India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பட்டாவில் திருத்தம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பது, அரசு அலுவலகங்களுக்கு செல்வது என இனி அலைய வேண்டாம். திருத்தம் செய்ய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, ஏதேனும் ஒரு அடையாள ஆவணம், சொத்து குறித்த பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்றால் போதும். அனைத்து துறை அதிகாரிகளும் அங்கு இருப்பதால் வேலை உடனடியாக முடிந்து விடுகிறதாம்.
தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஆச்சரியகரமான மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்கள் சிலரை 72 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி சோதித்தனர். அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத் தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்பட்டதை கண்டறிந்தனர். நீங்களும் ட்ரை பண்ணலாமே?
திமுக கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை பலரது கண்களை உறுத்துவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் இந்திய கம்யூ., மாநில மாநாட்டில் பேசிய அவர், கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதாகவும், எப்படியாவது பிரிந்து விட மாட்டார்களா என புலம்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், தங்களுக்குள் இருக்கும் கொள்கை நட்பை, தலைமுறை கடந்தும் சொல்லியாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
புடின் உடனான பேச்சுவார்த்தைக்கு பின்பு இந்தியா மீதான வரிவிதிப்பு குறித்து டிரம்ப் பேசியுள்ளார். ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளான சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு மேலதிக வரிவிதிக்க போவதில்லை எனவும், அப்படி வரி விதித்தால் அந்நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுடைய வரிவிதிப்புகளுக்கு பின்னர் ரஷ்யா, இந்தியா போன்ற கஸ்டமரை இழந்துள்ளதாகவும் கிண்டலாக கூறியுள்ளார்.
BJP-யை கழற்றி விட்டுவிட்டு விஜய் உடன் கூட்டணி வைக்க EPS விரும்புவதாக ADMK Ex MP கே.சி.பழனிசாமி புதிய குண்டை போட்டுள்ளார். தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், BJP காட்டும் பாதையில் பயணிக்க TTV தினகரன் தயாராகிவிட்டார் என்றும் கூறியுள்ளார். OPS-ன் அரசியல் எதிர்காலம் இனி கேள்வி குறி என்ற அவர், OPS, CM ஸ்டாலினை சந்தித்தது மாபெரும் தவறு என உடைத்து கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
கர்நாடகாவில் விரைவில் மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என அம்மாநில CM சித்தராமையா தெரிவித்துள்ளார். கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, சமீபத்தில் அறிக்கையை சமர்பித்தது. அதில், இரு மொழிக் கொள்கை அவசியம் என கூறியிருந்த நிலையில், சித்தராமையா இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், சமீபத்தில் மாநிலக் கல்வி கொள்கை வகுக்கப்பட்டது.
தம்பதியர், வாரத்துக்கு ஒரு முறையாவது தாம்பத்ய உறவில் ஈடுபடுவது உடல்நலத்தை மேம்படுத்தும் என கனடாவின் டல்ஹவுசி பல்கலை., ஆய்வுமுடிவு கூறுகிறது. தம்பதியரின் ஆர்வத்தை பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனினும், எண்ணிக்கை அதிகரிப்பால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரிய மாற்றம் இருக்காதாம். முழு ஈடுபாட்டுடன், காதலுடன், பரஸ்பர விருப்பத்துடன் உறவில் ஈடுபட்டால் ஆரோக்கியத்துடன் காதலும் நிலைக்கும்.
CM ஸ்டாலினை சந்தித்து நன்றி சொன்னது உண்மையிலேயே துப்புறவு தொழிலாளர்கள் தானா என சீமான் சந்தேகம் எழுப்பியுள்ளார். இந்த படத்திற்கு மேயர் பிரியா இயக்குநர், அமைச்சர் சேகர்பாபு இயக்கம் மேற்பார்வை எனவும், படம் ஃபிளாப் ஆகிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ஆட்சியாளரை குறை சொல்லி பயனில்லை எனவும், இந்த ஆட்சியாளர்களை அதிகாரத்தில் அமர வைத்த மக்கள்தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
உடலை உறுதியாக்கி சுறுசுறுப்பாக்கும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் முன்: *10 நிமிடமாவது வார்மிங் பயிற்சிகள் செய்யவும் *ஷாக் அப்சர்பிங் ஷூக்கள் அணிவது நல்லது *சமதள தரையில் செய்ய வேண்டும் *ஸ்கிப்பிங் செய்ய மண் தரை சிறந்தது *தொடங்கும் போது உடலில் இருந்து உங்கள் கைகள் 45 டிகிரி கோணத்தில் தள்ளி இருக்க வேண்டும் *குதிக்கும் போது முதுகு நிமிர்ந்து இருக்க வேண்டும், வளைந்திருந்தால் முதுகுவலி ஏற்படும்.
ரசிகர்களை வைத்து தேர்தலில் வெற்றி கணக்கு போடுவது தவறானது எனவும் எல்லோரும் MGR ஆக முடியாது என்றும் விஜய்யை செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 ஜனவரியில் தான் யார் யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்ய முடியும் என்றார். மேலும், தேர்தலுக்கு 10 நாள்கள் இருக்கும்போது கூட்ட கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என சூசகமாக கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.