India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டியது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆட்சி அமைந்த 3 ஆண்டுகளில் திமுகவால் கோவையில் பேருந்து நிலையமே அமைக்க முடியவில்லை என்று கூறிய அவர், தேர்தல் வித்தைகளால் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்களை ஏமாற்ற முடியாது எனவும் தெரிவித்தார். முன்னதாக, கோவையில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமையும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

மலையாள நடிகையான பார்வதி, தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் பார்வதிக்கு, திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தங்கலான் படக்குழு, அவர் நடித்துவரும் கங்கம்மா எனும் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

நீலகிரியில் 17 வயது பள்ளி மாணவிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பள்ளியில் சக வகுப்பு மாணவனுடன் சுற்றுலா சென்றிருந்தபோது ஏற்பட்ட நெருக்கத்தால் மாணவி கர்ப்பமானதாக தெரிகிறது. அக்கருவை கலைக்க மாணவியின் பெற்றோர் மருத்துவரை நாடியிருக்கின்றனர். இதனையடுத்து மாணவர், மாணவி இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி, மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகள்தான் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கின்றன. ஆகையால், இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் இருக்கின்றன. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் டெல்லி அணி ஒரு போட்டியில் வென்று 9ஆவது இடத்தில் இருக்கிறது. மும்பை அணி விளையாடிய 3 போட்டியிலும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் அதிருப்திக் குரல் எழுந்துள்ளது. பாமக சார்பில் தருமபுரியில் களம் காணும் தனது மகள் சௌமியா அன்புமணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, திரை மறைவில் அரசியல் செய்துவருவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி காங்கிரஸாரை சௌமியாவுக்கு எதிராக வேலை செய்ய வேண்டாம் என வாய்மொழியாக அவர் சொல்லியிருக்கிறாராம்.

நடிகை அதிதி ராவுக்கும், தமக்கும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். 2 பேரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக முதலில் தகவல் வெளியான நிலையில், நிச்சயதார்த்தம் செய்ததாக 2 பேரும் பதிவிட்டிருந்தனர். இதுகுறித்து சித்தார்த் தற்போது அளித்துள்ள பேட்டியில், குடும்பத்தினர் எப்போது சொல்கிறார்களோ அப்போதுதான் தங்களுக்கு திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் முதல் போட்டியில் டெல்லி – மும்பை அணிகள் 3.30 மணிக்கு மோதவுள்ளன. அதற்கான டாஸில் வென்று பவுலிங் செய்ய தேர்வு செய்துள்ளது டெல்லி அணி. ஹர்திக் தலைமையிலான மும்பை அணியில் சூர்யகுமார், நபி, ரொமாரியோ ஆகியோர் இணைந்திருக்கின்றனர். டெல்லி அணியில் இரண்டு புதிய வீரர்கள் சேர்ந்துள்ளனர்.

திருச்சியில் மாற்றுப்பாதையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனப் பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி கேட்டு பாஜக சார்பில் தொடரப்பட்ட அவசர மனுவை விசாரித்த நீதிமன்றம், திருச்சி கண்ணப்பா ஹோட்டல் முதல் இ.எஸ்.ஐ மருத்துவமனை வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை வாகனப் பேரணி நடத்த அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் செல்போனிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளில் பல திரைப் பிரபலங்கள் சிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அமீரிடம் முதல்கட்டமாக நடந்த 11 மணி நேரம் விசாரணையில், சாதிக்கின் சினிமா தொடர்புகள், முதலீடுகள் குறித்தும் விலாவாரியாக விசாரித்ததாகத் தெரிகிறது. சாதிக் வழியே முதலீடு செய்த சினிமா பிரபலங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஐபிஎல் டிக்கெட் விற்பதற்காக போலி இணையதளம் உருவாக்கி ரசிகர்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் கிரைம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னை, ஐதராபாத் ஆகிய இரு இடங்களில் நடந்த லீக் போட்டிகளை வீரர்கள் அருகே இருந்து பார்க்கலாம் என்றும் தள்ளுபடி விலையிலான டிக்கெட் என்றும் விளம்பரப்படுத்தி இந்த இணைய மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.