News March 18, 2025

சென்செக்ஸ் ஒரே நாளில் 1,131 புள்ளிகள் உயர்வு

image

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,131 புள்ளிகள் இன்று ஒரே நாளில் உயர்வடைந்தன. சர்வதேச பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று ஆரம்பம் முதல் ஏற்றத்துடன் காணப்பட்டது. இது இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேர முடிவில் 1,131 புள்ளிகள் உயர்ந்து 75,301ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 325 புள்ளிகள் அதிகரித்து 22,834ஆக வர்த்தகமானது.

News March 18, 2025

இன்றைய முக்கிய செய்திகள்

image

*மிகப் பெரிய விழாவை நடத்திக் காட்டியிருக்கிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்.
*ஆண்டுக்கு ₹6,000 உதவித்தொகை பெற விவசாயிகள் அடையாள அட்டை பெற மார்ச் 31 கடைசி நாள்.
*நாளை அதிகாலை 3.30க்கு பூமியில் கால்பதிக்கிறார் சுனிதா.
*டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
*உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப்- புடின் இன்று பேச்சுவார்த்தை.

News March 18, 2025

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஷிண்டே

image

முகலாய மன்னன் அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது. அவுரங்கபாத்தில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். இந்த பிரச்னையை மையமாகக் கொண்டு நேற்று நாக்பூரில் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2025

59% தமிழக எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு

image

தமிழகத்தில் 59% MLAக்கள் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஆந்திராவில் 79%, தெலங்கானா, கேரளாவில் 69%, பிஹாரில் 66%, மகாராஷ்டிராவில் 65% எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், 98 திமுக எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 18, 2025

4,092 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள்

image

நாடு முழுவதும் 4,092 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு, 28 மாநிலங்களில் உள்ள 4,123 எம்எல்ஏக்களின் பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்தது. அதில், 1,205 எம்எல்ஏக்கள் மீது கொலை, கடத்தல் வழக்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் (79%) 138 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

IPL பிளேஆப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை? ஜகாதி கணிப்பு

image

2025 IPL தொடரில் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் CSK வீரர் சதாப் ஜகாதி தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார். சென்னை, கொல்கத்தா, குஜராத் ஆகிய 3 அணிகளும், டெல்லி மற்றும் லக்னோ அணிகளில் ஏதாவது ஒன்றும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என கணித்துள்ளார். வரும் 23ஆம் தேதி தொடங்கும் IPL தொடரில் முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை KKR அணி எதிர்கொள்கிறது. உங்க கணிப்பு என்ன? கமெண்ட் பண்ணுங்க.

News March 18, 2025

3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: IMD

image

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமானது வரை மழை பெய்ய கூடும் என IMD கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனால், அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2–3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, குழந்தைகள், முதியவர்கள் வெயிலில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.

News March 18, 2025

ரஷ்யாவை மிரள வைக்கும் ரகசியம் என்ன? (1/2)

image

போர்க்களம் மாறலாம், போர்கள் தான் மாறுமா? என்பார்கள். ஆனால் போர் வடிவம் இப்போது மாறிவிட்டது. அதற்கு உக்ரைன் – ரஷ்யா இடையே நடக்கும் போர் உதாரணம். அமெரிக்காவுக்கே ரஷ்யா அச்சுறுத்தலாக இருந்தாலும், தன்னிடம் இருக்கும் நவீன தொழில்நுட்பத்தை வைத்து ரஷ்யாவையே மிரள வைத்து வருகிறது உக்ரைன். அப்படி என்ன மாதரியான ஆயுதத்தை இந்த போரில் உக்ரைன் பயன்படுத்தி இருக்கிறது தெரியுமா? ட்ரோன்கள்தான்…

News March 18, 2025

ரஷ்யாவை மிரள வைக்கும் ரகசியம் என்ன? (2/2)

image

ட்ரோன்களை தரையில் பயன்படுத்தும் உத்திதான் உக்ரைனுக்கு கச்சிதமாக கைகொடுத்திருக்கிறது. அதில் மிக முக்கியமானது டிரக்குகள் போல இருக்கும் ட்ரோன்கள். இவை ரஷ்ய எல்லைக்குள் புகுந்து குண்டுகள் வைப்பது, கண்ணிவெடிகளை புதைப்பது என மிரள வைக்கிறது. வீரர்களுக்கு தேவையான உணவு, ஆயுதங்களையும் கொண்டு செல்கிறது. தொழில்நுட்பங்கள் வளர, வளர, போர் தந்திரங்களும் மாறுகின்றன!

News March 18, 2025

ஒரு நாளில் 24 மணி நேரம்… எப்படி வந்தது தெரியுமா?

image

ஒரு நாளில் 24 மணி நேரம் என்பதை நாம் அறிவோம். அது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என தற்போது பார்க்கலாம். பூமி தன்னைத் தானே சுற்றியபடி, சூரியனை சுற்றி வருகிறது. இதில் பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்ற சரியாக 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அப்போது பகல், இரவு ஆகியவை மாறி மாறி வரும். இந்த 24 மணி நேரம்தான், ஒருநாள் என கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு மணி நேரமும் 60 நிமிடங்கள் ஆகும்.

error: Content is protected !!