India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உத்தராகண்ட் மாநிலத்தில் 4 வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்பட 6 பேர் கொண்ட குழுவினர் தேர்தல் பணியாற்ற உள்ளனர். 60 வாக்காளர்களுக்கும் குறைவாக 4 வாக்குச்சாவடிகள் உத்தராகண்டில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 11,729 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தங்கம் விற்கும் விலைக்கு மிகப்பெரிய தொகையை சேர்த்து வைத்தால் மட்டுமே நகைகளை வாங்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில், நகையை ஆபரணமாக வாங்க நினைக்கும் நடுத்தர குடும்ப மக்கள் சிறு சேமிப்பாக அங்கீகரிக்கப்பட்ட நகைக்கடைகளில் இருக்கும் நகைச் சீட்டுகளில் சேர்ந்து பயன்பெறலாம் என்கிறார்கள் முதலீட்டு ஆலோசகர்கள். கையில் பணமாக சேர்த்து நகை வாங்க நினைக்கும் பட்சத்தில் வேறு செலவுகள் வர வாய்ப்புள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறையைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என்று தொடர் விடுமுறை வருவதால் சென்னையிலிருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். கடைசி நேர நெரிசலைத் தடுக்க முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதற்காக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் சென்னை முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பாதி வெட்டிய காய்கறிகள், பழங்கள் விரைந்து காய்ந்து விடும். இதற்கு காற்றுப் புகாத பாத்திரத்தில் அடைத்து ஃபிரிட்ஜில் வைக்கலாம். காற்றுப் புகாத பாத்திரம் இல்லாத பட்சத்தில், அலுமினியத் தாளை சுற்றி வைக்கலாம். ஆப்பிள், கொய்யா போன்ற பழங்கள் வெட்டிய பிறகு பழுப்பு நிறமாக மாறும். இதைத் தடுக்க வெட்டப்பட்ட பகுதியில் சிறிது எலுமிச்சை சாற்றை தடவலாம். கேரட், ஆப்பிள் போன்றவற்றை நீரில் போட்டு வைக்கலாம்.

கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த தமிழகத் தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்வடைந்தது. இதைத் தொடர்ந்து வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் தேர்தல் முடிந்த கையோடு மலை, குளிர் பிரதேசங்களுக்கு அரசியல் தலைவர்கள் படையெடுக்க உள்ளனர். இதற்காக சுற்றுலாத் தலங்களில் ஓட்டல்கள், நட்சத்திர விடுதிகளை தற்போதே முன்பதிவு செய்துள்ளனராம்.

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அகமதாபாத் மைதானத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய GT வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகின்றனர். குறிப்பாக, சஹா 2, கில் 8, சாய் சுதர்ஷன் 12, மில்லர் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினர். DC தரப்பில் இஷாந்த் ஷர்மா 2, முகேஷ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் தனியார் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர், கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அங்கு தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டார். இன்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கே.கே.நகரில் உள்ள கே.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இளைஞர்கள் மத்தியில் பங்குச்சந்தை மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதை மெய்ப்பிக்கும் விதமாக, மொத்த டீமேட் கணக்குகள் 15.14 கோடியாக உயர்ந்துள்ளது. 2022 – 23ஆம் நிதியாண்டில் 2.67 கோடி புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 3.69 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 31.3 இலட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்கு பூத் ஸ்லிப் அவசியமில்லை. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். பூத் நம்பர், வாக்காளர் நம்பர் ஆகியவற்றை அறிய பூத் ஸ்லிப் தேவைப்பட்டால் அதனை ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். <

மேற்கு வங்க ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் அதிரடியான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் கூச் பெஹர் பகுதிக்கு ஆளுநர் ஆனந்த போஸ், வரும் 18, 19ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும், வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாலும் பயணத்தை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையம் ஆளுநருக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.