந்தால், அந்த கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கி வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 76.28 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா. கண்ணழகால் ரசிகர்களை ஈர்த்த மீனா, முன்னணி நடிகர்களான ரஜினி, விஜயகாந்த், அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். சமீபத்தில் கணவரை இழந்த இவர், தற்போது ரியாலிட்டி ஷோ நடுவராக இருந்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.35 – ரூ.40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு சைதாப்பேட்டையில் பிரம்மாண்ட வீடும் இருக்கிறது.
Sorry, no posts matched your criteria.