News April 16, 2024

காலரைப் பிடித்து கேட்காதவரை மோடி இதைச் செய்வார்

image

பிரதமர் மோடியின் காலரைப் பிடித்து கேட்காதவரை, அவர் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவாரென நடிகர் கிஷோர் காட்டமாக விமர்சித்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில், ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை மோடியும், பாஜகவும் நமது பணத்தை சாப்பிட்டு விட்டு, யாரோ சாப்பிடும் இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட என்ன தகுதி இருக்கிறதென அவர் வினவியுள்ளார்.

News April 16, 2024

இதை செய்தால் மும்பை அணி வெற்றிபெறும்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் 2 வெற்றி 4 தோல்விகளுடன் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் சுமாரான பவுலிங்கே அந்த அணியின் தோல்விக்கு காரணம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாரா கூறியுள்ளார். மேலும், இனி வரும் போட்டிகளில் மும்பை அணி வெற்றிபெற வேண்டுமென்றால் 2- 3 மேட்ச் வின்னிங் பவுலர்களை கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

தபால் வாக்குகள் செலுத்தும் பணி நிறைவடைகிறது

image

தமிழ்நாட்டில் தபால் வாக்குகளை செலுத்தும் பணிகள் 5 மணியோடு நிறைவடைகிறது. நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று தமிழ்நாட்டிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர், போலீஸார் ஆகியோரிடம் தபால் வாக்குகளை பெறும் பணிகள் இன்றோடு (ஏப்ரல் 16) நிறைவடையவுள்ளன. இந்த வாக்குகளும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும்.

News April 16, 2024

வேங்கைவயலில் நாம் தமிழர் பிரசாரம்

image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். வேறு எந்தக் கட்சியையும் பிரசாரத்திற்கு அனுமதிக்காத மக்கள், நாம் தமிழர் கட்சியினரை மட்டும் அனுமதித்திருக்கின்றனர். குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அக்கிராமத்து மக்கள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News April 16, 2024

சட்டப்பேரவை நிகழ்வு நேரடி ஒளிபரப்பு எப்போது?

image

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு குறித்து பல்வேறு மாநிலங்களிடம் தகவல் கோரப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. விஜயகாந்த் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முழுமையாக தகவல் கிடைத்த பிறகு நேரடியாக ஒளிபரப்புவது பற்றி முடிவு செய்யப்படும் என தமிழக அரசு கூறியது. இதையடுத்து, இறுதி முடிவை எடுக்க உத்தரவிட்ட கோர்ட், விசாரணையை ஜூன் 25-க்கு ஒத்திவைத்தது.

News April 16, 2024

ஆம்புலன்ஸ் மூலம் பணத்தை எடுத்து செல்லும் தலைவர்கள்

image

அரசியல் கட்சித் தலைவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பணத்தை எடுத்துச் செல்வதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். மதுராந்தகத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ், பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டுமென கேள்வி எழுப்பினார். மேலும், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் ஓட்டுக்கு காசு கொடுக்கவில்லை என்றால் ஓரிடத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாதென சாடினார்.

News April 16, 2024

டாப் 15இல் இரண்டு சிஎஸ்கே வீரர்கள்

image

ஐபிஎல்லில் கொல்கத்தா அணி தவிர மற்ற அனைத்து அணிகளும் 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் RCB வீரர் விராட் கோலி (361) முதல் இடத்தில் உள்ளார். இதில் முதல் 15 இடங்களில் 2 CSK வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 7ஆவது இடத்தில் ஷிவம் தூபே 242, 12 ஆவது இடத்தில் ருதுராஜ் 224 உள்ளனர். இதேபோல் பவுலர்களுக்கான பட்டியலில் முஸ்தஃபிசுர் 3, பதீரனா 9 ஆவது இடங்களில் உள்ளனர்.

News April 16, 2024

5 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

தமிழகத்தில் ஏப்.21ஆம் தேதி மற்றும் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகள், பார்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.21இல் மஹாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மே 1இல் உழைப்பாளர் தினம் என்பதால் அந்த 2 நாள்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17, 18, 19ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 16, 2024

பிறரை காயப்படுத்தாமல் பேசுவது அவசியம்

image

நமது பேச்சு, ஒருவரின் மனதை வெல்லவும் செய்யும். அவரின் மனதை காயப்படுத்தவும் செய்யும். மனதை வெல்வது போல பேசினால், உலகமே வசப்படும். மனதை காயப்படுத்துவது போல் பேசினால், உலகமே உன்னை விட்டு விலகிச் செல்லும். பகையையும் அதிகரிக்க செய்யும். இதைத்தான் திருக்குறள், “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” என்று தெரிவிக்கிறது.

News April 16, 2024

திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு எனப் புகார்

image

திமுகவினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக R.S.பாரதி அளித்த புகாரில், முக்கிய வேட்பாளர்கள் மற்றும் திமுக முன்னணி தலைவர்கள் பேசுவதை, உளவு செயலிகள் மூலம் ஒட்டுக் கேட்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித் துறை மூலம் இந்த ஒட்டுக் கேட்பு நிகழ்வு அரங்கேற்றப்படுவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!