India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகம் உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை முதல்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைக்கு நாளை முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உள்பட 102 தொகுதிகளுக்கு நாளை ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

‘ஆங்கிரி ரான்ட்மேன்’ என்ற பெயரில் அறியப்படும் பிரபல யூடியூபர் அப்ரதீப் சாஹா (27) காலமானார். கடந்த சில நாள்களுக்கு முன் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து பல்வேறு உறுப்புகள் செயலிழப்பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு இயக்குநர் ஜெயம் மோகன் ராஜா, தமன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உத்தம வில்லன் படம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்தம வில்லன் லாபகரமான படம் என்று லிங்குசாமி கூறியதாக சிலர் கூறி வருகின்றனர். அது மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய படம். இது கமலுக்கும் தெரியும். நஷ்டத்தை ஈடுகட்ட, மீண்டும் ஒரு படம் நடித்துத் தர அவர் ஒப்புக்கொண்டார். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டது.

பஞ்சாப் – மும்பை அணிகளுக்கு இடையேயான 33ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு மொஹாலியில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 6 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் (MI- 9, PBKS- 8) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னைக்கு எதிரான முந்தைய போட்டியில் தோல்வி அடைந்த மும்பை அணி, வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இன்று வெற்றி பெறப்போவது யார்?

மக்களவைத் தேர்தலில் தபால் வாக்கைச் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஏப்.,18) நிறைவடைகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் தங்களது வாக்கை மாலைக்குள் செலுத்த வேண்டும். அதன்பிறகு தபால் வாக்குப் பெற விண்ணப்பித்திருந்தாலும் வாக்கைப் பெற்று பூா்த்தி செய்து அளிக்க முடியாது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தபால் வாக்கைச் செலுத்த விண்ணப்பங்களை அளித்திருந்தனர்.

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. ரயிலில் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நயினார் நாகேந்திரனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அவரை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் நெல்லையை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ₹400 கோடிக்கு மது விற்கப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதால், நேற்று இரவு 10 மணி (ஏப்.16) முதல் ஏப்.20 காலை 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், வழக்கத்தை விட நேற்று 2.5 மடங்கு அதிகம் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

✍ஒரு மனிதன் கடவுள் என்று அழைப்பதை, இன்னொருவன் இயற்பியல் விதி என்று அழைக்கிறான். ✍அறிவியலானது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இறையியல் கோட்பாடுகளை எதிர்க்கிறது. ✍போர்க்களத்தில் இறப்பதை விட அறியாமைக்கு எதிராக போராடுவது மிகவும் போற்றத்தக்கதாக இருக்கும்.✍இணக்கவாதிகள் நிறைந்த உலகில் சமூக விரோத நடத்தை என்பது புத்திசாலித்தனத்தின் ஒரு பண்பாகும் மதிக்கப்படுகிறது.✍உள்ளுணர்வு என்பது அறிவை மீறிய ஒன்று.

இனி நடக்கும் ஒவ்வொரு போட்டியையும் மிகுந்த கவனத்துடன் விளையாடுவோம் என்று RCB அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஃப்ளவர் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், புள்ளிகள் பட்டியலில் 10ஆவது இடத்தில் நிற்போம் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. இந்த சரிவில் இருந்து மீண்டு வரும் நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. RCB அணியால் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வர முடியும் எனக் கூறினார்.

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, வேலைவாய்ப்பின்மை மிக மோசமான அளவில் உயர்ந்துள்ளதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு இல்லாததால், அரசுப் பணிக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டுமெனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.