News April 3, 2024

$100 பில்லியன் கிளப்பில் இணைந்த அம்பானி

image

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட, ஆசிய அளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் தொடர்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில், 116 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் அம்பானி முதலிடத்தில் உள்ளார். இதன்மூலம் 100 பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். $84 பில்லியனுடன் அதானி 2ஆவது இடத்தில் உள்ளார்.

News April 3, 2024

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பார்த்தனர்

image

திமுக அரசின் சீரிய நடவடிக்கையால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அதிமுக, பாஜக முயற்சி செய்ததாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் பறிபோனதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்திற்கு சேர வேண்டிய வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு தற்போதுவரை வழங்கவில்லை எனக் கூறினார். மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுகிறார்.

News April 3, 2024

மீண்டும் ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோ

image

கால்பந்து உலகின் ஜாம்பவான் ரொனால்டோ தொடர்ச்சியாக 2 போட்டிகளில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். சவுதி ப்ரோ லீக் தொடரில் அல் நாசர் அணியின் கேப்டனாக செயல்படும் ரொனால்டோ, அபா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்தார். இதன்மூலம் 8-0 என்ற கோல் கணக்கில் ரொனால்டோ அணி வென்றது. இதேபோல 3 நாட்களுக்கு முன் Al Tai அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

News April 3, 2024

தமிழகத்தில் பொளந்து கட்டும் வெயில்

image

தமிழ்நாட்டின் ஈரோடு மாநகரில் இன்று 41.2 டிகிரி வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது. கரூர் பரமத்தியில் 41 டிகிரி, தர்மபுரியில் 39.8 டிகிரி, திருச்சி 39.7 டிகிரி, மதுரை 39.5 டிகிரி, திருப்பத்தூர் 39.4 டிகிரி, சேலம் 39.2 டிகிரி என அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. சென்னையில் 38.2 டிகிரி வெப்பம் பதிவானது. ஊட்டியில் 27.9 டிகிரியும் கொடைக்கானலில் 21.8 டிகிரியும் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.

News April 3, 2024

புதிய உச்சத்தை தொட்ட மின்சாரப் பயன்பாடு

image

தமிழகம் முழுவதும் நேற்றையை மின் நுகர்வு 430.13 மில்லியன் யூனிட் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையால் மின்வெட்டு இல்லாத நிலையை தமிழகம் எட்டியுள்ளதாகவும், கூடுதல் தேவை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

IPL: கொல்கத்தா அணி பேட்டிங்

image

விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற KKR அணி புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி ஆடிய 3 போட்டியில் 1 வெற்றியுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News April 3, 2024

ஓய்வு பெற்றார் தாராள மயமாக்கலின் சிற்பி

image

ராஜ்யசபா எம்.பி.யாக 33 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெற்றார். 1991 – 96ஆம் ஆண்டு வரை மத்திய நிதியமைச்சராக இருந்த இவர், தாராள மயமாக்கல் கொள்கையை அறிமுகம் செய்தார். 2004 – 2014ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் 2 முறை பிரதமராக இருந்த இவர், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், குழந்தை கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களை கொண்டு வந்தார்.

News April 3, 2024

வெயிலில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு

image

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் வெயிலில் மயங்கி விழுந்து ஜோஸ்பின் மேரி (40) என்ற பெண் உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டுக்கான கோடை காலம் அதிக வெப்பத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல்லில் இன்று வெயில் 39 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது. இந்த வெயிலில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்லவும்.

News April 3, 2024

பிரபுதேவாவுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் படக்குழு

image

டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட பிரபுதேவா இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய்யின் “The GOAT” படக்குழுவினர் பிரபுதேவாவிற்கு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இப்படத்தில் பிரபுதேவாவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

News April 3, 2024

நிதி நிறுவன அதிபர் வீட்டில் ₹15 கோடி பறிமுதல்?

image

நாமக்கல்லில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ₹15 கோடி கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சந்திரசேகர் என்பவர் வீட்டில், பணப்பட்டுவாடா செய்வதாக வந்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!