India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதையே விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சமீபத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாட இந்தியா தயங்காதென கூறியிருந்தார். இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், “நான் முன்பே கூறியது போல், இதில் அமெரிக்கா தலையிட விரும்பவில்லை” என்றார்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், அஷ்வின் இடம்பிடிப்பது சந்தேகம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் பங்கேற்ற அவர், ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். லக்னோ அணிக்கு எதிரான முதல் போட்டியில் விக்கெட் எடுத்த அவர், அதன் பிறகு நடந்த 5 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதனால் அவரது உலகக் கோப்பை வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சுனில் நரைன் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், தனது முதல் ஐபிஎல் சதத்தை 109(56) பதிவு செய்தார். அத்துடன், சஞ்சு சாம்சனின் கேட்சைப் பிடித்ததோடு, அபாரமாகப் பந்துவீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனால் ஒரு ஐபிஎல் போட்டியில், சதம் + கேட்ச் + விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்.19) மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆந்திரா மதுக் கடைகளும் மூடப்படுகின்றன. இதனால் நேற்றைய தினம் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஒருவருக்கு 4 குவாட்டர் மட்டுமே வழங்க வேண்டும் என்ற உத்தரவால் ஒன்றுக்கு இரண்டு முறை காத்திருந்து மதுப்பிரியர்கள் மது வாங்கிச் சென்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக தான் கதாநாயகன், எங்களுக்கு எப்போதும் வில்லன் திமுக தான். பாஜக ஒரு பொருட்டே இல்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் பாஜகவை நம்ப மாட்டார்கள். பாஜக வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குத்தான் வாங்குவார்கள். பாஜகவோட டிரெய்லர் நல்லாயிருக்கும். ஆனால் படம் ஃப்ளாப் ஆகிவிடும் எனவும் விமர்சித்தார்.

மக்களவைத் தேர்தலையொட்டி இன்று முதல் வாக்குப்பதிவான ஏப்.19ஆம் தேதி வரை 3 நாளுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பதால் சிலர் நேற்று மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்க முயற்சி செய்கின்றனர். இதை தேர்தல் பறக்கும்படையினர் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நமது முயற்சிக்கு, ராமரின் ஆசீர்வாதங்கள் புதிய சக்தியை அளிக்குமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராம நவமியை முன்னிட்டு தனது X பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ராம பிரானின் ஆசீர்வாதம் என்றும் நமக்கு கிடைக்கட்டும். நீதி மற்றும் அமைதியின் பாதையில் நம்மை வழி நடத்துவதுடன், நம் வாழ்வில் ஞானத்தையும், துணிவையும் பிரதிப்பலிக்கட்டுமென தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘ராவணன்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 2010இல் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ், பிரியாமணி நடிப்பில் வெளியான இப்படம், மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அண்மைக் காலமாக தமிழகத்தில் ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தைக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருப்பூரில் இன்று ராவணன் படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் எந்த பக்கம் திருப்பினாலும் பணப்பட்டுவாடா ஜோராக நடப்பதாக அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பாஜகவினர் ₹500, காங்., கட்சியினர் ₹200 வாக்காளர்களுக்கு கொடுத்து வருகின்றனர். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளதால், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், தேர்தலை புறக்கணிப்பேன் என கூறியுள்ளார்.

மக்களின் ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மக்கள் 100% வாக்களிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறிய அவர், தமிழ்நாட்டில் மட்டுமே மிகவும் அமைதியாக தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். மேலும், மக்கள் அனைவரும் தவறால் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.