News April 18, 2024

படத் தோல்வியால் அரசியலுக்கு வருகிறாரா விஷால்?

image

2004இல் செல்லமே மூலம் அறிமுகமாகி, 20 ஆண்டுகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் விஷால். 2018இல் வெளியான இரும்புத்திரை, சண்டைக்கோழி 2க்குப் பிறகு வந்த 7 படங்களுக்கும் போதிய வரவேற்பில்லை. இந்தச் சூழ்நிலையில் விரைவில் அவர் கட்சி தொடங்கப்போவதாகக் கூறியுள்ளார். இதைப் பார்த்த திரையுலகத்தினர், படத் தோல்வியால் அரசியலுக்குச் செல்வதாக கூறுகின்றனர். ஆனால் உண்மைக் காரணத்தை விஷாலே அறிவார்.

News April 18, 2024

968 காலிப் பணியிடங்கள்; இன்றே கடைசி நாள்

image

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட 968 இளநிலைப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விருப்பமுள்ளோர் <>ssc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முதல் தாள் தேர்வை ஜூன் 4 முதல் 6க்குள் நடத்தத் தற்காலிகமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தாள்-2 தேர்வுக்கான தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும்.

News April 18, 2024

விஜயகாந்த் மகன் மீது வழக்குப்பதிவு

image

தேர்தல் விதிகளை மீறியதாக விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தனது அண்ணன் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக உரிய அனுமதியின்றி தெப்பக்குளம் அருகில் பிரசாரம் செய்ததாக, தேர்தல் பறக்கும்படையினர் அளித்த புகாரின் பேரில், சண்முக பாண்டியன், நடிகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News April 18, 2024

உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பாரா ரிஷப் பண்ட்?

image

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், ரிஷப் பண்ட் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில், சிறப்பாக பேட்டிங் செய்து வந்த அவர் தற்போது விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தி வருகிறார். குஜராத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில், 2 கேட்ச் மற்றும் 2 ஸ்டம்பிங்குகளைச் செய்துள்ளார். குறிப்பாக, 2 கேட்சுகளையும் அவர் பறந்து பிடித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

News April 18, 2024

மீண்டும் தள்ளிப் போகும் சிம்புவின் ‘STR48’

image

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘STR48’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாகத் தகவல் கசிந்துள்ளது. கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ள சிம்பு, அப்படத்திற்காக 60 நாள் கால் ஷீட் கொடுத்துள்ளார். படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்த பிறகு கமல் படப்பிடிப்பில் இணையவுள்ளார். இப்படத்தை முடித்தப் பிறகே, ‘STR48’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது.

News April 18, 2024

டெல்லி நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் ஆஜர்

image

இந்திய மல்யுத்தச் சங்கத் தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததான புகாரில், அவர் மீது நடவடிக்கை கோரி வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பான வழக்கில் கூடுதல் விசாரணைக் கோரி பிரிஜ் பூஷன் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது ஏப்.26இல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இதனிடையே, வழக்கு விசாரணைக்காக அவர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

News April 18, 2024

மோடி பிரசாரம்; தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வெற்றி தருமா?

image

கடந்த 2019 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் வென்றது. பாஜக 3.66% வாக்குகளை மட்டும் பெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக தனியாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. வழக்கத்தைவிடப் பிரதமர் மோடி அதிக முறை சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். அவரின் பிரசாரம், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வெற்றி ஈட்டித் தருமா? தராதா? என்பது தெரியவில்லை.

News April 18, 2024

ஒருமுறை பட்டனை அழுத்தினால் BJP-க்கு 2 ஓட்டு

image

கேரளாவின் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் விழுந்ததாக புகார் எழுந்துள்ளது. ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகளும், மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், நோட்டாவுக்கு ஒரு வாக்கும் பதிவானதால், தேர்தல் அதிகாரியிடம் காங்., கம்யூ., புகார் அளித்தன. இதுதொடர்பான வழக்கில், புகார் குறித்து விசாரிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News April 18, 2024

மின் சிக்கனம், தேவை இக்கணம்!

image

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் நாளுக்கு நாள் மின்நுகர்வு அதிகரித்து வருகிறது. இந்நேரத்தில் நாம் கண்டிப்பாக மின் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் *வீடுகளில் தேவையில்லாமல் எரியும் மின்விளக்குகளை அணைத்து வைக்கலாம் *ஏசியை 26 டிகிரியில் வைக்கலாம் *பகலில் மின் விளக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் *அலுவலகங்களில் பிரிண்டர், ஸ்கேனர் போன்ற சாதனங்களைப் பயன்பாடு இல்லாத போது அணைத்து வைக்கலாம்.

News April 18, 2024

வாக்களிப்பது குடிமகனின் மிக முக்கியமான கடமை

image

வாக்களிக்கும் உரிமை ஒரு குடிமகனின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பல இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். எனவே, அனைவரும் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, உலகம் கண்டிராத மிகப்பெரிய ஜனநாயக விழாவைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். அனைவரும் வாக்களிப்பீர்!

error: Content is protected !!