India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பதனியை நன்கு காய்ச்சி பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. பனங்கற்கண்டு இருமல், மார்புச்சளி தொண்டை கரகரப்பு போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்தது. பனங்கற்கண்டை வாயில் போட்டு, அதை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து அந்த உமிழ் நீரை விழுங்கி வந்தால், வாய்ப்புண், தொண்டை வலி, வாய் துர்நாற்றம் போன்றவை முற்றிலுமாக நீங்கும். கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களை இவை சரி செய்ய உதவுகிறது.

வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற MI கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் RCB பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை ஆடிய போட்டிகளில் இரு அணிகளும் 1 வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் MI 8ஆவது இடத்திலும், RCB 9ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், பாமகவில் இருந்து விலகிய முன்னாள் மாநில துணைத் தலைவர் சீனிவாசன், திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதி முத்து உட்பட பலர் திமுகவில் இணைந்துள்ளனர். நேற்று தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இவர்களுடன் மேலும் பலரும் திமுகவில் இணைந்துள்ளனர்

அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் காணாமல் போயுள்ளனர், தேர்தலுக்கு பிறகு பாஜக காணாமல் போகுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பின் அதிமுக காணாமல் போகுமென அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி அளித்துள்ள ஜெயக்குமார், “நோட்டாவுக்கு கீழ் பாஜக வாக்குகள் செல்லாமல் இருப்பதை அண்ணாமலை கவனிக்க வேண்டும். பயம் இருப்பதால் தான் பிரதமரை அழைத்து வருகின்றனர்” என்றார்.

தேர்தலுக்கு பிறகு ரீசார்ஜ் கட்டணத்தை 15 – 17% உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இந்தியாவில் தற்போது ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளன. அதே நேரம் பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ரீசார்ஜ் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் கண்டுபிடிப்புகளும் அதீத வளர்ச்சி கண்டுள்ளன. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்துக்கு அடுத்தப்படியாக உலகளவில் ஆராய்ச்சி மையமாக இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. குறிப்பாக உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் 69 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. தரவரிசைக்கு பல்கலைக்கழகங்களின் 17.5 மில்லியன் பகுப்பாய்வு முடிவுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவிலான பணம் 22 பெரும் பணக்காரர்களிடம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் பிரசாரம் செய்த அவர், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னை என்றார். ஆனால், அம்பானி குடும்பத்தில் நடக்கும் திருமணம்தான் நாட்டின் மிகப்பெரிய செய்தியாக பரவுவதாக குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக உறுதி அளித்தார்.

இங்கிலாந்தில் சிரிக்கும் வாயுவை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மெர்சர் என்ற 24 வயது கர்ப்பிணி தீவிர சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார். சிரிக்கும் வாயு என அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை அவர் நாளொன்றுக்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 6 மாத கர்ப்பிணியான மெர்சர், நைட்ரஸ் ஆக்சைடு பயன்பாடு காரணமாக நுரையீரல் ரத்த உறைவு பிரச்னையால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாகையில் பாஜகவினரின் வெடியால் ஏற்பட்ட தீ விபத்தால் வீடுகளை இழந்த மக்கள் பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை கோட்டாச்சியர் அலுவலகம் அருகே பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்று வெடித்த வெடியால் ஏற்பட்ட தீ அருகில் இருந்த குடிசை வீடுகளுக்கு பரவி எரிந்து நாசமாயின. இதற்கு இழப்பீடு வழங்க எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால் பாஜக நிர்வாகியை விடுவிப்போமென மக்கள் ஆவேசமாகினர்.

இந்தியாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே நமது முதல்வர் எடுத்துக்காட்டாக இருக்கிறார் என அமைச்சர் உதயநிதி புகழாரம் சூட்டியுள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், கனடா பிரதமரே காலை உணவுத் திட்டத்தை கொண்டுவரப் போவதாக கூறியுள்ளார். இத்திட்டத்தை தெலங்கானாவிலும் செயல்படுத்தி வருகின்றனர் என்றார். மேலும், மகளிர் விடியல் பயண திட்டத்தை கர்நாடகா மாநிலத்திலும் செயல்படுத்தி உள்ளனர் எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.