India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒற்றுமை இல்லாததால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலமிழந்து விட்டதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். மேலும் அவர், சாதி வாரிக் கணக்கெடுப்பு கருத்தில் கொள்ள வேண்டியது எனினும், சிறந்த கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம் மூலம் பின்தங்கியோருக்கு அதிகாரம் வழங்குவது அவசியம் எனவும், காங்கிரஸ் தனது அமைப்பு ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.

லக்னோ பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப், கொல்கத்தா அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். தன்னுடைய முதல் ஓவரிலேயே 10 பந்துகளை (0, L1, 4, 2, b1, nb, Wd, Wd4, nb, 6) வீசினார். இதன் மூலம், ஐபிஎல்லில் அறிமுகப் போட்டியின் முதல் ஓவரை மிக நீண்ட ஓவராக வீசிய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார். இன்றைய போட்டியில் 4 ஓவரை வீசிய அவர் 47 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

போர் சூழல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உதவிகள் தேவைப்பட்டால், அவர்கள் தூதரகத்தை தொடர்புகொள்ள அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவிகளுக்கு +972-547520711, +972-543278392 ஆகிய எண்களையும், cons1.telaviv@mea.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரியையும் அணுகலாம்.

பிரபல இயக்குநர் அல்போன்சோ குரோனுடனான சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகர் கமல்ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அல்போன்சோ குரோன் ஒரு மெக்சிகன் இயக்குநர் ஆவார். இவர் 5 ஆஸ்கர், 7 பாஃப்டா, 3 கோல்டன் குளோப் விருதுகளை வென்றவர். கமல் பகிர்ந்த புகைப்படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம், சித்தார்த், அதிதி ராவ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்த விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-காஸா போர் பதற்றம் நீடிக்கும் சூழலில், தற்போது ஈரானும் இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவிவரும் நிலையில், இஸ்ரேல் வான்வழிப் பாதையை தவிர்க்கவும் விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் இருந்து சென்ற கார், ராஜஸ்தான் அருகே சென்றபோது முன்னாள் சென்ற லாரியின் மீது மோதியது. கார் மோதிய வேகத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது. அப்போது காரின் கதவுகள் திறக்க முடியாததால் 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுகவைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். ஆத்தூர் பிரசாரத்தில் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட, நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குரல் கொடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். மேலும், விளம்பரம் தேவை என்பதற்காக, ஒற்றை செங்கலுடன் உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றி வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, இந்தியாவின் வரலாறு தெரியாது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ரவி, அண்ணாமலை ஆகியோர் தங்களது சுய விளம்பரத்திற்காக எதையாவது பேசி வருவதாக குற்றம்சாட்டிய அவர், அண்ணாமலை படித்து தான் ஐபிஎஸ் அதிகாரி ஆனாரா என கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய பாஜக அரசின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் துளி கூட விரும்பவில்லை என கடுமையாக சாடினார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் விளையாடாத தூபே இன்று விளையாடுகிறார். இன்றைய போட்டியில் தீக்ஷனா விளையாடவில்லை. இம்பேக்ட் வீரராக பதீரனா விளையாட உள்ளார். அணி விவரம்: ரச்சின், ருதுராஜ், ரஹானே, மிச்சேல், தூபே, ரிஸ்வி, ஜடேஜா, தோனி, ஷர்துள், முஸ்தஃபிசுர், தேஷ்பாண்டே.

மும்பையில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங்கை தொடங்க உள்ளது. இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 3 வெற்றி 2 தோல்வியுடன் சிஎஸ்கே 3 ஆவது இடத்திலும், 2 வெற்றி, 3 தோல்வியுடன் மும்பை 7 ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Sorry, no posts matched your criteria.