News April 6, 2024

திமுக அரசு மக்களுக்கு நன்மை எதுவும் செய்யவில்லை

image

‘ஜனவரி, பிப்ரவரி’யை தவிர அனைத்து வரிகளையும் திமுக அரசு உயர்த்தி விட்டதாக அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளரும் நடிகருமான சிங்கமுத்து கூறியுள்ளார். சிவகங்கையில் பேசிய அவர், “திமுக பொதுமக்களிடம் வசூலிக்கும் வரிப் பணத்தில், மக்களுக்கு நன்மை எதுவும் செய்வதில்லை. திமுக ஆட்சியில்தான் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு வந்தன. திமுக அரசு மக்களை போதைக்கு அடிமையாக்கிவிட்டது” என்றார்.

News April 6, 2024

விபத்தில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைகள்

image

பாக்., கிரிக்கெட் வீராங்கனைகள் பயணித்த கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் பிஸ்மா மரூப், குலாம் பாத்திமா ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக பாக்., கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும், மருத்துவ அறிக்கைக்குப் பின்னே இவர்கள் போட்டியில் பங்கேற்பது குறித்து தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளது.

News April 6, 2024

ஆதார் கட்டாயம் என்ற நடைமுறை நீக்கப்படும்

image

மக்களவைத் தேர்தலுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் மாநில அரசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆளுநர் பதவி நீக்கப்படும். 100 நாள்கள் வேலைத்திட்டம் 200 நாள்கள் ஆகவும், சம்பளம் ரூ.700ஆகவும் உயர்த்தப்படும். அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2024

மகளிருக்கு மாதம் ரூ.900 சேமிப்பு

image

இலவசப் பேருந்து பயணத் திட்டத்தால் ஒவ்வொரு மகளிரும் மாதம் ₹900 சேமிப்பதாக உதயநிதி கூறியுள்ளார். சென்னையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘ ஏற்கெனவே திமுக ஆட்சியில் மகளிருக்கு ₹1,000 வழங்கப்படுகிறது. மேலும், தேர்தல் முடிந்த பிறகு விடுபட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ₹1000 வழங்கப்படும். இதன் மூலம், திமுக அரசு மாதந்தோறும் பெண்களுக்கு ₹1,900 வரை பணப் பலன்களை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

ராஜ்புத் சமூகத் தலைவர் மஹிபால் கைது

image

ஸ்ரீராஜ்புத் கர்னி சேனாவின் தேசியத் தலைவர் மஹிபால் மக்ரானாவை அகமதாபாத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக தலித் மக்கள் போராடிய போது, இந்திய க்ஷத்ரிய ராஜ குடும்பங்கள் அந்நியர்களான அவர்களுடன் திருமண உறவு கொண்டிருந்தனர் என மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கூறியிருந்தார். ரூபாலாவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தைக் கண்டித்து மஹிபால்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது கவனிக்கத்தக்கது.

News April 6, 2024

மதவாத பாஜகவை வேரூன்ற விடமாட்டோம்

image

மதவாத பாஜகவை கேரளாவில் வேரூன்ற விடமாட்டோமென கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஆலப்புழாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘பாஜகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கத்துடன் தேசிய அளவில் தீவிரமாக இணைந்துள்ளோம். கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் தோல்வியை தழுவுவதுடன், 2ஆவது இடத்தை கூட பாஜக பெறாது. இது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் காங்கிரஸுக்கு வாக்களிப்பதில் பலனில்லை’ என்றார்.

News April 6, 2024

மணிகண்டனிடம் கதைக் கேட்ட விஜய்

image

விஜய்யின் ‘தளபதி 69’ படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வெற்றிமாறன், அட்லீ, ஷங்கர், லோகேஷ் என பட்டியல் நீண்டாலும் எதுவும் உறுதியாகவில்லை. இந்நிலையில் நடிகர் மணிகண்டனிடம் விஜய் கதை கேட்டதாக கூறப்படுகிறது. ஒரு மணிநேரம் பொறுமையாக கதை கேட்ட விஜய், கதை நன்றாக இருப்பதாகவும், இளம் நடிகர்கள் யாராவது நடித்தால் சிறப்பாக வரும் என தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News April 6, 2024

image

https://dynrjberp8k9n.cloudfront.net/sticky_jsps/CricScoreNew.jsp?id=1398

News April 6, 2024

காதல் நோயால் பாதிக்கப்பட்ட சீன மாணவர்

image

சீனாவின் ஜியாங்சு பல்கலைக்கழக மாணவர் லியு (20) விசித்திரமான காதல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கல்லூரியில் தான் மிகவும் அழகான நபர் என்றும் மாணவிகள் அனைவரும் தன்னை விரும்புவதாகவும் நினைத்து அவர் தனது மனதை சாந்தப்படுத்தி வந்திருக்கிறார். இந்த நோய் பாதிப்பால், கவனச் சிதறல் உள்ளிட்ட பிரச்சினைகளை அவர் சந்தித்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு தற்போது டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

News April 6, 2024

ஐபிஎல் தொடரில் இருந்து ஹசரங்கா விலகல்

image

SRH அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்கா நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் போட்டியின்போது ஹசரங்காவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. தற்போது காயம் முழுமையாக குணமடையாததால் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது SRH அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!