India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக செயற்கை இதயத்துடன் 100 நாள் வாழ்ந்து ஒருவர் சாதனை படைத்துள்ளார். நியூ சவூத்வேல்ஸை சேர்ந்த அந்த நபருக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட, சிட்னியில் உள்ள ஹாஸ்பிடலில் டைட்டானியத்தில் உருவாக்கப்பட்ட BiVACOR என்ற செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. அதனுடன் 100 நாள் வரை அவர் கடந்திருக்கிறார். உலகிலேயே 6 பேருக்கு மட்டுமே இதுவரை செயற்கை இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பிரதமர் மோடி இணைந்துள்ளார். இதில் கடந்த 16 ஆம் தேதி அமெரிக்க தொகுப்பாளர் லெக்ஸ் பிரிட்மேனுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். இந்த சமூக ஊடக தளத்தில் இணைந்துள்ள பிரதமர் மோடி, தனது கலந்துரையாடல் வீடியோவை பகிர்ந்த டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தமிழகத்தில் 58,000 அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1.2 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையில், 17ம் தேதி வரையில் 1.28 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. எனினும், கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில், 1.50 லட்சம் மாணவர்கள் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க்கின் கண்டுபிடிப்பான Grok AI, மனிதர்களைப் போலவே பேசி அசத்துகிறது. X தளத்தில் பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் Grok, தமிழ் மொழியிலும் பேசுகிறது; அதுவும் சக நண்பர்களைப் போலவே மாமா, மச்சான் என்று பேசுகிறது. அது மட்டுமல்லாமல், வாய் துடுக்காக பேசும் சில பயனர்களுக்கு அவர்கள் பாணியிலேயே ஆபாசமாகவும் பதில் அளிக்கிறது. AI வளர்ச்சி அபாரமா இருக்கு மக்களே!
மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு ₹1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களின் பெற்றோர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும், அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள், மகளிர் உரிமைத் தொகையும் பெறலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இபிஎஸ்ஸை சந்திப்பதை சில வாரங்களாக தவிர்த்து வந்த செங்கோட்டையன் மீண்டும் இணக்கமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போல் சட்டப்பேரவைக்கு வந்த செங்கோட்டையன், அதிமுக MLAக்களுடன் இணைந்து உணவு சாப்பிட்டுள்ளார். மேலும், பள்ளிக்கல்வித் துறை விவாதத்தின்போது செங்கோட்டையனை பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் இபிஎஸ் வாய்ப்பு கேட்டார்.
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்க BJP அரசு முயற்சி செய்து வருவதாக காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், ஒரு நாள் ஊதியத்தை ₹400ஆக உயர்த்த வேண்டும் எனவும், வேலை நாட்களை 100லிருந்து, 150ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இத்திட்டத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
<<15796105>>நாக்பூரில் நேற்று நடைபெற்ற கலவரத்திற்கு<<>> மையப்புள்ளியாக ஒரு திரைப்படம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ‘சாவா’ என்ற பாலிவுட் திரைப்படத்தில், சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜிக்கும் முகலாய மன்னன் அவுரங்கசீபுக்கும் ஏற்பட்ட மோதல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதனைப் பார்த்த பின்னர்தான், அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன.
விவசாயிகள் அடையாள எண் பெற மார்ச் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தனி அடையாள எண் பெறாவிடில், மத்திய அரசு வழங்கும் ₹6,000 நிதியுதவியை பெற முடியாது. எனவே, ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும், உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் மார்ச் 31க்குள் நிலத்தின் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்து, தனித்துவமான அடையாள அட்டையை பெறவும்.
பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை மோசமாக்கி, பின்னர் அவற்றை தனது நண்பர்களுக்கு விற்பதை போல, ரயில்வே துறையையும் பாஜக அரசு விற்க வாய்ப்புள்ளதாக காங். குற்றஞ்சாட்டியுள்ளது. வந்தே பாரத் ரயிலைக் காட்டி, ரயில்வேயின் மோசமான நிலையை மறைக்க முடியாது எனவும், நாட்டின் உயிர்நாடியான ரயில்வே, தற்போது ICU-வில் இருப்பதாகவும் மக்களவையில் பேசிய காங். எம்பி வர்ஷா சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.