India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேற்கு வங்கத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விறுவிறுப்பாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஜல்பைகுரியில் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்குள்ள டீ கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் உப்பின் பங்கு அதிகம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமாக உள்ள இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 2 கிராமுக்கும் குறைவாகவே உப்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு கிராம் அதிகப்படியான உப்பும் உடல் பருமன் ஏற்படும் அபாயத்தை 15% அதிகரிக்கிறது.

ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 17ஆவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏப்.5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விற்கப்படும் என CSK நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுவர் விளம்பரத்திற்கு அனுமதிக்காவிட்டால் ₹1,000 கிடைக்காது என திமுகவினர் மிரட்டுவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர், சின்னம் குறித்து வீடுகளின் சுவர்களில் வரைந்து விளம்பரம் செய்வார்கள். அதற்கு அனுமதிக்காத வீடுகளுக்கு ₹1,000 வழங்கப்படாது என பெண்களை திமுகவினர் அச்சுறுத்துவதாகக் கூறிய இபிஎஸ், தமிழகத்தில் அதிமுக அலை வீசுகிறது எனக் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியை அழிக்கும் நோக்குடன் கெஜ்ரிவாலை ED கைது செய்ததாக AAP தரப்பினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தபின் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது என வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார். மேலும், தன்னை காவலுக்கு அனுப்பியதை கெஜ்ரிவால் எதிர்க்காததால், அவர் தற்போது தொடர்ந்த மனு பயனற்றதாகிவிட்டது என்பதை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி இலங்கைக்கு திரும்பிச் சென்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோரிடம் இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்து விமானம் மூலம் கொழும்பு சென்ற அவர்களை அழைத்துச் சென்ற போலீசார், 32 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு சென்றது எப்படி என விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கதை பிடிக்காததாலும், கால்ஷீட் பிரச்னையாலும் நடிகர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை நழுவ விடுவார்கள். அந்த வகையில் விஜய் நடிப்பதாக இருந்து சில காரணங்களால் வேறு நடிகர்களுக்கு கைமாறிய படங்களும் உண்டு. அதன்படி, உன்னை நினைத்து, காக்க காக்க, அனேகன், முதல்வன், தீனா, பொன்னியின் செல்வன், சண்டக்கோழி, ஆட்டோகிராஃப், சிங்கம், ரன், தூள், உள்ளத்தை அள்ளித்தா போன்ற வெற்றி திரைப்படங்களை விஜய் தவறவிட்டதாக கூறப்படுகிறது.

தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வசிக்கும் தமிழர்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது. தைவான் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் ரமேஷ் கூறுகையில், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தாய்பெய், தாய்ச்சு, ஸின்ச்சு ஆகிய நகரங்களில் பெரிய பாதிப்பு இல்லை என்றார். இருப்பினும் நிலச்சரிவில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

திருச்சியில் செயல்பட்டு வரும் IIM இல் ஆசிரியர் அல்லாத பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக அனுபவம், வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <

மோடி தலைமையிலான ஆட்சியில் கிராமங்கள் மாற்றம் கண்டுள்ளதாக நட்டா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆயிரம் நாள்களில் 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியுள்ளதாக கூறினார். 3,50,000 கிராமங்களுக்கு சாலை வசதியும், 12 கோடி கழிவறைகளும் கட்டிக் கொடுத்துள்ளாதாக தெரிவித்தார். இலவசமாக ரேஷன் பொருட்களை கொடுத்து 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.