India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பிங்க் வாக்குச்சாவடி மையம் சென்னையிலுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களாக மட்டுமே இருப்பார்கள். அனைவரும் பிங்க் வண்ண உடைகளை அணிந்து பணியாற்றுவர். கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ளவர்கள், முதியோருக்கு தனித்தனி வரிசை அமைக்கப்படவுள்ளது.

இத்தனை நாள் பாடுபட்டது பயன் தர, வாக்குப்பதிவு நாளன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும் என்று வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் வாக்குப்பதிவு முடியும் வரை விழிப்புடன் செயலாற்றினால்தான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும் என அறிவுறுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். கடைசியாக அவர் பதிவிட்ட ஒரு போஸ்டுக்கு நிறைய பேர் தவறான மற்றும் ஆபாசமான கமென்ட்களைப் பதிவு செய்ததால், அவர் தனது கணக்கை முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இன்ஸ்டாகிராமில் அவரது கணக்கைத் தேடும்போது வராததால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர், 12 ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்றும், தேர்தல் ஆணையத்தின் செயலி மூலமாக, வாக்குப்பதிவு மையத்தை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் 72.47% வாக்குகள் பதிவானதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 6.14 லட்சம் இருப்பதாகக் கூறிய அவர், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வாகன வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று தெரிவித்தார். மேலும், இலவச வாகன வசதிக்கு ‘1950’ என்ற எண்ணில் அழைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்ட கட்சி காங்கிரஸ் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் பன்முகத்தன்மை, பல மொழிகள், பல கலாசாரம், மாறுபட்ட வரலாறு, மாறுபட்ட உணர்வுகளை ஏற்ற கட்சி காங்கிரஸ் என்றார். ஆனால் பாஜகவோ ஒரே வரலாறு, ஒரே நாடு, ஒரே மொழியை மக்கள் மீது திணிக்க விரும்புகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம். அதன்படி, பான் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வங்கி அல்லது அஞ்சலகச் சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓய்வூதிய ஆவணம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை, அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு, ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

இவிஎம், விவிபேட் செயல்பாடு குறித்த தேர்தல் ஆணையத்தின் தகவலுக்கும், நாடாளுமன்ற நிலைக்குழுவின் தகவலுக்கும் இடையே ஏன் முரண்பாடு உள்ளது. ஒருமுறை பட்டனை அழுத்தினால் 2 வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளதா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, முன்னதாக நடந்த மாதிரி வாக்குப்பதிவு சரியாக நீக்கப்படவில்லை என்றால் மட்டுமே அவ்வாறு நடக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

ரயிலில் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அவரைத் தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி அத்தொகுதி சுயேச்சை வேட்பாளர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில், நயினார் நாகேந்திரன் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் முஸ்தஃபிசூர் கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜலால் யூனுஸ் கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், முஸ்தஃபிசூரின் ஃபிட்னஸ் குறித்து தான் எங்களுக்குக் கவலை. அவர் 100% ஃபிட்டாக இருக்க வேண்டும். CSK அணிக்கு அவருடைய ஃபிட்னஸ் பற்றி எந்தக் கவலையும் இல்லை. வேண்டுமானால் அவரிடமிருந்து CSK வீரர்கள் கற்றுக் கொள்ளட்டும் என விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.