News April 7, 2024

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

image

சென்னையை போல கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் தமிழகத்தின் 2வது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக கோவை மைதானம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

News April 7, 2024

பாஜக இதை ஆயுதமாக பயன்படுத்துகிறது

image

தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படவில்லை என டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி மீது பாஜக புகார் அளித்தால் 12 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையம், பாஜக மீது ஆம் ஆத்மி புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றார். பாஜகவின் ஆயுதமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், உரிய நீதி கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News April 7, 2024

பெங்களூரு அணியின் தோல்விக்கு இதுவே காரணம்

image

ராஜஸ்தானிடம் பெங்களூரு தோல்வியடைய தினேஷ் கார்த்திக்கை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பாததே காரணம் என்று மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். பெங்களூரு தோல்விக்கு கோலி மெதுவாக சதம் அடித்ததே காரணம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெய்டன் அளித்த பேட்டியில், தோல்விக்கு கோலி காரணம் கிடையாது, கார்த்திக்கை முன்கூட்டி களமிறக்காகதே காரணமென்று தெரிவித்துள்ளார்.

News April 7, 2024

ரஞ்சித் விமர்சனத்திற்கு விஜய் ஆண்டனி பதிலடி

image

பெண்களின் உடையை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கலாச்சார சீர்கேடு என நடிகர் ரஞ்சித் கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் ஆண்டனி, மகிழ்ச்சியாக இருக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம். அது அடுத்தவரை பாதிக்காத அளவில் இருந்தால் போதுமானது என்றார். பெண்கள் அரைகுறை ஆடை அணிவதை பார்க்க முடியாவிட்டால் கண்களை மூடிக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News April 7, 2024

NIA அதிகாரிகள் மீது வழக்கு

image

மே.வங்கத்தில் NIA அதிகாரிகள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் 2 TMC தொண்டர்களை சனிக்கிழமை NIA கைது செய்தது. அப்போது NIA வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து NIA புகார் அளித்த நிலையில், கைதான நபர்களின் குடும்பத்தினரும் புகார் அளித்தனர். அதன்பேரில், பெண்ணை துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News April 7, 2024

மோடியின் வெற்றிக்காக கைவிரலை வெட்டிய நபர்

image

மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றி பெற வேண்டி கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது விரலை வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அருண் வர்னேகர் என்ற அந்த நபர், காளிதேவி முன்பு வேண்டிக் கொண்டு இடதுகையில் உள்ள ஆள்காட்டி விரலை வெட்டியுள்ளார். அந்த ரத்தத்தில் வீட்டு சுவரில், மோடியை காளிதேவி காக்க வேண்டுமெனவும் எழுதி வைத்துள்ளார். ஏற்கெனவே அவர் மோடிக்கு தனது வீட்டில் கோயில் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 7, 2024

பாஜகவின் வெற்றி உறுதி

image

மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது பாஜக வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். அரியலூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது பெருமை அளிப்பதாக கூறினார். மேலும், திமுகவும், காங்கிரசும் சனாதன பண்பாட்டை ஒழிக்க முயற்சிப்பதாகவும், தமிழை எப்படி ஒழிப்பது, அவமானப்படுத்துவது என சிந்திப்பதாகவும் சரமாரியாக குற்றம் சாட்டினார்.

News April 7, 2024

கூகுளில் தேடுவோருக்கு எச்சரிக்கை

image

இந்தியாவில் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களின் சேவை மையம் என்ற பெயர்களில் இணையதளங்களைத் தொடங்கி பண மோசடி செய்வோர் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கூகுளில் சேவை மையங்களைத் தேடும்போது, அவை அதிகாரப்பூர்வ இணையதளம் தானா? என உறுதி செய்த பிறகே அதனை தளத்தை பயன்படுத்தவும், இல்லையென்றால் கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் கொள்ளைப் போக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர்.

News April 7, 2024

பாஜக பணப்பட்டுவாடா செய்ய திட்டம் என புகார்

image

வாக்காளர்களுக்கு விநியோகிக்க மேலும் பல கோடி ரூபாயை, பாஜகவினர் பதுக்கி வைத்துள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனு அளித்துள்ளது. அதில், தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, நயினார் நாகேந்திரன் மட்டுமல்லாது, பிற பாஜக வேட்பாளர்கள் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனையை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

News April 7, 2024

பூமியை இன்று நெருங்கும் 3 எரிகற்கள்

image

பூமிக்கு அருகே இன்று 3 எரிகற்கள் கடந்து செல்லும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அதில் 2 எரிகற்கள், விமான அளவிற்கு பெரிது என்றும், 3வது எரிகல் கட்டிடம் அளவிற்கு பெரிது என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது. 3 எரிகற்களின் சராசரி அளவு 73 மீட்டர் என்றும் நாசா கூறியுள்ளது. நாளை மேலும் 2 எரிகற்கள் பூமிக்கு அருகே நெருக்கமாக கடந்து செல்லும் என்றும் நாசா அறிவித்துள்ளது.

error: Content is protected !!