India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாமக இல்லாவிட்டால் டெல்டாவே அழிந்து போயிருக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பிரசாரம் செய்த அவர், திமுகவும், அதிமுகவும் டெல்டாவை அழிக்கப் பார்த்ததாக குற்றம்சாட்டினார். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாமகதான் வலியுறுத்தியது. பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால் மேகதாது அணை குறித்து பிரதமரிடம் நேரடியாக சந்தித்து பேசுவார் என வாக்குறுதி அளித்தார்.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் டெரெக் அண்டர்வுட் (78) இன்று காலமானார். 1963ஆம் ஆண்டு தனது 21ஆவது வயதில் இங்கிலாந்து அணியில் விளையாட தொடங்கிய அவர், 1987ஆம் ஆண்டு வரை சுமார் 24 ஆண்டுகள் விளையாடியுள்ளார். 86 டெஸ்ட் போட்டிகளில், அண்டர்வுட் 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குரோதி தமிழ் புத்தாண்டு பலரது வாழ்வில் புதிய மாற்றங்களை கொண்டு வரப் போகிறது. குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி இதோடு சேர்வதால் 3 ராசிகளின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படவுள்ளது. கஷ்டத்தை சந்தித்துவந்த ரிஷபம், துலாம், மகரம் ஆகிய மூன்று ராசிகளும் இனி முன்னேற்றப் பாதையில் செல்லவுள்ளனர். குரு உங்களது வாழ்வில் திருப்தியை ஏற்படுத்தவுள்ளார். வாழ்க்கை வளம் பெறும்.

தயாநிதி மாறன் தனது தொகுதி நிதியில் இருந்து 75% செலவு செய்யவில்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் பிரசாரத்தில் பேசிய அவர், இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர், இந்திய அளவில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களின் பட்டியலில் உள்ளவர். அவர் மேலும் சொத்து சேர்ப்பதற்காகவும், சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தேர்தலில் போட்டியிடுகிறார் என விமர்சித்துள்ளார்.

தேர்தல் பத்திர ஊழலில் இருந்து பிரதமர் மோடி தப்பவே முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 3ஆவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்பது பகல் கனவாகவே முடியும் எனக் கூறிய அவர், ஊழல் குறித்து பேச மோடிக்கு தார்மீக உரிமை கிடையாது என்றார். நெடுஞ்சாலை, சுங்கச்சாவடிகள், கொரோனா கால சிகிச்சையில் ஊழல் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை கூறுவதாக தெரிவித்தார்.

நெல்லை தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சொத்து விவரங்களை மறைத்திருப்பதாக தேர்தல் ஆணையத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மீது தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் வரை தேர்தலை நிறுத்த வேண்டும் என்று வழக்கறிஞர் மகாராஜன் மனுதாக்கல் செய்திருக்கிறார்.

SRH அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிவரும் RCB கேப்டன் டு ப்ளஸி அரை சதம் கடந்துள்ளார். 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசியுள்ள அவர் 25 பந்துகளில் 52* ரன்கள் எடுத்துள்ளார். தற்போது வரை RCB 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 42, ஜாக்ஸ் 7, படிதார் 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். SRH சார்பில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு உண்மையில் அனைவரும் வருந்துவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இது குறித்து ANI-க்கு அளித்த பேட்டியில் மோடி, தேர்தலின் போது கறுப்பு பணப்புழக்கத்தை தடுக்கவே தன்னுடைய அரசு இதனை கொண்டு வந்தது. ஆனால் இத்திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யை பரப்பியதாகவும் சாடியுள்ளார்.

மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் புகழை ரசிகர்கள் பாடும் காலம் விரைவில் வருமென அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாண்டியா மீதான ரசிகர்களின் அணுகுமுறை குறித்து அவர், கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டில், தனிப்பட்ட வீரரை கை காட்டுவது எரிச்சலாக உள்ளது. இந்தியாவுக்காக பாண்டியா சிறப்பாக விளையாட ரசிகர்கள் ஊக்குவிப்பதை காண காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணியின் தலைவருமாகிய புலவர் இந்திர குமாரி சென்னையில் வயது முதிர்வால் காலமானார். உடல்நிலை பாதிப்பு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இந்திர குமாரி, 1991 முதல் 96 வரை ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பின்னர் 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
Sorry, no posts matched your criteria.