News April 7, 2024

MI Vs DC : வெல்லப்போவது யார்?

image

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் & டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் MI 18 முறையும், DC 15 முறையும் வென்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் MI, DC அணிகளுக்கு இடையேயான போட்டி சேஸிங்குக்கு கைக்கொடுக்கும் வான்கடே மைதானத்தில் இன்று இரவு 3.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.

News April 7, 2024

கல்லூரிகளுக்கு விடுமுறை தேதி வெளியானது

image

கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பை கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் வேலை நாட்கள் பல்கலைக்கழகங்கள் நிர்ணயம் செய்ததற்கு குறையாமல் இருக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள் இறுதி நாட்களை நிர்ணயம் செய்துகொள்ளலாம். கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் ஜூன் 19 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News April 7, 2024

ஷாருக்கானை புகழ்ந்த நயன்தாரா

image

பாலிவுட் நடிகர் ஷாருக்கானை நயன்தாரா புகழ்ந்து பேசியுள்ளார். ஜவான் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இது இந்தியில் நயன்தாராவின் முதல் படமாகும். இந்தப் படத்தில் ஷாருக்குடன் நடித்தது குறித்து பேட்டியளித்துள்ள நயன்தாரா, ஷாருக்கானின் ரசிகை தாம் என்றும், அவரின் படங்களை பார்த்தே வளர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். பெண்களை மிகவும் மதிப்பவர் ஷாருக்கான் என்றும் அவர் கூறியுள்ளார்.

News April 7, 2024

டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு; விவசாயிக்கு இல்லையா?

image

டாஸ்மாக் சரக்குக்கு பாதுகாப்பு தரும் அரசு விவசாய பொருட்களை பாதுகாக்க எதையும் செய்யவில்லை என சீமான் குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகள் இந்த நாட்டில் தங்களின் உரிமைக்காக டெல்லியில் போராடுகிறார்கள். மதுவை பாதுகாக்க போலீஸ் காவல் போடமுடிந்த அரசால், நெல்லை பாதுகாக்க முடியாமல் மழையில் நனைய விட்டுள்ளார்கள் என்று விமர்சித்தார். மேலும், விவசாயி வளராமல் ஒரு நாடு நிச்சயம் வளராது என்றும் அவர் கூறினார்.

News April 7, 2024

குஜராத் மாடலை விட திராவிட மாடல் சிறந்தது

image

குஜராத் மாடலை விட திராவிட மாடல் சிறந்தது என்று மக்கள் நீதி மைய கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். அப்போது, மத்திய பாஜக அரசு ஒரே நபருக்கு ₹1000 கோடியை கொடுத்துள்ளதாகவும், திமுக அரசு தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு தலா ₹1,000 கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

News April 7, 2024

இபிஎஸ்ஸின் அறிவுத் திறனை விமர்சித்த முதல்வர்

image

கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்ற சொல்லும் அளவுக்கு தான் இபிஎஸ்ஸுக்கு அறிவுத் திறன் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பாஜக வகுத்த திட்டத்தின் படி, திமுகவுக்கு வரும் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் அதிமுக தனியாக போட்டியிடுகிறது. உங்களால் அதிமுக வாக்குகளையே வாங்க முடியாதே? அப்புறம் எப்படி திமுக வாக்குகளை பிரிக்க போகிறீர்கள் என்று முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 7, 2024

பென் ஸ்டோக்ஸ் விலகியதே சரி

image

டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகும் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸின் முடிவிற்கு முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஸ்டோக்ஸ் என்ன முடிவு எடுத்தாலும், அது சரியான முடிவாகவே இருக்கும். இந்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாடினால், உடல் தகுதியில் கவனம் செலுத்துவது கடினம் எனத் தெரிந்ததால் தான் அவர் விலகியுள்ளார்” என்றார்.

News April 7, 2024

இதயத்தில் எழுந்தருளிய இறைவன்

image

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள இருதயாலீஸ்வரர் கோயில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜசிம்ம பல்லவ மன்னரால் கட்டப்பட்டது. தீவிர சிவபக்தரான பூசலார் தனது இதயத்தில் கட்டிய கோயிலில் முதலில் எழுந்தருள போவதாக சிவன் கூறியதால், அவரின் பெருமை அறிந்து இக்கோயிலை கட்டித் தந்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. இக்கோயிலில் வழிபட்டால் இதயம் தொடர்பான நோய்கள் அனைத்தும் தீரும் என நம்பப்படுகிறது.

News April 7, 2024

Apply Now: மத்திய அரசில் 490 பணியிடங்கள்

image

இந்திய விமான நிலைய ஆணையம் 496 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Junior Executive பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: UG Degree, MCA, ஆங்கிலப் புலமை. வயது வரம்பு: 22-27. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 5. தேர்வு: எழுத்து தேர்வு. ஊதிய வரம்பு: ₹40,000- ₹1,40,000/-. கூடுதல் தகவல்களுக்கு <>AAI<<>> இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

News April 7, 2024

எல்.முருகனை யாரென்றே மக்களுக்கு தெரியாது

image

நீலகிரியில் அதிமுக, திமுக இடையே தான் போட்டி இருப்பதாக அத்தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். இங்கு போட்டியிடும் எல்.முருகனை யார் என்று கூட மக்களுக்கு தெரியாது என்று கூறிய அவர், குழந்தைகளை கேட்டால் கூட என் பெயரை கூறுவார்கள் என்றார். மேலும், பேப்பரில் மட்டும் தான் மும்முனைப் போட்டி இருப்பதாகவும், நிஜத்தில் திமுக, அதிமுக மட்டுமே களத்தில் உள்ளதாகவும் அவர்
பாஜகவை விமர்சித்தார்.

error: Content is protected !!