News August 17, 2025

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு ஒரே கட்டணம்

image

விரைவில் பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதைக் கருத்தில்கொண்டு ஆளும் JD(U) – BJP அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் (முதல்நிலைத் தேர்வு) ₹100 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், முதன்மைத் தேர்வுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதுபோன்று செயல்படுத்தலாமா?

News August 17, 2025

BREAKING: பிறந்தநாளில் சின்னம்மாவை இழந்த திருமா

image

இன்று பிறந்தநாள் கொண்டாடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு துக்க நாளாக அமைந்துள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருந்த அவரின் சின்னம்மா செல்லம்மாள் (78) இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் நினைவுகளை கண்ணீருடன் உருக்கமாக பதிவிட்டுள்ள திருமா, சின்னம்மாவின் உடலை பார்க்க விரைந்துள்ளார். அமைச்சர்கள், கட்சியினர் அஞ்சலி செலுத்திய பிறகு அவரின் உடல் இன்று அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது.

News August 17, 2025

சாம்பியன் பட்டம் வென்றார் தான்யா ஹேமந்த்

image

வடக்கு மரியானா தீவுகளில் Saipan International 2025 பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இப்போட்டியானது 15 புள்ளிகள் கொண்ட செட் முறையில் நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தான்யா ஹேமந்த் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். ஜப்பானின் கனே சகாய் உடன் மோதிய அவர், 15-10, 15-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். இவர் மைசூரைச் சேர்ந்தவர். இவருக்கு வாழ்த்து கூறலாமே..

News August 17, 2025

CM டெல்லி செல்வதாக பரவும் போலிச் செய்தி

image

அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று ED ரெய்டு நடத்தியது. இதனையடுத்து, PM மோடியை சந்திக்க, CM ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி செல்லவுள்ளதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில், இதை மறுத்துள்ள TN Fact Check, இந்த செய்தி போலியானது; இதை யாரும் நம்ப வேண்டாம். நேற்று சேலம் சென்ற முதல்வர், இன்று தருமபுரியில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார் என்று விளக்கமளித்துள்ளது.

News August 17, 2025

BCCIக்கு பும்ரா எழுதிய முக்கிய கடிதம்!

image

செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட்டு விடும். ரசிகர்களிடையே பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் நீடிக்கும் நிலையில், அவர் BCCI-க்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதில், ஆசிய கோப்பை தொடரில் விளையாட பும்ரா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிய கோப்பைக்கான பெஸ்ட் பிளேயிங் XI-ஐ கமெண்ட் பண்ணுங்க.

News August 17, 2025

ஜப்பான், இந்தோனேசியாவில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள்!

image

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2:43 மணிக்கு ஜப்பானில் ரிக்டர் அளவில் 5.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தகனாபே என்ற நகரில் இருந்து சுமார் 28 கிமீ தூரத்தில், 10 கிமீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ககோஷிமாவின் நாஸ் பகுதியிலும் ரிக்டர் அளவில் 3.0 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தோனேசியா அருகிலும் ரிக்டர் அளவில் 5.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

News August 17, 2025

துப்பாக்கி 2 கதை இருக்கு: AR முருகதாஸ்

image

தனது படங்களில், ‘துப்பாக்கி’ படத்தின் பார்ட் 2-வை மட்டுமே எடுக்க முடியும் என AR முருகதாஸ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், அப்படத்தில் விஜய் ஆர்மிக்கு மீண்டும் செல்வார், அப்போது அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் (அ) இங்கு மீண்டும் வந்து வேறு ஒரு சம்பவத்தைக் கொண்டு கதையைத் தொடரலாம் என்றார். துப்பாக்கி 2 ஓகே ஆகுமா?

News August 17, 2025

நிறையும் உண்டு குறையும் உண்டு: பிரேமலதா

image

எப்போது கூட்டணி குறித்து கேட்டாலும், ‘ஜனவரியில் கூறுவோம்’ என்பதே தேமுதிகவின் டெம்ப்ளேட் பதில். ஆனால், திமுகவுடன் திடீர் இணக்கம், NDA கூட்டணிக்கு தூது, விஜய்யுடன் நெருக்கம் என அனைத்து தரப்பிலும் தேமுதிக இருப்பைக் காட்டி வருகிறது. இந்நிலையில், திமுக ஆட்சியில் நிறையும் உண்டு குறையும் உண்டு என பிரேமலதா கூறியுள்ளார். இதனால் திமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா என யூகிக்கப்படுகிறது.

News August 17, 2025

அரசியலுக்கு வர வாய்ப்பு: சோனியா அகர்வால்

image

விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு பல சினிமா பிரபலங்களின் அரசியல் விருப்பம் வெளிப்பட்டு வருகிறது. அதில் சிலர் தவெகவிலும் இணைந்தனர். அந்த வகையில், அரசியலில் நுழையும் வாய்ப்பு இருப்பதாக சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார். தவெகவில் இணைவீர்களா எனக் கேட்டதற்கு சிரித்துக் கொண்டே நழுவினார். இருப்பினும், சூழ்நிலையை பொறுத்து முடிவெடுப்பேன் எனவும் அவர் உறுதியளித்தார். சோனியா அரசியலுக்கு வரலாமா?

News August 17, 2025

SPORTS ROUNDUP: 6-வது இடம் பிடித்த குகேஷ்!

image

◆ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக உடற்தகுதியை எட்டினார் சூர்யகுமார் யாதவ்.
◆சின்சினாட்டி ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர்(இத்தாலி)
◆ஆஸி. அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்களை விளாசிய விராட் கோலியின்(12 சிக்ஸர்கள்) சாதனையை டெவால்ட் பிரேவிஸ்(14 சிக்ஸர்கள்) முறியடித்தார்.
◆அமெரிக்காவில் நடைபெற்ற செயின்ட் லூயிஸ் செஸ் போட்டியில் குகேஷ் 18 புள்ளிகளுடன் 6-வது இடம் பிடித்தார்.

error: Content is protected !!