India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, உத்தர பிரதேச முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். தேசிய அரசியலில் பிரமாண்ட சக்தியாகவும் திகழ்ந்தார். சக்திவாய்ந்த பெண் அரசியல்வாதிகளில் ஒருவராகவும் கருதப்பட்டார். மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த அரசுகள், அவரின் ஆதரவை கேட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் 2024 தேர்தலில், மாயாவதி தீவிர பிரசாரத்தில் ஈடுபடவில்லை. எதனால் அவர் ஒதுங்கியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பாஜக ஆட்சியில் இந்தியாவும் வளர்ச்சி பெறவில்லை, மக்களும் வளர்ச்சி பெறவில்லை என்று கூறிய அவர், மக்களை பாதிக்கும் பொது சிவில் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதி தெரிவித்தார். மேலும் 2019, 2021 தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்திக்க பாஜகவே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பாஜக தேர்தல் அறிக்கையில் வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை என விவசாய சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரி, விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. பாஜக தேர்தல் அறிக்கையில் அதுகுறித்தும், வேளாண் கடன் தள்ளுபடி குறித்தும் எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று விவசாய சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

பி.வாசு இயக்கி ரஜினி நடிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘சந்திரமுகி’ வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ரஜினி பல வெற்றிப் படங்களை தந்திருந்தாலும், பேய் படங்களுக்கு பெரிய தளம் அமைத்துக் கொடுத்தது இப்படம்தான். இதன் தாக்கம் முனி, அரண்மனை என இன்றளவும் தொடர்ந்து வருகிறது. ஆக்ஷன், ஹாரர், காமெடி, பாடல் என அனைத்து தளத்தையும் தொட்ட இப்படம் இன்றும் பேசப்படுகிறது.

சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான பதிரனா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. கடந்தாண்டு நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் சாய்த்து வெற்றிக்கு வித்திட்டார். இந்நிலையில் அவர் இன்று விளையாடாதது சிஎஸ்கேவுக்கு பின்னடைவாகும்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை நகைச்சுவையாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 10 ஆண்டுக்கு முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்றும், அம்பேத்கர் எழுதிய சட்டத்தை சிதைக்க நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் ₹1.50 லட்சத்தை கடனாக சுமத்தியதுதான் பாஜகவின் சாதனை என்றும் அவர் விமர்சித்தார்.

பாஜக நாடு முழுவதும் சுகாதாரத்திற்கு செலவிட்ட தொகை, டெல்லியின் சுகாதார பட்ஜெட்டை விட குறைவு என ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். பாஜக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை என்றார். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றார்கள். ஆனால், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றார்.

விஜய் நடிப்பில் தயாராகிவரும் ‘G.O.A.T’ படத்தின் முதல் பாடலான “விசில் போடு…” இன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், நம்ம தளபதிக்கு விசில் போடு என ஜடேஜாவை குறிப்பிட்டு சிஎஸ்கே X பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைத்துறையில் விஜய்யை தளபதி என்றும், கிரிக்கெட்டில் ஜடேஜாவை தளபதி என்றும் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்திப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிப்பதாகவும், நாட்டை 200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்களை தீட்டுவதாகவும் சாடினார். மேலும், புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியை சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை என்றும் அவர் கூறினார்.

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் புதிய கட்சியை தொடங்குவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். மக்களுக்கு போதுமான வசதி இல்லை; அதனால் தான், நான் அரசியலுக்கு வருகிறேன். 2026ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் எனக் கூறிய அவர், மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற்றது என்ற செய்தியை கேட்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். விரைவில் கட்சியின் பெயர் வெளியாகும் என தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.