News April 15, 2024

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் (2)

image

1962 தேர்தலில் சுதந்திரா கட்சி வேட்பாளரும், மகாராணியுமான காயத்ரி தேவி (ஜெய்ப்பூர்) 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 1967 தேர்தலில் கே.சிங் (பிகானீர்) 1.9 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 1971 தேர்தலில் காங்கிரசின் சஞ்சீவ் ராவ் (காக்கிநாடா) 2.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், 1977 தேர்தலில் ராம்விலாஸ் பாஸ்வான் (ஹாஜிபூர்) 4.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றனர்.

News April 15, 2024

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் (3)

image

1980 மக்களவைத் தேர்தலில் மகாராஜா மார்டன்ட் சிங் (ரேவா) 2.4 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 1984 தேர்தலில் ராகுல் காந்தி (அமேதி) 3.1 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். 1989 தேர்தலில் ராம்விலாஸ் பாஸ்வான் (ஹாஜிபூர்) 5 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 1991 தேர்தலில் காங்கிரசின் சந்தோஷ் மோகன் (திரிபுரா மேற்கு) 4.3 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி வாகை சூடினர்.

News April 15, 2024

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் (4)

image

1996 மக்களவைத் தேர்தலில் திமுகவின் சோமு (வடக்கு சென்னை) 3.9 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1998இல் பாஜகவின் கதிரியா வல்லபபாய் ராம்ஜிபாய் (ராஜ்கோட்) 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 1999இல் காங்கிரசின் கே.ஏ.சங்க்தம் (நாகாலாந்து) 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 2004இல் சிபிஎம்மின் அனில் பாசு (ஆரம்பக்) 5.9 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.

News April 15, 2024

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் (5)

image

2014 மக்களவைத் தேர்தலில் மோடி (வதோதரா) 5.7 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019 தேர்தலில் பாஜகவின் சிஆர் பாட்டீல் (நவ்சாரி) 6.9 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். வேட்பாளர் ஒருவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது, அவர்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்பை காட்டுகிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால், மீண்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

News April 15, 2024

முதுமையை போற்றுவோம்

image

60 வயதானாலே மனிதர்கள் சொந்தங்களால் புறக்கணிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குழந்தை பருவத்தில் தூக்கி சுமந்தவர்கள் அவர்கள்தான் என்பதை சமூகம் நினைவில் கொள்ள மறந்துவிடுகிறது. 81 வயதாகும் நிலையிலும், அமெரிக்காவை பைடன் கட்டியாண்டு வருகிறார். அடுத்த அதிபர் தேர்தலிலும் அவர் போட்டியிடவுள்ளார். ஆதலால் முதியோரை சுமையாக கருதாமல், அவர்களின் அனுபவங்களை கேட்டு நடந்து, நமது வழிகாட்டிகளாக போற்றுவோம்.

News April 15, 2024

ஏழை குடும்பங்களுக்கும் மாதம் ₹3,000 வழங்க வேண்டும்

image

அதிமுக வெற்றி பெற்றால் பாரபட்சமின்றி அனைத்து பெண்களுக்கும் ₹1,000 வழங்கப்படும் என இபிஎஸ் உறுதி தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், ₹1,000 கொடுக்கும் திட்டத்தை திமுக அரசிடம், அதிமுக போராடி பெற்று தந்ததாக கூறினார். மேலும், அம்பானி, அதானி போன்றவர்களுக்கு வரி சலுகைகளை வழங்கும் மத்திய அரசு, அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் மாதம் ₹3,000 வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

News April 15, 2024

பாஜகவின் இந்த விளையாட்டு மிகவும் ஆபத்தானது

image

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை பாஜக மறந்துவிடக் கூடாது என பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். பாஜக இந்து அடையாளங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது இந்துக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே தவிர, ஒட்டுமொத்த நாட்டுக்கும் அது ஆபத்தை விளைவிக்கும் என்று விமர்சித்துள்ள அவர், இந்திய அரசியலமைப்பை மாற்ற பாஜக செய்யும் எந்த முயற்சியும் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களுக்கும் உதவாது என்றார்.

News April 15, 2024

3 சிக்ஸரில் ரோஹித்தின் சதத்தை காலி செய்த மஹிபாய்

image

நேற்றைய MI – CSKக்கு இடையிலான போட்டி இந்த ஐபிஎல்லின் மிக சிறந்த ஆட்டம் என்று சொல்லலாம். குறிப்பாக சென்னையின் வெற்றி மஹிபாய் கடைசி ஓவரில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸ் தான் காரணம். அதுமட்டும் நடக்கவில்லை என்றால், ரோஹித் இருந்த ஃபார்முக்கு மேட்ச் MI பக்கம் திரும்பி இருக்கும். ரோஹித்தின் சதமும் வீணாகி இருக்காது. அதேபோல், ருதுராஜ் கேப்டன் என்றாலும், பந்துவீச்சு, பில்டிங் என அனைத்தையும் தலா தான் கவனித்தார்.

News April 15, 2024

BREAKING: வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது.. செக் பண்ணுங்க

image

தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் மகளிர் உரிமைத்தொகை வழங்க எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் ₹1000 வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இன்று மாலைக்குள் அனைவருக்கும் வந்துவிடும். ஆனால், மேல்முறையீடு செய்தவர்களுக்கு ₹1000 வராது. அவர்களுக்கு அடுத்த மாத தவணையில் தான் வழங்கப்படும்.

News April 15, 2024

அதிகரிக்கும் விலை, அலறும் இல்லத்தரசிகள்

image

தங்க நகைகள் மீது இந்தியப் பெண்களுக்கு எப்போதும் தனி விருப்பம் உண்டு. சுப நிகழ்ச்சிகளுக்கு வித விதமான நகைகளை அணிவதை பெருமையாகவே கருதுகின்றனர். ஆனால், கடந்த சில நாள்களாக அதன் விலை உயர்வதை கண்டு அறண்டுள்ளனர். விலை உயர்வு செய்தி வரும்போதெல்லாம், இனி தங்கம் வாங்க முடியுமா என புலம்பி வருகின்றனர். எனினும், தங்கம் மீதான விருப்பம்தான் குறையுமா? என்பது தெரியவில்லை.

error: Content is protected !!