India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி அரிய சாதனையை நேற்று படைத்துள்ளார். ஆம்! ஒரே மைதானத்தில் 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். RCBயின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் கிங் இந்த மைல்கல்லை எட்டினார். ரோஹித் சர்மா (வான்கடே-80 போட்டிகள்), தோனி (சேப்பாக்-69 போட்டிகள்) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் சாண்டி மாஸ்டர் மாஸ் காட்டி இருப்பார். விக்ரம் படத்தில் பத்தல பத்தல பாடலுக்கு சூப்பராக நடனம் அமைத்திருந்தார். லியோ படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்நிலையில் தலைவர் 171 படத்தில் நடிகரா? நடன இயக்குநரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சாண்டி, சிறப்பான சம்பவம் காத்திருக்கிறது என்றார். மொத்தத்தில் ரஜினி படத்தில் சாண்டி இணைவது உறுதியாகியுள்ளது.

பெரியார் மண்ணில் பாஜகவின் வேஷம் எடுபடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சித்துள்ளார். கச்சத்தீவு விவகாரத்தை தற்போது பாஜகவினர் விவாதப் பொருளாக கொண்டு செல்ல பார்க்கிறார்கள். 10 வருடங்களாக ஆட்சி செய்கின்ற பாஜக கச்சத்தீவை மீட்டு கொண்டு வர வேண்டியது தானே? என அவர் கேள்வி எழுப்பினார். தேர்தல் வரும் போது மட்டுமே பாஜகவினருக்கு தமிழகம் நினைவுக்கு வரும் என்ற அவர், பாஜக தேர்தலில் படுதோல்வி அடையும் என்றார்.

சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நலம் ஆபத்தில் உள்ளதாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி கவலை தெரிவித்துள்ளார். தீவிர சர்க்கரை நோய் உள்ளநிலையில், தொடர்ந்து 24 மணி நேர பொதுசேவையில் ஈடுபட்ட அவரின் உடல் எடை, கைதுக்கு பின் 4.5 கிலோ குறைந்துள்ளதாக கூறினார். முன்னதாக, அவருக்கு சர்க்கரை அளவு குறைந்ததாகவும், சிறையில் நேற்று அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சென்னை மயிலாப்பூரில் பணப்பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ₹2.5 கோடி வழிப்பறி செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையில் ₹2.5 கோடியை பாஜக வேட்பாளர் ஒருவருக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது . ஆனால், அந்த பணம் பாஜக வேட்பாளருக்கு தொடர்புடையது என்பதால், காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ புகாரில் ₹2 லட்சம் மட்டுமே வழிப்பறி என குறைத்து காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பரப்புரையில் ஈடுபட்ட முதல்வரோடு பள்ளி மாணவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். திருவண்ணாமலை தேரடி வீதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் நடைபயணமாக வாக்கு சேகரித்தார். அப்போது பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில், முதல்வரை கண்டதும் கைகாட்டினர். அவர்களை அருகில் அழைத்த முதல்வர் எந்த வகுப்பு படிக்கிறீர்கள் என்று கேட்டு அனைவரிடம் சில வார்த்தைகள் பேசினார்.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ₹4 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் நடத்திய சோதனையில், சென்னையில் ₹2.60 கோடி, சேலத்தில் ₹70 லட்சம், திருச்சியில் ₹55 லட்சம் பறிமுதல் செய்துள்ளதாகவும், இப்பணம் முறையான ஆவணங்கள் இல்லாமல், கணக்கில் வராத பணமாக உள்ளதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

கமலின் பாபநாசம், லிங்குசாமியின் தி வாரியர், மோகன்லாலின் லூசிஃபர் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுஜித் வாசுதேவ், பிரபல நடிகை மஞ்சு பிள்ளையை காதலித்து திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து செய்துள்ளனர். மஞ்சு பிள்ளை, தமிழில் சிநேகிதியே , மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை ஷைனி வில்சன் ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 2028 வரை நான்கு ஆண்டு காலம் அவர் இந்த பொறுப்பில் இருப்பார். 1986இல் சியோல் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் 4×400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றவர். இதேபோல், தெற்காசிய ஃபெடரேஷன் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ளார். மேலும், பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றுள்ளார்.

மோடியை சீனாவின் தூதராக நியமிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அருணாச்சல் பிரதேசம் முதல் லடாக் வரை இந்திய பகுதிகளை சீனா தட்டிப் பறிக்கிறது. ஆனால், குறிப்பிட்ட அந்த பகுதிகளுக்கு சீனா வரவில்லை, நாங்களும் போக மாட்டோம் என மோடி கூறுவது விந்தையாக உள்ளதாக அவர் X-இல் கிண்டலடித்துள்ளார். முன்னதாக அருணாச்சலின் சில பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியது.
Sorry, no posts matched your criteria.