India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு முழுவதும் வாழும் ஏழைகளுக்கு தற்போதுதான் உரிமைகள் கிடைக்கிறது என்றும், அதேநேரத்தில் ஏழைகளின் சொத்துகளை கொள்ளையடித்தோர் சிறைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நடவடிக்கை தொடரும், இது மோடியின் உத்தரவாதம் என்றும் அவர் கூறினார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களும் பயன்பெறும் வகையில் மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. தற்போது சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹820க்கு விற்பனையாகிறது. அதேநேரம் உஜ்வாலா திட்டப் பயனாளர்களுக்கு ₹300 மானியம் கிடைப்பதால் ஒரு சிலிண்டர் ₹520க்கு கிடைக்கிறது.

சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், தமிழ் கலாசாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். மேலும், வரும் ஆண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, அமைதி காக்கும்படி இஸ்ரேல், ஈரானை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல், ஈரான் மோதல் போக்கால், மத்திய கிழக்கு அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகி இருப்பதை கண்டு கவலை அடைந்துள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், பதற்றத்தைத் தணித்து அமைதி காக்கவும், வன்முறை பாதையிலிருந்து விலகி ராஜ்ஜீய பாதைக்கு திரும்பும்படியும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

சாலையோரம் வசிப்பவர்களுக்கு குறைந்த வாடகையில் கான்க்ரீட் வீடுகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவைகள் கொண்டுவரப்படும், கிராமங்களில் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என கூறினார். மேலும், நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அகமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரயில் போல, தென்னிந்தியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மேலும் 3 புல்லட் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மோடி, வட இந்தியாவுக்கு ஒரு புல்லட் ரயில், தென்னிந்தியாவுக்கு ஒரு புல்லட் ரயில், கிழக்கு இந்தியாவுக்கு ஒரு புல்லட் ரயில் விடப்படும் என்றார். சர்வே பணி விரைவில் தொடங்கும் என்றும் மோடி கூறினார்.

சானிட்டரி நாப்கின் ₹1க்கு வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஒரு பாக்கெட் குறைந்தபட்சம் ₹25 – ₹50 வரை; அதாவது ஒரு நாப்கின் ₹3க்கும் மேல் விற்பனையாகும் நிலையில், தற்போது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது போல் நாப்கின் ₹1க்கு வழங்கினால், பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதனால், பெண்களின் சுகாதாரம் மேம்படும்.

தமிழ் புத்தாண்டு தினத்தன்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதை ஆசீர்வாதமாக கருதுவதாக மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அசாம், ஒடிசா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டினார். இன்றைய தினத்தில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதை மிகப்பெரும் ஆசீர்வாதமாக நினைப்பதாகவும் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

சிறு, குறு நிறுவனங்களுக்கான முத்ரா கடன் உதவி ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்; கிராமங்களில் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் தேர்தல் அறிக்கைக்காக ஒட்டுமொத்த நாடும் காத்திருந்ததாக மோடி தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், பாஜக மீதான நம்பிக்கையால் தேர்தல் அறிக்கையை தயாரிக்க லட்சக்கணக்கான மக்கள் ஆலோசனைகள் முன்வைத்ததாகவும், ஒட்டுமொத்த நாடும் அறிக்கைக்காக காத்திருந்ததாகவும், ஏனெனில் தேர்தல் அறிக்கையில் தெரிவிப்பதை பாஜக நிச்சயம் நிறைவேற்றுமென நாட்டுக்கே தெரியும் என்றார்.
Sorry, no posts matched your criteria.